கூவுவதற்காக சட்டப் போராட்டம் நடத்திய சேவல்...

September 09, 2019
இது பிரான்சில் நடந்த விசித்திர சம்பவம்.  இந்த சேவல் அதிகாலை 4.30 மணிக்கு கூவத் தொடங்குகிறது. மேலும் அது காலை முழுவதும், மதிய வேளைகளிலும் கூவிக் கொண்டிருக்கிறது," என
 
பிரொன் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஃபெசெளவுக்கு 2017ஆம் ஆண்டு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சேவலின் உரிமையாளர்கள் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக, பிரொன் இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்.
 
இந்த வழக்கு விரைவில் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது. பிரான்ஸில் நகரமயமாதல் அதிகரித்து வருவதால், கிராமங்களில் அதிகரித்திருக்கும் நகர்புறவாசிகளால் வாழ்வியல் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுகின்றன என்று கூறப்பட்டது. 
கிராமங்கள் இவ்வாறுதான் இருக்கும். அவர்கள் ஏதும் சொல்லக்கூடாது," என சேவலின் உரிமையாளர் ஃபெசெள தெரிவித்துள்ளார் இந்த வழக்கின் மூலம் மோரிஸ் நாட்டில் பெரும் ஆதரவை பெற்றது. 
அதனை காப்பாற்ற வேண்டும் என இணையத்தில் 1,40,000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று உருவானது. மேலும் பலர் அதன் முகம் பதித்த டீ- ஷர்ட்டுகளையும் அணியத் தொடங்கினர். 
சேவலின் உரிமையாளர் ஃபெசெள, தனக்கு அதிகடிப்படியான இழப்பீடு 
தரவேண்டும் என பிரொனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் மோரிஸுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததோடு, சேவலின் உரிமையாளருக்கு ஏற்படுத்திய துயருத்துக்கு பிரொன் 1,100 அமெரிக்க டாலர்கள் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 
"பிரான்ஸ் நாட்டு மக்களின் சார்பாக மோரிஸ் வெற்றிப்பெற்றுள்ளது," என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
(நன்றி: பீபீசி)
கூவுவதற்காக சட்டப் போராட்டம் நடத்திய சேவல்... கூவுவதற்காக சட்டப் போராட்டம் நடத்திய சேவல்... Reviewed by irumbuthirai on September 09, 2019 Rating: 5

பல்கலைக்கழக மாணவர் 19 பேருக்கு விளக்கமறியல்

September 09, 2019

பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 19 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ருகுணு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 19 மாணவர்கள் மீண்டும் இம் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மாத்தறை பிரதான நீதவான் இசுரு நெத்திக்குமார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ருகுணு பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர் ஒருவருக்கு 

மிக மோசமான வகையில் பகிடிவதை செய்ததாககுற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ருகுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் அடங்கலாக 19 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
பல்கலைக்கழக மாணவர் 19 பேருக்கு விளக்கமறியல் பல்கலைக்கழக மாணவர் 19 பேருக்கு விளக்கமறியல் Reviewed by irumbuthirai on September 09, 2019 Rating: 5

மேலும் 2000 பேருக்கு அதிபர் நியமனம்...

September 08, 2019

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 4,000 அதிபர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் 

2,000 பேருக்கு அதிபர் நியமனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வித்துறையில் மனித வள மற்றும் பௌதீக வளத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார். 
இன்று (8) அலரிமாளிகையில் இடம்பெற்ற 19 கல்வியியல் கல்லாரிகளில் 31 கல்வி கற்கை நெறிகளின் கீழ் பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்விலேவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
மேலும் 2000 பேருக்கு அதிபர் நியமனம்... மேலும் 2000 பேருக்கு அதிபர் நியமனம்... Reviewed by irumbuthirai on September 08, 2019 Rating: 5

புதிதாக இரண்டு கல்வியியல் கல்லூரிகள்...

September 08, 2019

மேலும் 2 கல்வியியல் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

விஞ்ஞானம், கணிதம் கற்கைநெறிகளுக்காக மேலும் 2 கல்வியியல் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். 
இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற 19 கல்வியியல் கல்லாரிகளில் 31 கல்வி கற்கை நெறிகளின் கீழ் பயிற்சிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்விலேவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2 கல்வியியல் கல்லூரிகளை அமைப்பதற்கான அமைச்சரவை ஆவணம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். இதுவரையில் நாட்டில் 20 கல்வியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதை துரிதமாக்கி ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
புதிதாக இரண்டு கல்வியியல் கல்லூரிகள்... புதிதாக இரண்டு கல்வியியல் கல்லூரிகள்... Reviewed by irumbuthirai on September 08, 2019 Rating: 5

புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கான முக்கிய தகவல்கள்...

September 08, 2019

ஆசிரிய தொழில் உன்னதமான தொழிலாகும். சமூகத்தை உருவாக்கும் பணி ஆசிரியர்களின் வழிகாட்டலிலே தங்கியுள்ளது. ஆனால் அந்த தொழில் தொடர்பான 

உத்தியோகபூர்வமான , சட்டபூர்வமான சில விடையங்களை முறையாகப் பேணுவதும் இன்றியமையாததாகும். 
அந்த வகையில் புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர் ஒருவர் பூரணப்படுத்த வேண்டிய படிவங்கள் தொடர்பான விடையங்கள் கீழே காட்டப்பட்டுள்ளது. 


ஆசிரியர் ஒருவரின் சுய விபரக் கோவையில் இருக்க வேண்டிய விடையங்கள் கீழே காட்டப்பட்டுள்ளது.


புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கான முக்கிய தகவல்கள்... புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கான முக்கிய தகவல்கள்... Reviewed by irumbuthirai on September 08, 2019 Rating: 5

சுகாதாரப் பணி உதவியாளர் நியமனம்: மீண்டும் நேர்முகத்தேர்வுக்கு உத்தரவு:

September 08, 2019

கடந்த மாதம் இடம்பெற்ற சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார பணி உதவியாளர்களின் ஆட்சேர்ப்பின்போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை கண்டறிந்துள்ள ஆளுநர் இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1,923 பேருக்கும் மீண்டும் நேர்முகத்தேர்வினை நடத்துமாறும் பணிப்புரை வழங்கியுள்ளார். 
ஒரு மாதத்திற்குள் இந்த நேர்முகத்தேர்வினை நடாத்தி அவர்களை குறித்த வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் தெரிவித்துள்ளார். இதேவேளை நேர்முகத்தேர்வுக்கு வருகைதருபவர்கள் போலியான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் வருகை தந்து அவை பொய்யானவை என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக தகுந்த சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் எச்சரித்துள்ளார். 

இதற்காக 24 குழுக்களை நியமிக்குமாறும் ஒரு குழுவில் 3 அதிகாரிகள் பணியாற்றுவதுடன் இதற்கு மேலதிகமாக பார்வையாளர்களாக வடமாகாண மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதி ஒருவரும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுபவர்களின் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை நேர்முகத் தேர்வின்போது காணப்படும் என்றும் ஆளுநர்; தெரிவித்துள்ளார். இதேவேளை 

2020 ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்புக்களில்; 6 சதவீதம் மாற்றுத்திறனாளிகள், 5 சதவீதம் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சார்ந்தவர்கள், 3 சதவீதம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் ஒரு சதவீதம் மாற்றுப் பாலினத்தவருக்காகவும் இடத்தினை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆளுநர்இதன்போது மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
சுகாதாரப் பணி உதவியாளர் நியமனம்: மீண்டும் நேர்முகத்தேர்வுக்கு உத்தரவு: சுகாதாரப் பணி உதவியாளர் நியமனம்: மீண்டும் நேர்முகத்தேர்வுக்கு உத்தரவு: Reviewed by irumbuthirai on September 08, 2019 Rating: 5
Powered by Blogger.