கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து

June 13, 2020


கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. அவிபாவிர் (favipiravir) என்ற இந்த மருந்து அந்நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவிகித முதலீடு உள்ள கெம்ரர் என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்துள்ளது. 
இந்த மருந்துக்கு ரஷ்ய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது. மாதம் தோறும் 60இ000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும்இ 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத் சபை தெரிவித்துள்ளது.

அ.த.தி.
கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து Reviewed by irumbuthirai on June 13, 2020 Rating: 5

பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம்

June 11, 2020


பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு என்பது தொடர்பாக அறிவுறுத்தல்களை இலங்கை வக்பு சபை வெளியிட்டுள்ளது. 
அந்தவகையில் திறப்பதற்கு முன்னர் பொது சுகாதார அதிகாரியின் (PHI) எழுத்துமூல அனுமதியைப் பெற வேண்டும். 
சுகாதார அதிகாரிகள் கூட்டுத் தொழுகைக்கு/ கூட்டு நடவடிக்கைகளுக்கு இன்னும் அனுமதி வழங்காமையினால் ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை மற்றும் நிகாஹ் மஜ்லிஸ் நடத்த முடியாது. 
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை முழுமையாக கீழே காணலாம்.


பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

OIC உட்பட 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்...

June 11, 2020


கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர். அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் முன்னிலை சோசலிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடமையில் இருந்தவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டனர். 
இவர்கள் அத்திடிய என்ற இடத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நிவ்ஸ்வய
OIC உட்பட 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்... OIC உட்பட 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்... Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

தரம் 11 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

June 11, 2020

தரம் 11 புதிய பாடத்திட்டத்தின்படி விஞ்ஞானம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் அலகு ரீதியாக இணைக்கப்பட்டுள்ளது.
Online வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 11 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 11 விஞ்ஞானம் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

தரம்: 11 ஊடகவியல் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்...

June 11, 2020

க.பொ.த. (சா/தர) புதிய பாடத்திட்டத்தின்படி ஊடகவியல் (Media Studies) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடப் புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. 
செயற்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. 
கடந்த கால வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 11 ஊடகவியல் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... தரம்: 11 ஊடகவியல் (புதிய பாடத்திட்டம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Home Economics (மனைப் பொருளியல்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Tamil medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  
Subject: History of Sri lanka (இலங்கை வரலாறு) 
Languages: Tamil English & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes.  
Subject: Europe (ஐரோப்பிய வரலாறு) 
 Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Europe (ஐரோப்பிய வரலாறு) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

June 11, 2020

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையான அபேக்ஷா வைத்தியசாலையின் கிளினிக்குகளுக்காக வருகை தரும் பயணிகளின் நலன் கருதி நாட்டின் சகல மாகாணங்களில் இருந்தும் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவை திங்கட்கிழமை தொடக்கம் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபை அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அறிவித்துள்ளது. கொவிட்-19 நெருக்கடி நிலை காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியதால் அபேக்ஷா வைத்தியசாலையை நாடிய நோயாளிகள் பெரும் சிரமப்பட்டார்கள். நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு குறித்த பஸ் வண்டிகளில் குளிரூட்டி வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது மாத்தளை, நுவரெலியா, அனுராதபுரம்இ ஹங்குரன்-கெத்த, கண்டி, நிக்கவரட்டிய, கொடகவல, கல்கமுவ, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலிருந்து நாளாந்தம் சேவைகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி?

June 11, 2020


பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணியை வழங்குவதற்கான ஆலோசனையை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அமைச்சரவைக்கு முன்வைத்தபோது அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. 
இதற்காக 210 கோடி ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீருடைத் துணிகள் உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்யப்படும். 
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை துணி 1993 முதல் வழங்கப்பட்டு வருகின்றது. 2015 முதல் சீருடை துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் துணிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


சிடிசன்.Lk
பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி? பாடசாலை சீருடைக்கான வவுச்சருக்குப் பதிலாக துணி? Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு)

June 10, 2020


2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுக்குரிய இலக்கங்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் பெயர், அதற்குரிய சின்னம் என்பன இங்கு தரப்படுகின்றன. 
வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் சிங்கள அகராதி அகர வரிசைப்படியே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த முழு விபரங்கள் அடங்கிய வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Name & Numbers

வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு) வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ...

June 10, 2020

தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் மற்றும் மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு கீழ்வருமாறு அமையும்: 
01. மதவழிபாட்டுத் தலங்கள்: 
மத வழிபாடுகளுக்காக கீழ்கண்ட வரையறைக்குட்பட்டதாக தனிநபர்கள் ஒன்று கூடுவதற்காக 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுகின்றது. 
சுகாதார பாதுகாப்பு தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து எத்தகைய மதவழிபாட்டுத் தலங்களிலும் (அந்த வழிபாட்டு தலத்திற்குட்பட்ட கட்டிடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒன்றுகூடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. • இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனிநபர்கள் அல்லது ஒன்றுகூடக்கூடிய இடவசதி இல்லாத மதவழிபாட்டுத் தலங்களில் பொதுவாக அந்த நிலப்பகுதியில் கூடியிருக்கக்கூடிய எண்ணிக்கையில் அரைவாசிக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும். 
02. தனியார் வகுப்புக்கள்: 
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்குட்பட்டவகையில் தனியார் வகுப்புக்களை 2020 ஜுன் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. 
சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும் இடத்தில் இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பாதுகாத்து ஒரு மேலதிக வகுப்புக்காக கலந்துகொள்ளக்கூடிய ஆகக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் 100 பேருக்கு (100) அல்லது சம்பந்தப்பட்ட வகுப்பறைக்குள்/ மண்டபத்திற்குள் கற்பித்தலுக்கு வசதியற்ற இடத்தில் பொதுவாக அந்த இடத்தில் மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் அரைப்பங்கினர் மாத்திரம் பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். 
இந்த அனைத்து அனுமதியும் வழங்கப்படுகின்றமை COVD 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் முழுமையான வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாகவேயாகும்.
(அ.த.தி)

தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ... தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ... Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

June 10, 2020

ஜூன் 20ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

2019 உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறு: ஆணையாளரின் அறிவிப்பு:

June 10, 2020


கொரோனா பரவல் ஊரடங்கால் 2019 உயர்தர பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகளை உரிய காலத்திற்கு வெளியிட முடியாமல் போனது. எனவே அந்த பெறுபேறுகளை ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத ஆரம்பத்தில் வெளியிடலாம் என தான் எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 
நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2019 உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறு: ஆணையாளரின் அறிவிப்பு: 2019 உயர்தரப் பரீட்சை மீள்திருத்த பெறுபேறு: ஆணையாளரின் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார், சர்வதேச பாடசாலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாமா?

June 10, 2020


விடைத்தாள் திருத்தும் பணிகள்  இதற்கு முன்னர் சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் நிறைவு பெற்றதன் பின்னரே ஆங்கில மொழி மூலம் ஆரம்பிக்கப்படும். ஆனால் இம்முறை மூன்று மொழி மூலமும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும். 
எனவே இம்முறை விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் மற்றும் சர்வதேச பாடசாலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். உயர்தரத்தில் கற்பிப்பவர்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பட்டம் ஒன்றை பெற்றவர்களாகவே இருப்பார்கள். அந்த வகையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மாத்திரம் தனியார், சர்வதேச பாடசாலைகளில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.  
நேற்று கல்வி அமைச்சரால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார், சர்வதேச பாடசாலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாமா? விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார், சர்வதேச பாடசாலை  ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாமா? Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு

June 10, 2020


இவ்வருடம் இடம்பெறும் உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 
நேற்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
நூற்றுக்கு 30% ஆனவர்கள் இந்த பணிக்கு வருவதில்லை. இது மாத்திரமன்றி 

இன்னும் சில காரணங்களினால் இம்முறை இந்த மேலதிக கொடுப்பனவு ஒன்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோன்று இதற்கு முன்னர் சிங்கள மொழி மூலம், தமிழ் மொழி மூலம் நிறைவு பெற்றதன் பின்னரே ஆங்கில மொழி மூலமான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும். ஆனால் இம்முறை மூன்று மொழி மூலமும் ஒரேநேரத்தில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு விடைத்தாள் திருத்தும் பணிக்கு இம்முறை மேலதிக கொடுப்பணவு Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும்

June 09, 2020


இன்று அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி அதிகாரிகளிடம் எந்தவிதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அது ஒவ்வொருவரினதும் உரிமையாகும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முன்னணி சோசலிச கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை இலங்கை அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு தடையுத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றில் இலங்கை போலீசார் நேற்று பெற்றிருந்தனர். 
ஆனால் இன்று திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடந்தபொழுது அதன் உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இன்னும் சிலர் 

லிப்டன் சுற்றுவட்டாரத்தில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அதன் போதும் போலீசாருடன் அமைதியின்மையான நிலைமை ஏற்பட்டவுடன் அதிலும் சிலர் கைது செய்யப்பட்டனர். 
இந்தக் கைதுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. 
இதேவேளை இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும்படி எந்தவித அதிகாரிகளுக்கும் தாம் கோரிக்கை விடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. 
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 53 பேர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
தொண்டமானின் மரணத்தில் செயல்படுத்தப்படாத சட்டம், அமெரிக்க அதிகாரி இலங்கை வரும்பொழுது விமான நிலையத்தில் செயல்படுத்தப்படாத சட்டம் நியாயமான கோரிக்கை ஒன்றுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பொழுது மட்டுமா செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்து சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் ஜோர்ஜ் ப்ளாய்ட்டுக்காக இலங்கையில் நடந்த ஆர்ப்பாட்டமும் அமெரிக்கத் தூதரகத்தின் மறுப்பும் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள்

June 09, 2020


இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றுக்கான திகதிகளும் அது தொடர்பான ஏனைய விடயங்களும் கூறப்பட்டன. 
அந்த வகையில் உயர்தரப்பரீட்சை செப்டம்பர் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதி வரையும் புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13 ஆம் திகதியும் இடம்பெறும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவிக்கையில் , இம்முறை கணக்கீடு உட்பட 5 பாடங்களுக்கு சாதாரண கணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் இன்னும் சில பாடங்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் சாதாரண தரப் பரீட்சைக்கு கணிப்பான் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்தார். 
 அத்துடன் பரீட்சை நடத்துவது தொடர்பாக சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தற்பொழுது அதாவது வழமையாக பின்பற்றப்படும் முறையானது சமூக இடைவெளிக்குப் போதுமானது என அவர்கள் தெரிவித்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள்  2020 உ. தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்..

June 09, 2020


இந்தியாவில் லொக்டவுன் (Lockdown) காலப்பகுதியில் ரயில்வே நிலையத்தின் மேடையில் இறந்த தாயின் குழந்தையை பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார். 
தனது தாய் இறந்தது தெரியாமல் தாயை எழுப்பும் குழந்தையின் இந்த வீடியோ உலகம் பூராவும் பரவி அனைவரின் மனதையும் உருக வைத்தது.
இந்த விடயம் நடிகர் ஷாருக்கானுக்கு தெரியவர அவர் இந்த குழந்தையை பொறுப்பெடுத்துள்ளார். ஷாரூக்கானின் 'மீர்' அமைப்பு இதற்குரிய ஏற்பாடை செய்துள்ளது. இது தொடர்பில் நடிகர் ஷாருக்கான் செய்த டுவிட்டை கீழே பார்க்கலாம்

 
(நிவ்ஸ்வய)

ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை...

June 09, 2020


பொது போக்குவரத்தின் போது பயணசீட்டுக்காக பணத்தை செலுத்துவதற்கு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் முறை எதிர்வரும் ஜூலை இறுதி முதல் பாவனைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டுள்ளது.
பயணச்சீட்டுக்கான பணத்தை பயன்படுத்தும் பொழுது அதில் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பதனால் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முற்கொடுப்பனவு ஸ்மார்ட் அட்டையை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்யும்படி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரயில் மற்றும் அரச, தனியார் பேருந்துகளிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதேவேளை தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களின் சம்பளத்துக்கு மேலதிகமாக கொடுப்பணவொன்றை வழங்கும் வகையில் பஸ் உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஆணைக்குழுவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம்

June 09, 2020


கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். அதில் பாடசாலை 04 கட்டங்களாக ஆரம்பிக்கப்படும் முறையும் அதற்கான திகதிகளும்  அதேபோன்று உயர்தர பரீட்சைக்கான திகதி மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி மற்றும் ஒவ்வொரு தரங்களுக்குமான பாடசாலை நேர மாற்றம்  போன்ற பல விடயங்கள் தொடர்பாக அறிவித்தார். அந்த வகையில் பாடசாலை நேர மாற்றம் பின்வருமாறு இடம்பெறும்.... 

தரம் 3, 4: காலை  7:30 - மு.ப. 11.30  
தரம் 5: காலை 7:30 - நண்பகல் 12.00 
தரம் 6 - 9: காலை  7:30 - பி.ப. 1.30 
தரம் 10 - 13: காலை 7:30 - பி.ப. 3.30 

புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம் புதிய அறிவிப்பின்படி பாடசாலை நேரங்களில் ஏற்பட்ட மாற்றம் Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு:

June 09, 2020


பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் கட்டங்களையும் அதற்கான திகதிகளையும் நடைமுறைகளையும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று அறிவித்துள்ளார். அந்தவகையில் பாடசாலைகள் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறன. 
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
பாடசாலைகள் இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இது நான்கு கட்டங்களில் ஆரம்பிக்கப்படும். அவை பின்வருமாறு இடம்பெறும்.... 


1. முதலாம் கட்டம் ஜூன் 29 தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரை  ஆகும். இதில் அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் மாத்திரம்  வரவேண்டும். இந்த முதல் வாரத்தில் பாடசாலைகள் சுத்தப்படுத்துதல், கிருமி தொற்று நீக்கம், அதேபோன்று நேரசூசி மாற்றம் போன்ற பல ஏற்பாடுகளை செய்யவேண்டும். 

2. இரண்டாம் கட்டம் ஆரம்பமாவது ஜூலை 6ம் திகதி ஆகும். ஜூலை 6 தொடக்கம் தரம் 5, தரம் 11, தரம் 13 ஆகிய மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு வரவேண்டும். இந்த இரண்டாம் கட்டம் ஜூலை 6 தொடக்கம் ஜூலை 17 வரையான இரு வாரங்கள் ஆகும். 

3. மூன்றாம் கட்டம் ஆரம்பமாவது ஜூலை 20ஆம் திகதி ஆகும். எனவே இத்தினம் முதல் தரம் 10 தரம் 12 ஆகிய மாணவர்களும் சேர்ந்து வரவேண்டும். இந்த மூன்றாம் கட்டம் ஜூலை 20 தொடக்கம் 24 வரையாகும். 

4. நான்காம் கட்டம் ஜூலை 27 ஆகும். இத்தினம் தொடக்கம் தரம் 3, 4, 6, 7, 8, 9 ஆகிய மாணவர்களும் பாடசாலைக்கு வரவேண்டும். 

தரம் 1 மற்றும் 2 மாணவர்கள் எப்போது பாடசாலைக்கு வரவேண்டுமென்ற திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு: பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி மற்றும் முறை: வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு

June 09, 2020

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பில் முதல் முறையாக தொழில்நுட்ப பீடமொன்று ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இந்த தொழில்நுட்ப பீடம் ஹோமாகமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா வைபவத்தில் உயர் கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகதுறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Bachelor of Engineering Technology, Bachelor of Bio-Systems Technology, Bachelor of Information and Communication Technology போன்ற மூன்று திணைக்களங்களை உள்ளடக்கியதாகவும் சுமார் 300 மாணவர்கள் கற்க கூடிய வசதிகளை கொண்டதாகவும்   இந்த பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு...

June 09, 2020

கொரோனா இல்லாத நாடாக நியூஸிலாந்து தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நியூசிலாந்தில் சுகாதார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
கொவிட் நோயாளிகள் எவரும் நியூசிலாந்தில் தற்போது இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்  குணமடைந்து வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நியூசிலாந்தில் ஆயிரத்து 154 பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். எனினும் கடந்த 17 நாட்களாக எந்த ஒரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை. 
இதன் காரணமாக திருமண நிகழ்வுகள் மரணச்சடங்கு பொது நிகழ்வுகள் பொது போக்குவரத்து ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் இன்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய நாடுகளுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு... கொரோனா இல்லாத நாடாக தன்னை அறிவித்த நாடு... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை...

June 09, 2020

கொவிட் தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது .
அலிசாகிர் மௌலானாவின் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். 
இதன் மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் அலி சாகிர் மௌலானா நீதிமன்றிற்கு வருகை தந்திருந்தனர்.
ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... ஜனாசா எரிப்புக்கெதிரான விசாரணை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன?

June 09, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த கூட்டம் நேற்று(8) காலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. 
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, தொழிற் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். பொதுத்தேர்தல் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தலைவர் ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்தி கூட்டத்தை விட்டு செல்லும் வேளை, தொழிற்சங்க தலைவர்களால் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பிரச்சினைகள் தொடர்பாக  முன்வைக்கப்பட்டன. 
இதன்போது அவர்களிடம் இருந்து வெளியேற முயற்சித்த வேளை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பாலித ரங்கே பண்டார அமைதிப்படுத்த முயற்சித்துள்ளார். 
இதேவேளை இந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இன்று பிற்பகல் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து 'சமகி ஜனபலவேகய' தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? ஐ.தே.க. தொழிற்சங்க கூட்டத்தில் நடந்தது எனன? Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

June 08, 2020

இன்று (8) இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  
1. பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்.  
2. வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் நாளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்படும்.  
3. தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகளை வர்த்தமானியில் பிரசுரிக்கும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரை கோரல்.
4. தேர்தலுக்கான நிதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொள்ளல்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus)

June 08, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: History of India (இந்திய வரலாறு) 
Language: Tamil. 

Click the link below for scheme


Scheme
G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for History of India (இந்திய வரலாறு) - 2019 (Old Syllabus) Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 08, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Logic and Scientific Method (அளவையியலும் விஞ்ஞான முறையும்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5

வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்:

June 07, 2020


எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீலம் அல்லது கருப்பு நிற Ball Point ரக பேனையை  வீட்டிலிருந்து கொண்டு வருவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தேர்தலை நடத்தும்போது வாக்காளர்கள் மற்றும் தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் உரிய ஆவணங்களை கையில் தொடாமலேயே பணிகளை நிறைவேற்றுவதற்கும் எதிர்பார்ப்பதாக இதன்போது மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவூட்டும் பணியை செய்ய இலத்திரனியல் ஊடகங்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் வாக்கெண்ணும் பணிகளுக்காக இரண்டு முறை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நிவ்ஸ்வய.
வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்: வாக்களிப்பதற்கான பேனை வீட்டிலிருந்து: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்: Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Political Science (அரசியல் விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages)

June 07, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (Old Syllabus) Marking Schemes. 
Subject: Political Science (அரசியல் விஞ்ஞானம்) 
Languages: Tamil & Sinhala. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Political Science (அரசியல் விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Political Science (அரசியல் விஞ்ஞானம்) - 2019 (Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதா?

June 07, 2020


இவ்வருடம்(2020) நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று தெரிவித்தார். 
எவ்வாறாயினும், எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் உயர் தர பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் கூறினார்.
(அ.த.தி)

உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதா? உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்பட்டதா? Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு

June 07, 2020


முகக் கவசம் அணிவது பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் எல்லோரும் முகக் கவசம் அணிவது கொரோனா பரவலை குறைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
நோயற்ற ஒருவர் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதற்கான எவ்விதமான ஆதாரமும் இல்லை என இதற்கு முன்னர் WHO தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5
Powered by Blogger.