போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்தல்: நேற்று நடைபெற்ற இருவகையான ஆர்ப்பாட்டங்கள்:

March 20, 2021

போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அதிபர்கள், நிர்வாக சங்கங்கள், ஒன்றிணைந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கல்வி அமைச்சின் முன்பாக நேற்று (19) பகல் பேரணியாக வந்தனர். 
அப்போது அவ்விடத்தில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன கல்வி சேவைகள் 
சங்கத்தின் பிரதிநிதிகள் கூடியிருந்தனர். 
பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் அளவுக்கு சென்றது. 
பொலிசாரின் தலையீட்டை தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 இதேவேளை உயர்தரப்பரீட்சை இல்லாமல் நேர்முகப்பரீட்சை மூலம் மாத்திரம் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்க முடியாதா? என்ற அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு எதிரான விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்தல்: நேற்று நடைபெற்ற இருவகையான ஆர்ப்பாட்டங்கள்: போட்டிப் பரீட்சைகளின்றி அதிபர்களை இணைத்தல்: நேற்று நடைபெற்ற இருவகையான ஆர்ப்பாட்டங்கள்: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு:

March 20, 2021

கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக இவ்வருடம் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரையும் பரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஆரம்பமாகி, 
செப்டம்பர் 5 ஆம் திகதி வரையும் ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ளன. 
இம்முறை ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளில், வௌிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 
வௌிநாட்டு பார்வையாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாதென ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் குழுக்களுக்கு ஜப்பான் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு: ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை அனுமதி: Positive ஆவதற்கு முன் இம்ரான் கானும் இதனையே போட்டுக்கொண்டார்:

March 20, 2021

சீனாவினால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான Sinopharm ஐ அவசரத் தேவைக்காக இலங்கையில் பயன்படுத்த ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையினால் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். 
06 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 இதேவேளை தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள 
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதே சீனாவின் தடுப்பூசியையே சில தினங்களுக்கு முன்னர் செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை அனுமதி: Positive ஆவதற்கு முன் இம்ரான் கானும் இதனையே போட்டுக்கொண்டார்: சீனாவின் தடுப்பூசியை பயன்படுத்த இலங்கை அனுமதி: Positive ஆவதற்கு முன் இம்ரான் கானும் இதனையே போட்டுக்கொண்டார்: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

அரச ஊழியர்கள் பலர் அனுமதியின்றி ஊடகத் துறையில் பணி: வெளியான தகவல்:

March 20, 2021

அண்மையில் வெகுசன ஊடக அமைச்சின் கீழ்  ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் பங்குபற்றுதலுடன் வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் நேற்று (19.03.2021) இடம்பெற்றது. 
 குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 
தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தார். Development Division , Fact Check Division , Social Media Division and News Division என தனித்தனியாக பிரிக்கப்பட்டு குறித்த நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகவல் உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணி உடனுக்குடன் தெரியப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
மேலும் அரச திணைக்களங்கள் அவற்றின் தனித்தனியான இணைய பக்கங்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களின் மேம்படுத்தல் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டது. 
 இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் , ஒரு நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டின் முக்கிய தூணாக விளங்கும் ஊடகத்துறையினர் சரியான தகவல்களை முறையான வழிமுறையூடாக உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தல் அவசியமானதென குறிப்பிட்டார். ஆனால் தற்போது அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அரச தொலைக்காட்சி , பத்திரிகைகள் போன்றவற்றில் பிரசுரிக்கப்படுவதில்லை எனவும் பல்வேறுபட்ட செய்திகள் முன்னுக்கு பின் முரணாக திரிவுபடுத்தி பிரசுரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 
மேலும் இரு முக்கிய விடயங்களை வெகுசன ஊடகத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்த ஆளுநர் தெரிவிக்ககையில், 
சமூக வலைத்தளங்களில் தவறான மற்றும் வதந்திச்செய்திகள் விரைவாக பகிரப்படுவதாகவும் அதனால் வெளிமுதலீட்டாளர்கள் பலர் தமது முதலீடுகளை இலங்கையில் முதலிட தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்தார். 
அடுத்து மிக முக்கியமாக அரச உத்தியோகத்தர்கள் பலர் அவர்களின் திணைக்கள தலைவர்களின் அனுமதியின்றி ஊடகத்துறையில் பணிபுரிவதாகவும் குறித்த ஊடக நிறுவனங்கள், ஊடக அமைச்சிரினால் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி தான் அறிந்திருக்கவில்லை எனவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 
 அரசாங்கத்தின் வடக்கு மாகாணத்திற்குரிய அபிவிருத்தி தொடர்பான தகவல்கள் அரச ஊடகங்களால் கூட பிரசுரிக்கப்படுவதில்லை என பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் அவ் விடயம் தொடர்பில் தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பததாக கூறினார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
அரச ஊழியர்கள் பலர் அனுமதியின்றி ஊடகத் துறையில் பணி: வெளியான தகவல்: அரச ஊழியர்கள் பலர் அனுமதியின்றி ஊடகத் துறையில் பணி: வெளியான தகவல்: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

48 வயதான பெண் ஆசிரியரின் சாதனை...

March 20, 2021

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கிலோமீட்டர் நீளமான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். 
சியாமளா கோலி என்ற பெயருடைய இந்த ஆசிரியை இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். 
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:10 ற்கு ஆரம்பித்து மாலை 5.50க்கு இந்த சாதனையை நிறைவு செய்துள்ளார். 
பாறைகள் மற்றும் ஆபத்தான ஜெலி மீன்கள் நிறைந்த கடற்பகுதியும் 
இந்த பாக் ஜலசந்தியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக ஜலசந்தி கடற்பகுதியை 1954ல் நீந்தி கடந்தார். 
சியாமளா கோலி ஆசிரியை பாக் ஜலசந்தியை கடந்த 13வது நீச்சல் வீரராகவும் உலகளவில் 2வது வீராங்கனையாகவும் இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


48 வயதான பெண் ஆசிரியரின் சாதனை... 48 வயதான பெண் ஆசிரியரின் சாதனை... Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

19-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

March 19, 2021

19-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 19-03-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
19-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 19-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on March 19, 2021 Rating: 5

நாட்டில் கிராம சேவையாளர்கள் 2000 பேருக்கு வெற்றிடம்: உடனடியாக நேர்முகத் தேர்வு:

March 19, 2021

நாட்டில் கிராம சேவையாளர்களுக்கு சுமார் 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M.சித்ராநந்த தெரிவித்துள்ளார். 
இவற்றை நிரப்ப உடனடியாக 
மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கிராம சேவையாளர்கள் 2000 பேருக்கு வெற்றிடம்: உடனடியாக நேர்முகத் தேர்வு: நாட்டில் கிராம சேவையாளர்கள் 2000 பேருக்கு வெற்றிடம்: உடனடியாக நேர்முகத் தேர்வு: Reviewed by irumbuthirai on March 19, 2021 Rating: 5

இன, மத ரீதியான கட்சிகளுக்கு அனுமதி இல்லை?

March 19, 2021

மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். 
இவ்வாறு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது 
தொடர்பிலும் கால அவகாசம் வழங்குவது தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். 
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய ஆணைக்குழுக்கள் என்பன இவ்வாறான அரசியல் கட்சிகளின் பதிவு தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்தே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன, மத ரீதியான கட்சிகளுக்கு அனுமதி இல்லை? இன, மத ரீதியான கட்சிகளுக்கு அனுமதி இல்லை? Reviewed by irumbuthirai on March 19, 2021 Rating: 5

வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் முறைகள்

March 19, 2021

வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பூசியைப் பெறாமல் நாட்டிற்கு வருவோர்... 
இவர்கள் 07 நாட்கள் மாத்திரமே ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர். இவர்களுக்கு 1வது மற்றும் 
7வது நாளில் பிசிஆர் செய்யப்படும். அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் ஏழாவது நாள் இவர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யலாம். எஞ்சிய நாட்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் நிறைவு செய்ய வேண்டும். 

கொரோனா தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டிற்கு வருவோர்... 
இவர்கள் விமான நிலைய வைத்திய அதிகாரியிடம், தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழின் முதற்பிரதியை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், அவை ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் காணப்பட்டால் உறுதிப்படுத்தப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு சான்றிதலை சமர்ப்பிக்க வேண்டும். 
இவர்களை அரச அதிகாரிகள் தனிமைப்படுத்தல் ஹோட்டல்கள் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். 

ஹோட்டல் அல்லாத பொதுவான தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றவர்கள்... 
இவர்கள் முலாவது நாளிலும் 10 ஆவது நாளிலும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இரண்டு பரிசோதனைகளின் போதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால் 10 ஆவது நாளில் தனிமைப்படுத்தலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் எஞ்சிய நான்கு நாட்களும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.
வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் முறைகள் வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் முறைகள் Reviewed by irumbuthirai on March 19, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஏப்ரல் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்)

March 19, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2021 ஏப்ரல் மாதத்தில் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
Examinations calendar for the month of April, 2021. 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 ஏப்ரல் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 ஏப்ரல் மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on March 19, 2021 Rating: 5

15-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

March 18, 2021

15-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

15-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 15-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on March 18, 2021 Rating: 5

Vacancies: Rajarata University of Sri Lanka

March 18, 2021

Vacancies: Rajarata University of Sri Lanka. 

Management Assistant (Book keeping) 
Technical Officer (ICT) 
Technical Officer (Audio Visual) 
Project Manager 
Medical Officer  

Age limit: 18-45. 
Closing date: 25-03-2021. 
See the details below.


Vacancies: Rajarata University of Sri Lanka Vacancies: Rajarata University of Sri Lanka Reviewed by irumbuthirai on March 18, 2021 Rating: 5

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக புதிய முறையில் வெளியிடப்பட்ட முத்திரை

March 17, 2021

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக டிஜிட்டல் முறையில் அதாவது QR குறியீட்டுடனான முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. 
இது தொடர்பான நிகழ்வு நேற்று (16) ஊடக அமைச்சில் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் இடம்பெற்றது. 
 இதற்கமைவாக 25 ரூபா பெறுமதியுடைய முத்திரையொன்று QR குறியீட்டுடன் நேற்று வெளியிடப்பட்டது. இந்த QR குறியீட்டு முத்திரை தொடர்பாக 
மேலதிக தகவல்களை பெறுவதற்கு அதன் QR குறியீட்டை ஸ்கேன் செய்து முத்திரை திணைக்களத்தின் இலங்கை தபால் இணையதளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். 
இதேவேளை பாதுகாப்பு அடையாளத்துடன் கூடிய ரூ. 500 பெறுமதியுள்ள புதிய தபால் முத்திரையொன்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் இங்கு வெளியிடப்பட்டது. இந்த முத்திரையில் ஒரு பாதுகாப்பு குறியீடு மறைந்திருப்பதாகவும், எவரேனும் ஒருவர் அதனை முறைகேடாக பயன்படுத்துபவார்களாயின் அது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க இதன்போது தெரிவித்தார். 


எமது நாட்டு வரலாற்றில் முதலாவது முத்திரை 1857ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி வெளியிடப்பட்டது. அத்துடன் இலங்கை தபால் திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏராளமான நினைவு முத்திரைகளை வெளியிட்டுள்ளது என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக புதிய முறையில் வெளியிடப்பட்ட முத்திரை இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக புதிய முறையில் வெளியிடப்பட்ட முத்திரை Reviewed by irumbuthirai on March 17, 2021 Rating: 5

Vacancies: National Livestock Development Board

March 17, 2021

Vacancies: National Livestock Development Board. 
தேசிய கால்நடை அபிவிருத்தி சபையில் பதவி வெற்றிடங்கள். 
Closing date: 26-03-2021. 
See the details below.


Vacancies: National Livestock Development Board Vacancies: National Livestock Development Board Reviewed by irumbuthirai on March 17, 2021 Rating: 5

Vacancy (Typist - Gr.111) - State Mortgage & Investment Bank

March 17, 2021

Vacancy (Typist - Gr.111) - State Mortgage & Investment Bank. 
Educational qualification: G.C.E. (O/L) 
Age limit: Below 40. 
Closing date: 22-03-2021 
See the details below.


Vacancy (Typist - Gr.111) - State Mortgage & Investment Bank Vacancy (Typist - Gr.111) - State Mortgage & Investment Bank Reviewed by irumbuthirai on March 17, 2021 Rating: 5

இலங்கையர்களுக்கு ஜப்பானில் இலவச வேலைவாய்ப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு:

March 17, 2021

ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 
நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இது தொடர்பாக தெளிவூட்டும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 
20 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெறவுள்ளது. 
NAT அல்லது JLPT பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் இலவசமாக தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 27 89 367 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு ஜப்பானில் இலவச வேலைவாய்ப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு: இலங்கையர்களுக்கு ஜப்பானில் இலவச வேலைவாய்ப்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on March 17, 2021 Rating: 5

முதன் முறையாக முஸ்லிம் அல்லாதவரின் கொரோனா உடலும் நல்லடக்கம்....

March 16, 2021

தற்போது கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை என்ற பிரதேசத்தில் முதன்முறையாக முஸ்லிமல்லாத ஒருவரின் கொரோனா உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
ஜா-எலையைச் சேர்ந்த 60வயதான கத்தோலிக்க பெண் ஒருவரின் 
உடலே இவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மார்ச் 8ஆம் திகதி மரணமடைந்துள்ளார். 
இவரது உடல் கடந்த சனிக்கிழமை (13) குறித்த பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக முஸ்லிம் அல்லாதவரின் கொரோனா உடலும் நல்லடக்கம்.... முதன் முறையாக முஸ்லிம் அல்லாதவரின் கொரோனா உடலும் நல்லடக்கம்.... Reviewed by irumbuthirai on March 16, 2021 Rating: 5

12-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

March 16, 2021

12-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 12-03-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
12-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 12-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on March 16, 2021 Rating: 5

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு)

March 16, 2021

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம், மனை பொருளியல், அழகியல் பாடங்களுக்கு (சித்திரம், சங்கீதம்,நடனம்) ஆகிய பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 - 1(இ) தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போட்டிப் பரீட்சை-2021 

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம், மனை பொருளியல், அழகியல் பாடங்களுக்கு (சித்திரம், சங்கீதம்,நடனம்) ஆகிய பாடங்களுக்காக இலங்கை ஆசிரிய சேவையில் 3 - 1(இ) தரத்திற்கு டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக தகைமைப் பெற்ற ஆண், பெண் இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
  • பரீட்சைக் கட்டணம் :  ரூ. 600.00 
  • பரீட்சை நடைபெறும் காலம்: 2021 ஜூன். 
  • வயது எல்லை : 18-35. 
  • Online விண்ணப்பத்திற்கான இறுதி தினம் - 31-03-2021 மதியம் 12.00 மணி வரை. 
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறை பற்றி மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை- 2021 (Online விண்ணப்பம் உட்பட சகல விபரங்களும் இணைப்பு) Reviewed by irumbuthirai on March 16, 2021 Rating: 5

பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 26 ஆம் திகதி முதல்...

March 15, 2021

சுமார் 20 வருடங்கள் பாடசாலை பாடவிதானங்களில் சரியாக கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய பாடவிதானங்களின் உள்ளடக்கம் நாட்டின் பொருளாதார தேவைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களுடன் பொருத்தமுடையதாக இல்லை. எனவே பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 
எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியிலும் மாத்தறை - ராகுல கல்லூரியிலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிடங்களை பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
தகவல் தொழில்நுட்பம், கணனி தொழில்நுட்பம் என்பன பாடவிதானங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக பாடநெறிகள் நவீன தொழில் சந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் கட்டமைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 26 ஆம் திகதி முதல்... பாட விதானங்களைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டம் 26 ஆம் திகதி முதல்... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு...

March 15, 2021

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 123 தேசிய பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 673 தேசிய பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாக இருக்கிறது. 
 இதேவேளை இந்த வேலைத்திட்டத்திற்கான பாடசாலைகளை நிர்ணயிக்கும் 
பொறுப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு... தேசிய பாடசாலைகளை தெரிவு செய்யும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

1997 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சன்மானம்....

March 15, 2021

சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காடழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குவோர்க்கு சன்மானம் வழங்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் 
ஈடுபடுவோருக்கு எதிரான சுற்றிவளைப்புகளை கடுமையாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1997 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சன்மானம்.... 1997 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குவோருக்கு சன்மானம்....  Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு....

March 15, 2021

தாம் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா தமது பிரத்தியேக Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
“வேலை செய்ய முடியாத தூதுவர்” என்ற தலைப்பில் 
பதிவொன்றை இட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 
12 இலங்கை மீனவர்கள் தற்போது மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கைது தொடர்பில் மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. 
ஆனால் தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, பொலிஸ் அதிகாரி ஒருவரினூடாக ஒரே ஒரு நாள் மாத்திரம் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது என தெரிவித்த அவர் தாம் ஒரு திறனற்ற, தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் உத்தியோகபூர்வமற்ற முறையில் செயற்பட மியன்மாரில் தமக்கு அறிமுகமானவர்கள் எவரும் இல்லை எனவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
எவ்வாறாயினும், மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் வரை மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர்களின் பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாடு இடம்பெறும் வரையிலும் தாம் பதவியில் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... இராஜினாமா செய்யவிருக்கும் தூதுவர்.... தோல்வியுற்ற தூதுவர் என உணர்வதாகவும் தெரிவிப்பு.... Reviewed by irumbuthirai on March 15, 2021 Rating: 5

ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்:

March 14, 2021

2021 ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் பிறக்கும் சகல குழந்தைகளுக்கும் புதிய முறையிலான பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் நாயகம் W.M.M.B. வீரசேகர தெரிவித்துள்ளார். 
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் இந்த மாற்றத்தை செய்யவுள்ளதாக தெரிவித்தார். 
 இதற்கமைய, ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான 
அனைத்து தரவுகளும் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்: ஜூலை 01 முதல் பிறக்கும் குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழில் ஏற்படும் மாற்றம்: Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5

கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை

March 14, 2021

நாட்டில் கணினி தொழில்நுட்பம் தொடர்பான தொழில்களில் சுமார் 40,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். 
எனவே இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் (The Open University of Sri Lanka)
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இந்த மாதத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை கணினி துறையில் 40,000 வெற்றிடங்கள்... திறந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5

இலங்கை தேசியக் கொடி விவகாரம்.... Amazon எடுத்த நடவடிக்கை...

March 14, 2021

இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை கால்மிதிகளில் பயன்படுத்தியமை தொடர்பில் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 
அமசோனில் (Amazon) இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்திய 
நிறுவனத்திற்கு தூதரகத்தினால் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து குறித்த விளம்பரம் தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேசியக் கொடி விவகாரம்.... Amazon எடுத்த நடவடிக்கை... இலங்கை தேசியக் கொடி விவகாரம்.... Amazon எடுத்த நடவடிக்கை... Reviewed by irumbuthirai on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.