முதல் முறையாக முடக்கப்பட்டது துருக்கி!

April 30, 2021

ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றாளர்கள் திடீரென அதிகரித்ததை அடுத்து ஏப்ரல் 29 முதல் துருக்கி முதன்முறையாக முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் மே 17 வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அங்கு இதுவரை 4.7 மில்லியனுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 39,000 ற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரண வீதம் 0.8% ஆகும். 
கடந்த ஆண்டு மாத்திரம் சுற்றுலாத்துறை 70 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 
எவ்வாறாயினும் அங்குள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பு காரணமாக நிலைமை இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் முறையாக முடக்கப்பட்டது துருக்கி! முதல் முறையாக முடக்கப்பட்டது துருக்கி! Reviewed by irumbuthirai on April 30, 2021 Rating: 5

அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் முறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை (சுற்றறிக்கை இணைப்பு)

April 28, 2021

தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்தனசிறியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 
இதேவேளை ஏற்கனவே வெளியிடப்பட்ட 02/2021 இலக்கம் கொண்ட அரச சேவையை தடையின்றி நடந்து செல்லல் என்ற தலைப்பில் வெளியான சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஊழியர் ஒருவருக்கு வாரத்துக்கு 02 நாட்கள் என்ற அடிப்படையில் மாதத்திற்கு உயர்ந்த பட்சமாக 08 நாட்கள் வேலைக்கு சமூகமளிக்காதிருக்கலாம். இதனை அவர்களது சொந்த லீவில் கழிக்கக் கூடாது எனவும் புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 வேலைக்கு வராத நாட்கள் வீட்டிலிருந்தே இணையம் மூலமாக வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். 
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறாத ஊழியர் ஒருவர் வேறு காரணங்களுக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் குறித்த காலத்தை சம்பளத்துடனான விடுமுறையாக கருத வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் முறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை (சுற்றறிக்கை இணைப்பு) அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் முறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார் ஹரின் பெர்னாண்டோ!

April 28, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார் ஹரின் பெர்னாண்டோ! அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார் ஹரின் பெர்னாண்டோ! Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

அதிகளவான கர்ப்பிணிகளை கடுமையாகத் தாக்கும் தற்போதைய கொரோனா..

April 28, 2021

தற்போது பரவும் கொரோனா வைரஸ் நாட்டில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விசேடமாக அவர்களின் நுரையீரலுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விஷேட வைத்தியர் மயுரமான தெவொலகே தெரிவித்துள்ளார். 
தற்போதைய நிலையில் அதிகளவான கர்ப்பிணித் தாய்மார்கள் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகளவான கர்ப்பிணிகளை கடுமையாகத் தாக்கும் தற்போதைய கொரோனா.. அதிகளவான கர்ப்பிணிகளை கடுமையாகத் தாக்கும் தற்போதைய கொரோனா.. Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

இந்திய தடுப்பூசி: இன்று முதல் ஆரம்பமாகிறது 2ஆம் சொட்டு வழங்கல்:

April 28, 2021

இந்திய தடுப்பூசியான Oxford Astra Zeneca தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு இன்று (28) முதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்காக மூன்றரை இலட்சம் தடுப்பூசிகள் இருப்பதாகவும் மே மாத இறுதி வரையில் அவை போதுமானது எனவும் அவர் தெரிவித்தார். 
இதன் முதலாவது சொட்டு பெற்றுக்கொண்ட ஒழுங்கிலேயே 2வது சொட்டும் வழங்கப்படும் எனவும் அந்த அடிப்படையில் சுகாதார தரப்பினருக்கு முதலில் அதை வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய தடுப்பூசி: இன்று முதல் ஆரம்பமாகிறது 2ஆம் சொட்டு வழங்கல்: இந்திய தடுப்பூசி: இன்று முதல் ஆரம்பமாகிறது 2ஆம் சொட்டு வழங்கல்: Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்ட மற்றுமொரு பரீட்சை

April 28, 2021

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படவிருந்த சகல மொழித் தேர்ச்சி பரீட்சைகள் மற்றும் குறித்த திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய பரீட்சைகள் என்பன காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 
குறித்த பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட மற்றுமொரு பரீட்சை ஒத்திவைக்கப்பட்ட மற்றுமொரு பரீட்சை Reviewed by irumbuthirai on April 28, 2021 Rating: 5

மூடப்படும் அரச வெளியீட்டு விற்பனை கருமபீடம்!

April 27, 2021

அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளாகத்தில் செயற்படும் அரச வெளியீட்டு அலுவலகத்திற்குரிய விற்பனை கருமபீடம் நாளை (28) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படும் அரச வெளியீட்டு விற்பனை கருமபீடம்! மூடப்படும் அரச வெளியீட்டு விற்பனை கருமபீடம்! Reviewed by irumbuthirai on April 27, 2021 Rating: 5

சகல பாடசாலைகளையும் மூடல்: கட்டங்கட்டமாக வந்த அறிவிப்புகள் அமைச்சரவையில் முழுமையானது:

April 27, 2021

இம்மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 
இம்மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அத்துடன் சகல தனியார் வகுப்புகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
ஏற்கனவே வலய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் பாடசாலைகளை 
மூடுவதற்கு சம்பந்தப்பட்ட ஆளுநர்களால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் இல்லமும் அறிவித்துள்ளது.
சகல பாடசாலைகளையும் மூடல்: கட்டங்கட்டமாக வந்த அறிவிப்புகள் அமைச்சரவையில் முழுமையானது: சகல பாடசாலைகளையும் மூடல்: கட்டங்கட்டமாக வந்த அறிவிப்புகள் அமைச்சரவையில் முழுமையானது: Reviewed by irumbuthirai on April 27, 2021 Rating: 5

2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு)

April 27, 2021

இந்த வருடத்திற்கான (2021) ஆஸ்கர் (Oscar) விருது வழங்கும் விழா அமெரிக்கா, லொஸ் ஏஞ்சலிஸில் இன்று (26) நடைபெற்றது. 
விருதுகளின் விபரம் பின்வருமாறு: 
 • சிறந்த திரைப்படம்: நோமேட்லேண்ட் (Nomadland) 
 • சிறந்த இயக்குனர்: Chloe Zhao என்ற பெண். (Nomadland திரைப்படத்துக்காக) 
 • சிறந்த நடிகை: Frances McDormand (திரைப்படம் - Nomadland) 
 • சிறந்த நடிகர்: 83 வயதாகும் Anthony Hopkins (திரைப்படம் - The Father) 
 • சிறந்த துணை நடிகர்: Daniel Kaluuya (திரைப்படம் - Judas and the Black Messiah) 
 • சிறந்த துணை நடிகை: Yuh Jung Youn (திரைப்படம் - Minari) 
 • சிறந்த தழுவல் திரைக்கதை: The Father திரைப்படம். 
 • சிறந்த சர்வதேச முழுநீளப் படம்: Another Round திரைப்படம். 
 • சிறந்த முழுநீள அனிமேஷன் படம்: Soul திரைப்படம். 
 • சிறந்த அனிமேஷன் குறும்படம்: If Anything Happens, I Love You என்ற படம். 
 • சிறந்த ஆவணப்படம்: My Octopus Teacher. 

 • சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: Another Round (டென்மார்க்) 
 • சிறந்த ஆவண குறும்படம்: Colette 
 • சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம்: Two Distant Strangers 
 • சிறந்த ஒளிப்பதிவாளர்: Erik Messerschmidt (Mank) 
 • சிறந்த படத் தொகுப்பாளர்: Mikkel EG Nielsen (Sound of Metal) 
 • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: Andrew Jackson, David Lee, Andrew Lockley and Scott Fisher 
 • சிறந்த திரைக்கதை: Emerald Fennell (Promising Young Woman) 
 • சிறந்த பின்னணி இசை: Trent Reznor, Atticus Ross and Jon Batiste (Soul) 
 • சிறந்த பாடல்: Fight For You (Judas and the Black Messiah) 
 • சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: Sergio Lopez-Rivera, Mia Neal and Jamika Wilson (Black Bottom) 
 • சிறந்த ஆடை வடிவமைப்பு: Ma Rainey’s Black Bottom 
 • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: Donald Graham Burt and Jan Pascale (Mank) 
 • சிறந்த ஒலி அமைப்பு: Nicolas Becker, Jaime Baksht, Michelle Couttolenc, Carlos Cortés and Phillip Bladh (Sound of Metal) 
சிறப்பம்சங்கள்:
 • ஒஸ்கரின் 93 வருட வரலாற்றில் பெண் இயக்குநருக்கு 2வது தடவையாக சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 • Nomadland திரைப்படம் மூன்று முக்கிய விருதுகளுக்கு காரணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 • 83 வயதான ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு) 2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on April 27, 2021 Rating: 5

ஏப்ரல் 30 வரை மூடப்படும் பாடசாலைகள்...

April 26, 2021

இம்மாதம் (ஏப்ரல்) 30 ஆம் திகதி வரை மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள் மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அரசாங்கத்தின் இந்த அறிவித்தலை தொடர்ந்து குறித்த இரு மாகாணங்களிலும் உள்ள கத்தோலிக்க பாடசாலைகள் அனைத்தும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மூடப்படும் என கத்தோலிக்க ஆயர் இல்லமும் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 30 வரை மூடப்படும் பாடசாலைகள்... ஏப்ரல் 30 வரை மூடப்படும் பாடசாலைகள்... Reviewed by irumbuthirai on April 26, 2021 Rating: 5

ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்...

April 26, 2021

தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க தீர்மானித்திருந்த போதும் தற்போது அது 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்... ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்... Reviewed by irumbuthirai on April 26, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை: கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு:

April 26, 2021

நாளை (27) முதல் ஆரம்பமாக இருந்த விளையாட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை மற்றும் செயல் முறை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை: கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு: ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை: கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 26, 2021 Rating: 5

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் ஒரே தீர்வு...

April 25, 2021

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்க வேண்டும் என சிலர் யோசனை முன்வைத்தாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அது பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் எனவே இதற்கான ஒரே தீர்வு தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
தடுப்பூசியை ஏற்றுவதற்கான திட்டமிடப்பட்ட பொறிமுறை அரசாங்கத்திடம் காணப்படுகிறது. உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டு வரப்படும். 
எனவே மக்கள் இதற்கு ஒத்துழைப்பதோடு தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் ஒரே தீர்வு... கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் ஒரே தீர்வு... Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

இந்திய புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

April 25, 2021

இந்திய அரசால் வழங்கப்படும் கீழ்வரும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்ப திகதி  நீடிக்கப்பட்டுள்ளது. 
1) நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்:பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/மருத்துவ உதவி & ஆடை வடிவமைப்பு கற்கை நெறி தவிர்ந்தவை) அனைத்து பட்டப்படிப்பு (Undergraduate) கற்கைநெறிகளை இந்தத் திட்டம் உள்ளடக்குகின்றது. 
 2) ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டம்: B.E அல்லது B.Tech பட்டப் படிப்புகளுக்கு வழிசமைக்கும் ‘தகவல் தொழில்நுட்பத் துறைகளிலான பட்டப்படிப்புக் கற்கைநெறிகள். 
3) மௌலானா ஆசாத் புலமைப் பரிசில் திட்டம்: பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளியல், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை உட்பட (மருத்துவம்/துணைமருத்துவம் & ஆடை வடிவமைப்பு கற்கைநெறி தவிர்ந்தவை) முதுமாணிப் பட்டக் (Masters Degrees) கற்கைகளை உள்ளடக்குகிறது. எவ்வாறாயினும், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 
4) பொதுநலவாய புலமைப் பரிசில் திட்டம்: மருத்துவம்/ துணைமருத்துவம் & ஆடை வடிவமைப்புக் கற்கை நெறிகள் தவிர்த்து அனைத்துத் துறைகளின் கலாநிதிப் பட்டப் படிப்புக்கள் (PhD Degrees), 
மேற்படி கற்கை நெறிகள் 2021 மே 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னைய இறுதி திகதியான 2021 ஏப்ரல் 20 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் புதிய இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும். 
தேவையான தகவல்களை உயர் கல்வி அமைச்சின் www.mohe.gov.lk எனும் இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். 
இந்த கற்கை நெறிகளுக்கான தகைமை மற்றும் தெரிவு செய்தல் நடைமுறை தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் உயர் கல்வி அமைச்சு அல்லது இந்திய உயர் ஸ்தானிகராலயம் - கொழும்பு ஆகியவற்றை அணுக முடியும். 
 இந்திய உயர் ஸ்தானிகராலயம் 
கொழும்பு 
23 ஏப்ரல் 2021 
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
இந்திய புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு! இந்திய புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்!

April 25, 2021

உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். 
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்! மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பாடசாலைகள்! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்ற அரச ஊழியர்!

April 25, 2021

அரச ஊழியர் ஒருவர் வேலைக்குச் செல்லாமலேயே 15 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வந்த சம்பவம் இத்தாலியில் பதிவாகியுள்ளது. 
 மருத்துவமனையில் 2005 ஆம் ஆண்டு பணிக்கு அமர்த்தப்பட்ட குறித்த ஊழியர் அன்றிலிருந்தே வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். 
தனக்கு எதிராக புகார் செய்யவும் கூடாது என முகாமையாளரையும் மிரட்டியிருக்கிறார். அதற்குப் பின்னர் 
வந்த முகாமையாளர் குறித்த ஊழியர் ஒருவர் வேலைக்கு வராதது பற்றி கண்டுகொள்ளவே இல்லை. 
 தற்போது இது தொடர்பான நீண்ட விசாரணை இடம்பெற்று வருகிறது. ஊழியருக்கு எதிராகவும் அவரைக் கவனிக்காமல் இருந்த 06 முகாமையாளர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. 
இத்தாலியில் இதுவரை யாரும் இவ்வளவு காலம் வேலைக்கு செல்லாமல் ஏமாற்றவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்ற அரச ஊழியர்! 15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெற்ற அரச ஊழியர்! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது கண்டுபிடிப்பு!

April 25, 2021

இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்த புதிய திரிபானது சிரேஷ்ட பிரஜைகள் மட்டுமன்றி இளைஞர்களையும் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Dr. அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 
இதேவேளை தற்போதைய புதிய திரிபானது காற்றின் மூலமும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 
 மேலும் இதற்கு முந்தைய திரிபு 01 அல்லது 02 நபர்களுக்கு பரவக்கூடியது என்பதுடன் புதிய திரிபானது ஒருவரிலிருந்து 5-6 பேர் வரை பரவக்கூடியது என பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது கண்டுபிடிப்பு! இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பரீட்சை எழுதிய நபர்!

April 25, 2021

மன்னார், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட மின்சார சபை ஊழியர் ஒருவர் தனது பதவி உயர்வுக்கான பரீட்சை ஒன்றை தனிமைபடுத்தபட்ட இடத்திலேயே எழுதியுள்ளார். 
இவர் இந்த பரீட்சைக்கு யாழ்ப்பாணத்திலேயே தோற்ற வேண்டியிருந்தது. 
ஆனால் இவரின் நிலையை கருத்தில் கொண்டு துரித 
முயற்சிகளை மேற்கொண்ட மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் மின்சார சபை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் விளைவாக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பரீட்சை எழுதிய நபர்! சுய தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பரீட்சை எழுதிய நபர்! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகளில் துரித என்டிஜன் பரிசோதனை!

April 25, 2021

மேல் மாகாண பாடசாலைகளில் உடனடி என்டிஜன் பரிசோதனைகளை ராகமை லீசன்ஸ் வைத்தியசாலை, மனுசத் தெரணவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
 மஹரகம ஜனாதிபதி வித்தியாலயத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எழுமாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டு என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு மேல் மாகாண ஏனைய பாடசாலைகளிலும் எழுமாற்றாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
மேல் மாகாண பாடசாலைகளில் துரித என்டிஜன் பரிசோதனை! மேல் மாகாண பாடசாலைகளில் துரித என்டிஜன் பரிசோதனை! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்!

April 25, 2021

Covid வைரஸ் பரவி வரும் நிலையில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார். 
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தற்போதைய வழிக்காட்டல்களை அரச நிறுவனங்களில் 
எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
கொரோனா வைரஸ் பரவலின் 3வது அலையை அடிப்படையாக கொண்டு அடுத்த மாதம் (மே) 31ஆம் திகதி வரை பொதுவான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய விதம் குறித்து சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் வழிக்காட்டல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்! அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5

தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்... படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன்

April 25, 2021

நேற்று (24) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியால தடுப்புக் காவலில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்புக்காவல் உத்தரவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார். 
இதேவேளை கைது செய்யப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் ஃபேஸ்புக் காணொளியில் கருத்து தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன், 
சபாநாயகரின் முன் அனுமதியோ கைது செய்வதற்கான உத்தரவோ (Warrent) ஒன்றும் இல்லாமல் திடீரென இவர்கள் இந்த அதிகாலை வேளையில் வந்து இருப்பதாக தெரிவித்திருந்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
இந்த நாட்டின் ஜனநாயக கட்சி ஒன்றின் தலைவர். 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் 169 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட கட்சி. ஒரு சமூகத்தின் அல்லது சமூக கட்சியின் தலைவர். எந்த ஒரு குற்றமும் செய்யாத என்னை இந்த நடுச் சாமத்தில் வந்து கூட்டிக்கொண்டு போவது அரசியல் பழிவாங்கலாகவே கருதுகிறேன். சமூகத்துக்கு செய்த அடக்குமுறையாக, சமூக குரலை நசுக்குவதற்காக சமூகம் பேசக்கூடாது என்பதற்காக செய்த பெரிய சதியாக இதைப் பார்க்கிறேன். 
இது ரமலான் மாதம். எங்கள் எல்லோரையும் படைத்த அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவன்தான் எல்லோரையும் ஆட்சி செய்பவன். 
இந்த மக்களிடம் நான் வேண்டிக்கொள்வது... 
நீங்கள் எல்லோரும் அல்லாஹ்விடம் கையேந்துங்கள். 200 மையத்துகளை எரித்து எப்படி சந்தோசம் கொண்டாடினார்களோ அதேபோன்றுதான் இன்று என்னையும் கைது செய்கிறார்கள். எந்த ஒரு குற்றமும் நான் செய்யவில்லை. என்னென்ன பொய்களை சொல்லி கொண்டுபோய் என்னை தண்டிப்பதற்கான சதிகளை செய்கிறார்களோ தெரியவில்லை. 
சமூகத்துக்காக பேசிய ஒரே காரணத்திற்காக ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவரை இந்த நடுச்சாமம் மூன்று மணிக்கு தூங்கி கொண்டு இருக்கும் போது... நான் நோன்பாளி என்ற வகையில் நோன்பைத் திறந்து தராவீஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்த போது நடுச்சாமத்தில் வந்து கூட்டிக்கொண்டு போகிறார்கள். 
எனது மனைவி கேட்டார்... ஏன் காலையில் வந்து கூட்டிச் செல்லலாம் தானே என்று... இல்லை அவசரமாக கூட்டி செல்ல வேண்டும் என்றனர். சரி சபாநாயகரின் அனுமதியாவது இருக்கிறதா? என்று கேட்டார். அதுவும் இல்லை. 
இது பொலிஸின்... இந்த அரசாங்கத்தின் அராஜகம். 100 குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. இந்த நடுச்சாமம் வீட்டை உடைத்து கொண்டு 
வந்தது போல் தான் வந்திருக்கிறார்கள்.
ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் கட்சித் தொண்டர்களிடமும் நான் வேண்டிக் கொள்வது இன்று எனக்கு செய்த இந்த அநியாயத்திற்கு எதிராக நீங்கள் தட்டிக் கேளுங்கள். இந்த அநியாயத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியான அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து.. இது போன்று இன்னொரு அரசியல் தலைவரை அநியாயமாக கைது செய்யாமல் இருக்க வேண்டும். 
படைத்த அல்லாஹ்விடத்திலேயே ஒப்படைக்கிறேன். ஆதரவாளர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். இது ரமலான் மாதம். அல்லாஹ் விரும்பும் மாதம். குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். அமல் செய்து அதிகமதிகமாய் கையேந்துங்கள். இந்த அநியாயக்காரர்களுக்கு நேர்வழி இருக்குமென்றால் அல்லாஹ் நேர்வழியை கொடு! இல்லையென்றால் யா அல்லாஹ் இவர்களை அழித்துவிடு!! என்று நீங்கள் கையேந்துங்கள். 
இன்னும் யார் யாருக்கு என்ன அநியாயங்களை செய்யப்போகிறார்களோ தெரியாது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எந்த பாவமும் செய்யவில்லை. என்னுடைய கை சுத்தமானது. எனவே அநியாயமாக அபாண்டமாக ஏதோ ஒன்றை சுமத்திக் கொண்டு என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்... படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன் தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்... படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன் Reviewed by irumbuthirai on April 25, 2021 Rating: 5
Powered by Blogger.