Results for Health Tips

குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது?

August 30, 2021
 

வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்னைகளும் தேவைகளும் உண்டு. ஆனால் இவை எல்லை தாண்டிப் போகும்போது அது நம் வாழ்வை பாதிக்கிறது. 
 
அதை சரியான நேரத்தில் நாம் கவனிக்க வேண்டும். மனதில் ஏற்படும் குழப்பத்தைத் தயங்காமல் ஆலோசகரிடமோ மனநல மருத்துவரிடமோ தெரிவிக்க வேண்டும். 
 
எல்லா நேரத்திலும் மருத்துவர் மருந்து தர மாட்டார். ஆரம்ப கட்டப் பிரச்னைகளாக இருந்தால் ஆலோசனை மூலமாகவும் நடத்தையை 
 
மாற்றிகொள்வதன் மூலமாகவும் அதிலிருந்து மீண்டுவிடலாம். சரியான நேரத்தில் மனநல பாதிப்பைக் கண்டறிந்தால் விரைவிலேயே நலம் பெறலாம். உதவி பெறாமல் தட்டிக்கழிக்கும்போது அது மனநலத்தை இன்னும் ஆழமாக பாதிக்கிறது. 
 
அப்படிப்பட்ட சூழ்நிலையில் நலம் பெறுவதற்குக் கூடுதல் முயற்சியும் நேரமும் தேவைப்படும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அதுவே மனநலத்துக்கான முதல் படி. 
 
"குடும்ப உறுப்பினர்களின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க வேண்டும், அதைப் பொறுத்து மனநல உதவி தேவையா இல்லையா என்பதை முடிவெடுக்கலாம்" என்கிறார் மனநல மருத்துவர் ராஜேந்திர பார்வே. 
 
"தினசரி வேலைகள், வெளியிலிருக்கும் வேலைகள், குளிப்பது, கழிவறைக்குச் செல்வது போன்றவற்றில் பிரச்னை இருந்தால் அதை கவனிக்கவேண்டும். அதுவே அறிகுறி அல்ல, அதைக் கூடுதலாகக் கவனிக்கவேண்டும். 
 
அன்றாட வாழ்வின் மகிழ்ச்சியை அவர்கள் இழந்துவிட்டார்களா? இயந்திரத்தைப் போல நடந்துகொள்கிறார்களா? பசி, உடல் கழிவை வெளியேற்றுதல், தூக்கம், பாலியல் செயல்பாடு ஆகியவற்றில் தொந்தரவு இருக்கிறதா?, எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும்" என்கிறார். 
 

எப்படி உரையாடுவது? 


நம் குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் நாம் அவர்களுடன் பேசலாம், கேள்வி கேட்கலாம், ஆனால் அதைப் பேசும்போது அக்கறையாகவும் அன்பாகவும் இருக்கவேண்டும். 
 
இந்தப் பிரச்னைகளுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? பிரச்னைகள் தீவிரமாக இருக்கின்றனவா? இவை எப்போதாவது வருகின்றவா அடிக்கடி வருகின்றவா? எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை வருகின்றன? போன்ற கேள்விகளைக் கேட்டு குடும்பத்தினரின் மனநலத்தைப் புரிந்துகொள்ளலாம். 
 
ஆனால் இவற்றை எடுத்த எடுப்பில் போட்டு உடைத்துவிட முடியாது. சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். இதற்கு எதிர்மறையாகவும் பதில் வரலாம், எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் சொல்லலாம். அந்த சூழலில் பொறுமையாக இருந்து அவர்களைக் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். 
 
குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அடிக்கடி மனத்தொய்வு, பதற்றம், கோபம், பொறாமை போன்றவை வரும்போது அவர்களுக்கு நாம் உதவி செய்ய சில முயற்சிகள் எடுக்க வேண்டும். 
 
 

தவறான நம்பிக்கைகளிலிருந்து எப்படி விடுபடுவது? 

 
பொதுவாக எந்த மனநலப் பிரச்னையையும் "பைத்தியம் பிடிப்பது" என்றோ மனத்தொய்வு என்றோ மக்கள் நினைப்பார்கள். ஆனால் தடுக்க முடியாத எண்ண ஓட்டம், பதற்றம், ஓசிடி, மனத்தொய்வு போன்ற பல பிரச்னைகளும் வரலாம். 
 
மனநல மருத்துவரையோ ஆலோசகரையோ சந்தித்தாலே அவர்களுக்கு மனநோய் வந்துவிட்டது என்ற தவறான புரிதலில் இருந்து நாம் விடுபடவேண்டும். இதுபோன்ற எண்ணங்களோடு வீட்டிலும் விவாதிக்ககூடாது. 
 
மின் அதிர்ச்சி சிகிச்சை மூலமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்பதும் ஒரு தவறான புரிதல். இது 'Electro Conclusive Therapy' (ECT) என்று அழைக்கப்படுகிறது. நோயுற்ற எல்லாருக்கும் இது தேவைப்படுவதில்லை. இந்த சிகிச்சையைப் பெறுபவர்கள்கூட வீட்டுக்குத் திரும்பிவிடலாம். இது அனைவருக்கும் தரப்படுவதும் இல்லை. 
 

மனநலப் பிரச்னைகள் குறித்து தெரிந்தபின்பு என்ன செய்வது? 

 
நமக்கு மனநலப் பிரச்னை இருப்பது தெரிந்தபின்னும்கூட நாமாக எதுவும் செய்யக்கூடாது. மனநல மருத்துவர்கள், ஆலோசர்களிடம் பேசவேண்டும். மனநல பாதிப்பு எப்படிப்பட்டது என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள். 
 
இணையத்தில் அறிகுறிகளைத் தேடி நாமாக நோயை முடிவு செய்து மருந்துகள் எடுத்துக்கொள்வது ஆபத்தானது. "கூகுளில் தேடக்கூடாது. உங்களது எல்லா அறிகுறிகளையும் கேட்டபின்பே மருத்துவர்கள் சிகிச்சையை முடிவு செய்வார்கள். 
 
யாருக்கு மருந்து தேவை, யாருக்கு ஆலோசனை தேவை, யாருக்கு இரண்டுமே தேவை என்பதையெல்லாம் முடிவெடுக்க ஒரு முறை உள்ளது. கூகுளால் இதை செய்ய முடியாது" என்கிறார் மருத்துவர் ராஜேந்திர பார்வே. 
 

குடும்பம் மற்றும் ஆதரவுக் குழுக்கள் 

"யாராக இருந்தாலும் அவர்கள் மனநலம் சீராவதற்குக் குடும்பத்தின் பங்களிப்பு முக்கியம்" என்கிறார் பொதுநலக் கழகத்தைச் சேர்ந்த ஆலோசகர் வைதேஹி பிடே. 
 
"ஆலோசகர், மருத்துவர்களின் உதவியோடு மனநலத்தை சரிசெய்வது இயல்புதான். மருந்துகளை எடுத்தால்தான் எல்லாம் சரியாகும் என்றும் மருந்துகள் எடுத்தால் அதுவே பழகிவிடும் என்றும் ஒரு தவறான நம்பிக்கை உள்ளது. அதிலிருந்து மக்கள் விடுபடவேண்டும். 
 
மருத்துவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சோதனைகள் செய்த பிறகு சிகிச்சை பற்றி முடிவெடுப்பார்கள். குடும்பத்தினருடன் ஆதரவுக் குழுக்களும் மனநலம் மேம்பட உதவுகின்றன. 
 
தன்னைப் போலவே பலருக்குப் பிரச்னை இருக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டிருக்கிறார்கள் என்பதை நோயுற்றவர் 
 
உணர்வார். தாங்கள் மட்டும் தனியாக இல்லை, மற்றவர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்ற உணர்வே அவர்களுக்கு ஆறுதலைத் தரும்" என்கிறார். 
 
 

தவிர்க்க வேண்டியவை 

குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தால் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். 
 
முதலில் குற்றம் சொல்லி பழி போடக்கூடாது. விதியைக் காரணம் காட்டக்கூடாது, நேரம் சரியில்லை, போன ஜென்மப் பாவம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. தீர்க்கமுடியாத ஒரு பரம்பரை வியாதி என்று சொல்லக்கூடாது. நோயுற்றவருக்கு ஆதரவு தர முயற்சி செய்யவேண்டும். 
 
நாம் கூட இருக்கும் உணர்வைத் தந்து அவர்கள் வலியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் நமக்குத் தொல்லை தரவில்லை என்பதை உணரவேண்டும். 
 
அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 
 
இதை அவர்கள் தெரிந்து செய்வதில்லை, அவர்களது மனநலப் பிரச்னைகள் இப்படி நடந்துகொள்ள வைக்கின்றன. ஆகவே மேலும் மேலும் கேள்வி கேட்டு அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது.
Source: https://www.bbc.com/tamil/science-58360371
நன்றி: BBC.COM
குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது? குடும்ப உறுப்பினருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது? Reviewed by irumbuthirai on August 30, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி?

August 28, 2021
 

சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது தொடர்பாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார். 
 
குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொவிட் - 19 தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். 
 
இதற்கமைவாக, பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா? மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ? உட்காருகின்றனரா ? சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா? சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா? கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா? சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா ? 
 
இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். 
 
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு!

May 27, 2021

தேங்காய் எண்ணெய் கொரோனாவைக் குணப்படுத்துமா என்பது தொடர்பில் புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. 
அதாவது தூய்மையான தேங்காய் எண்ணெயிலுள்ள சேர்மங்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் உடலில் வைரஸின் அளவை 
60 – 90% வரை குறைக்க முடியும் என பிலிப்பைன்ஸின் அட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியரும் பிலிப்பைன்ஸ் சங்கத்தின் ஒருங்கிணைந்த இரசாயனவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான ஃபேபியன் டெரிட் கூறியுள்ளார். 
எனினும் லேசான அறிகுறிகளைக் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே இதைச் செய்ய முடியும். 
கொரோனா சிகிச்சை நிலையம் மற்றும் பொது வைத்தியசாலையில் 57 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை சுத்தமான தேங்காய் எண்ணெயை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்றும் கூறினார். அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை உணவுக்குப் பின் 02 தேக்கரண்டி சுத்தமான எண்ணையை எடுக்க வேண்டும் என்றார். 
எவ்வாறாயினும் இந்த அளவு தற்போதைய நிலையில் பரிந்துரைக்கப்பட்டாலும் அது தொடர்பில் ஆராய்ச்சிகள் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்...

April 11, 2020

கொரோனா தொடர்பான சகல Update களையும் அறிந்திட புதிய App ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. MyHealth என்ற புதிய கைத்தொலைபேசி செயலியை சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். உலகளாவிய கோவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவத் தொடங்கியவுடன், பாதிக்கப்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவேளையில் ஒரு வலுவான கைத்தொலைபேசி செயலியின் தேவை உணரப்பட்டது. 
அதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் மேலான அறிவுறுத்தலின் கீழ் இவ் செயலியை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிமுகப்படுத்தியது. 
இந்த App மூலம் வைரஸ் குறித்த தேவையான தரவு, தகவல் மற்றும் கருத்துக்களை மருத்துவ அதிகாரிகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. 
இவ் கைத்தொலைபேசி செயலியை கூகிள் பிளேஸ்டோர், ஹூவாய் ஆப்ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து, இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றீர்கள். இந்தப் பயன்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, 
வைரஸ் கண்டறியப்பட்டால் அதை எல்லா பயனர்களுடனும் பகிரலாம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நபர் இருந்த இடத்தை உங்கள் இருப்பிடத்துடன் வரைபடமாகக் காண்பிக்கிறது. வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் சென்றுவந்த இடங்களின் தரவுகளை அறிந்துகொள்ள முடியும். மேலும், கடந்த 14 நாட்களில் அவர்கள் குடும்பத்தினரையும், அவர்கள் இணைந்த நண்பர்களையும் பாதுகாக்கும் நோக்கில் கைத்தொலைபேசி செயலியில் பயனர்களின் பதிவுசெய்யப்பட்ட இருப்பிடத் தரவுகள் அனைத்தும் கைத்தொலைபேசிக்குள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்த கைத்தொலைபேசி செயலில் பதிவுசெய்யப்படும் பயனரின் தகவல்கள் அனுமதியின்றி எந்த வெளி அமைப்புகளுக்கும் அனுப்பப்படாது. மேலும், பாதிக்கப்பட்ட நபருடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தால், நீங்கள் தானாகவே தேசிய நோய் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யலாம். இது கோவிட்-19 வைரஸ் தொற்றலை அடையாளம் காணவும், பரவலைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பிற நபர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இவ்வாறு பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கின்றது இந்த App.
(அ.த.தி)
கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

உலளாவிய ரீதியில் கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள...

March 24, 2020


கொரோனா பற்றிய தகவல்களை ஒவ்வொரு நாடு ரீதியாக இலகுவில் அறியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையான நாட்டை கிளிக் செய்தவுடன் அங்கு பாதிக்கப்ட்டோர், குணமடைந்தோர், மரணமடைந்தோர் தொடர்பான விபரங்களை அறியலாம். 
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து குறித்த தளத்திற்கு சென்று தேவையான நாட்டை கிளிக் செய்க.


உலளாவிய ரீதியில் கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள... உலளாவிய ரீதியில் கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள... Reviewed by irumbuthirai on March 24, 2020 Rating: 5

கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை

March 21, 2020


கொரோனா தொடர்பில் முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கையை இங்கு தருகிறோம். 
இதில், 

இதுவரையுள்ள நிலைமைகளும் மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகளும் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு செய்தியைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை Reviewed by irumbuthirai on March 21, 2020 Rating: 5

கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது

March 15, 2020


கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மேற்கொள்வோருக்கும் உடன் தண்டனை வழங்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே 23 பேர் கைது செய்யப்பட்டுள்னனர் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
(அ.த.தி)

கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது Reviewed by irumbuthirai on March 15, 2020 Rating: 5

கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் என்ன தண்டனை தெரியுமா?

March 15, 2020


கொரோனா வைரஸ் தொற்று கொண்ட அல்லது அந்த விடயம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள ஒரு நபர் தனது நோய் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறானோர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் 

ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும். இவர்கள் எதுவித பிடிவிறாந்தும் இல்லாமல் நேரடியாக கைது செய்யப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
(அ.த.தி)
கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் என்ன தண்டனை தெரியுமா? கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் என்ன தண்டனை தெரியுமா? Reviewed by irumbuthirai on March 15, 2020 Rating: 5

கொரோனா வைத்திய சான்றிதழ் இரத்து

March 06, 2020


குவைத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் இல்லை என்பதனை உறுதிப்படுத்த சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிப்பது இம்மாதம் 8ஆம் திகதி தொடக்கம் இரத்து செய்யப்பட்டுள்ளது. குவைத் அரசாங்கத்தின் சிவில் விமான சேவை பிரதிப்பணிப்பாளர் நாயகத்தினால் இதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த வைத்திய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளுக்கு 

அறிவிக்கப்பட்டிருந்தது. சில நாடுகளில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்வதில் உள்ள தொழில்நுட்ப சிரமங்களினால் இதனை இரத்து செய்திருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி.)
கொரோனா வைத்திய சான்றிதழ் இரத்து கொரோனா வைத்திய சான்றிதழ் இரத்து Reviewed by irumbuthirai on March 06, 2020 Rating: 5

Price of 30 more drugs to be controlled

October 08, 2019


Minister Dr. Rajitha Senaratne says that the price of 30 more types of medicinal drugs will be regulated. Minister Senaratne said that a number of new recruitments to the Health Management will be made soon and new technologies will be made available to make the decision making process more efficient in the health sector. 
He was addressing the Annul General Meeting of the Health Management assistants held at Biyagama Village recently. Senaratne pointed out that currently the Health Service gives free stents and lenses.A total of over 

1500 Cochlear Implant Surgeries have been done free of charge. This government had invested so much money on health care. The prices of 73 drugs have already been reduced and the price of 30 more drugs will be reduced soon.
“According to a study by Prof. Galappatty the benefit gained by Sri Lankans through these price reductions (annually) are Rs. 4.4 billion. People are now using high quality drugs and as people use medicines as prescribed, they are healthier. The results can will be visible in two years as the life expectancy of people increase,” he added
(GID)
Price of 30 more drugs to be controlled Price of 30 more drugs to be controlled Reviewed by irumbuthirai on October 08, 2019 Rating: 5

விரைவில் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை

September 27, 2019

இலங்கை மாற்று அறுவைச்சிகிச்சை துறையில் துரிதமான முன்னேற்றங்களை கண்டிருப்பதாகவும் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் 

சகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ண தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் சென்னை நகரில் அமைந்துள்ள வைத்தியர் ரீலா நிறுவனம் மற்றும் வைத்திய மத்திய நிலையத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
இந்திய நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் முஹம்மட் ரீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முஹம்மத் ரீலா கண் மாற்று சத்திரசிகிச்சை துறையில் பிரபல்யம் மிக்கவர். இவர் 4,000 இற்கும் மேற்பட்ட 

மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். 10 வருட காலப்பகுதியில் இவர் இலங்கை நோயாளர்கள் 200 பேருக்கு மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
விரைவில் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை விரைவில் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை Reviewed by irumbuthirai on September 27, 2019 Rating: 5

'சாஃப்ட் திசு புற்றுநோய்' என்றால் என்ன?

August 25, 2019

இது ஒரு அரியவகைப் புற்று நோயாகும். திசுக்கள், தசைகள், தசைநார்கள், மூட்டுகள் மற்றும் பிற உடல் அமைப்புகள் வழியாக மிகவும் மெதுவாகப் பரவுவதால், 

இந்த வகைப் புற்றுநோயை கண்டறிவது மிகவும் கடினம். மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, மனித உடலில் புற்று அல்லாத பல கட்டிகள் உள்ளன. இவை உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதில்லை. உயிருக்கு ஆபத்தானதும் அல்ல. ஆனால், புற்றாக மாறுவதற்குச் சாத்தியமுடைய கட்டிகள் படிப்படியாகக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடுகின்றன. இதுதான் 

’சாஃப்ட் திசு சார்கோமா’ என்று அழைக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. தசைகளில் வீக்கம், எலும்புகள் மற்றும் கட்டிகளில் ஏற்படும் வலி நீண்டகாலம் தொடர்வது இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். இந்த நோய் உடலின் எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்றும், பொதுவாக கைகள் மற்றும் கால்களிலுள்ள தசைகளை பாதிக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(பிபிசி)

'சாஃப்ட் திசு புற்றுநோய்' என்றால் என்ன? 'சாஃப்ட் திசு புற்றுநோய்' என்றால் என்ன? Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

மாங்கொட்டையிலுள்ள சில மருந்துவ நன்மைகள்

May 20, 2019
சுவையான பழங்களில் மாம்பழமும் ஒன்றாகும். மாரி காலம் வந்தால் மாம்பழத்தினை எல்லா மரங்களிலும் காணக்கூடியதாக இருக்க்கும். நாம் வழமையாக மாம்பழம் சாப்பிடும் போது அதன் சதையை மாத்திரமே உண்ணுகிறோம் அதன் கொட்டையைத் தூக்கி எறிந்து விடுகிறோம்.
இனிமேல் எறிந்து விடாதீர்கள். ஏன் எனின் அதன் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கப் போகின்றோம்

ஆரோக்கியமான முடியினை பெருவதற்கு : மாங்கொட்டையில் அதிகமான கொழுப்புச் சத்து, மினரல் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் மாங்கொட்டை எண்ணெய்யை நீங்கள் பாவிக்கும்  எண்ணெய்யுடன் கலந்து தடவி வரத் தலைமுடிப் பிரச்னைகள் அனைத்தும் குறையும்.
இதன் பட்டரினை முடியில் பயன்படுத்தினால் இளம் நரையும் பொடுகுத் தொல்லையும் நீங்கும்வயிற்றுப் போக்கு தொல்லை நீங்கும் : மாங்கொட்டை பொடி விற்கப்படுகிறது அல்லது நீங்களே காயவைத்து அரைத்துக் கொள்ளலாம். அதைக் கொஞ்சமாகத் தேனில் குழைத்து உண்டால் வயிற்றுப் பிரச்னைகள் நீங்கும்.

மாங்கொட்டைகளை உண்பதால் இதயப் பிரச்னை, ரத்தக்கொதிப்பு பிரச்னை இருந்தால் குறையும் .


ஆரோக்கியமான சருமம் : மாங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் பட்டர் சிறந்த மாய்ஸ்சரைஸர். இதனை உங்கள் முகம் மற்றும் கைகால்களில் தடவி வர மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.


-அனைவர்க்கும் பகிருங்கள்
மாங்கொட்டையிலுள்ள சில மருந்துவ நன்மைகள் மாங்கொட்டையிலுள்ள சில மருந்துவ நன்மைகள் Reviewed by Irumbu Thirai News on May 20, 2019 Rating: 5

Love பண்றவங்களுக்கு இது தான் செம்ம மாஸ்

April 29, 2019
எந்தவொரு சாதாரண மனிதனையும் போலவே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அலட்சியமாக / ஸ்மார்ட்போன் அடிமையாதல் கலவையாகும்.  கடந்த சில ஆண்டுகளில் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன்கள் நல்ல மற்றும் மோசமான மாதிரியாக மாறிவிட்டன.  எதையும் அணுகுவதற்கு உங்கள் விரல் நுனியில் உள்ளது, ஆனால் இது சுய கட்டுப்பாட்டுக்கு கவனம் செலுத்துவது அல்லது பராமரிக்க கடினமாக்குகிறது.

 சுய கட்டுப்பாட்டில் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்களா?  நீங்கள் கவனமாக இருக்க வேண்டுமா?  உங்களை ஒரு முக்கிய இடமாற்றியாக கருதுகிறீர்களா?

 அதனால்தான் இந்த பயன்பாட்டை உருவாக்கியது - இடைநிறுத்தம், கவனச்சிதறல்கள் மற்றும் கவனம் செலுத்துவதைத் தடுக்க உதவும்.  டிடிக்ஸ் உங்கள் தொலைபேசியில் தேவையில்லாமல் தடுக்கும் ஒரு டைமர் / ஃபோகஸ் பூட்டு ஆகும்.  இது உங்களை ஒரு டிஜிட்டல் போதை நீக்க ஒரு வழி பயன்படுத்த முடியும்.  ஒரு போனஸ் என நீங்கள் அதை உள்ளே இருந்து மற்ற போதை பயன்பாடுகள் நீக்க முடியும்!

கீழே ‘DOWNLOAD’யினை க்ளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம் ஒரு டிஜிட்டல் போதைப்பொருள் தொடங்க இது மிகவும் எளிது:
 1. பயன்பாட்டை துவக்கவும்.
 2. உங்கள் திரையை பூட்ட ஒரு நேரத்தை அமைக்கவும்.
 3. பூட்டு சின்னத்தைத் தாக்கி உறுதிப்படுத்தவும்.
 4. அலட்சியமாகவும் கவனச்சிதறலும் இல்லாமல், படிப்போம்.

 முக்கிய அம்சங்கள்
 1. தேவையற்ற அம்சங்கள் இல்லாமல் இடைமுகத்தை பயன்படுத்த எளிதானது.
 2. நேரத்தை மற்ற பயன்பாடுகளைப் பயன்படுத்துவதை நிறுத்தி, கவனத்தை திசை திருப்பினால் (நீங்கள் 11 மணி நேரம் இலவசமாக அமைக்கலாம்).
 3. நீங்கள் வரலாறு திரையில் உங்கள் டைமர் பயன்பாடு வரலாற்றை காணலாம்.
 4. நீங்கள் வரலாற்றில் திரையில் நேரத்தை பயன்படுத்தி ஒரு ஊக்க ஊக்கத்தை கணக்கிடுவதை மொத்தமாக கணக்கிடலாம்.
 5. அமைப்புகளின் பக்கத்தின் 'நிறுவல் நீக்கம் ஆப்ஷன்கள்' திரையில் இருந்து மற்ற பயன்பாடுகளை நீக்கலாம்.  இது உங்கள் நிறுவப்பட்ட பயன்பாடுகளின் அளவு, பெயர் மற்றும் தொகுப்பு பெயரைக் காட்டுகிறது.


Download
Love பண்றவங்களுக்கு இது தான் செம்ம மாஸ் Love பண்றவங்களுக்கு இது தான் செம்ம மாஸ் Reviewed by Irumbu Thirai News on April 29, 2019 Rating: 5

Incoming Callல் இப்டி ஒரு Trick ஆஹ்

April 28, 2019
இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தி உங்கள் தனிப்பட்ட உள்வரும் அழைப்புகளில் கலந்துகொள்ள மட்டுமே நீங்கள் இருக்கிறீர்கள்.  நீங்கள் இல்லாதபோது, ​​உங்கள் தனிப்பட்ட உள்நாட்டிலும் எண்களிலும் உள்ள உங்கள் உள்வரும் அழைப்புகள் உங்கள் தனியுரிமையைத் தொந்தரவு செய்ய முயற்சித்தால், தனியுரிமை "பாதுகாப்பான உள்வரும் அழைப்புகள் பூட்டுதல் மற்றும் தனியுரிமை" பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

  உங்கள் தனியுரிமையை காப்பாற்றுங்கள் மற்றும் உங்கள் உள்வரும் அழைப்புகள் வேறு யாரால் எடுக்கப்பட்டன என்பதைப் பாதுகாக்கும்.  நீங்கள் வருத்தப்பட்டால், யாராவது உங்களுடைய உள்வரும் அழைப்புகள் மற்றும் எண்ணைப் பார்க்கவும், பார்க்கவும் முடியுமா?  உங்கள் உள்வரும் அழைப்பின் தனியுரிமையை பாதுகாக்க முழுமையான பாதுகாப்பிற்கான பாதுகாப்பான உள்வரும் அழைப்பு பூட் தனியுரிமை.


கீழே ‘DOWNLOAD’யினை க்ளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம் பாதுகாப்பு உரிமையாளர் அல்லது கடவுச்சொல்லை வழங்குவதன் மூலம் மட்டுமே அவர்களின் உள்வரும் அழைப்புகளில் மொபைல் உரிமையாளர் மட்டுமே செல்ல முடியும் அல்லது அவர் அமைப்பார்.  இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தி யாரும் உங்கள் உள்வரும் அழைப்புகளைத் தவிர வேறு யாரும் பதில் அனுப்ப மாட்டார்கள்.  நீங்கள் கைமுறையாக எண்ணைச் சேர்க்க வேண்டும் அல்லது மொபைல் தொலைபேசி தொடர்புகள் பட்டியலிலிருந்து சேமித்த பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும், பின்னர் உங்கள் விரும்பிய பாதுகாப்பு கடவுச்சொல் அல்லது பேட்டர்ன் பூட்டு அமைக்க வேண்டும், அதனால் யாரும் உங்கள் உள்வரும் அழைப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் நீங்கள் உள்வரும் அழைப்புகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்.

 எப்படி உபயோகிப்பது:
 1. கூகிள் ப்ளே இருந்து பாதுகாப்பான உள்வரும் கால் பூட்டு ஆப் பதிவிறக்க.
 2. பயன்பாட்டை திறக்கும் மற்றும் தொகுப்பு பூட்டு வகை பின்னர் கடவுச்சொல்லை அல்லது அமைப்பு அமைக்க.
 3. அனைத்து தொடர்புகளுக்காகவும் பூட்டுதலை செயல்படுத்த "எல்லா தொடர்புகளையும்" கிளிக் செய்யவும்.
 4. "தொடர்புகளைத் தேர்ந்தெடுத்து" குறிப்பிட்ட தொடர்பை க்ளிக் செய்யவும் மற்றும் கைமுறையாக அல்லது தொடர்பு பட்டியலில் இருந்து எண்ணவும்.
 5. முடிந்தது
 நீங்கள் தீம் மாற்ற விரும்பினால், அதை தேர்ந்தெடுத்து பின்னணி பொத்தானை "பின்னணி அமைக்க" கிளிக் செய்யவும்.

 அம்சங்கள்:
 பாதுகாப்பான உள்வரும் அழைப்புகள் தனியுரிமை.
 C அழைப்புகள் தடுப்பு என நீங்கள் பயன்படுத்தலாம்.
 👉 நீங்கள் தெரியாத அழைப்புகள் லாக்கர் பயன்படுத்தலாம்.
 உள்வரும் அழைப்பு லாக்கரை இயக்கு / முடக்கு.


Download
Incoming Callல் இப்டி ஒரு Trick ஆஹ் Incoming Callல் இப்டி ஒரு Trick ஆஹ் Reviewed by Irumbu Thirai News on April 28, 2019 Rating: 5

கோடை காலத்தில் எவ்வாறு முடியினை பாராமரிப்பது

April 28, 2019
கோடை காலத்தில் முடிகளின்  வேர்களின் வறட்சி , பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.


சம்மர் ஹேர் கட் : மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்களது முடியினை ட்ரிம் செய்து கொள்ளுங்கள். அது வெயிலுக்கு பல வகையான சம்மர் கட் ஸ்டைல்கள் வந்துள்ளன ஏதும் ஒன்றௌ தெரிவு செய்க

லூஸியான ஹேர் ஸ்டைல் :  இறுக்கமான முறையில் தலை முடியினை கட்டாமல் லூஸான ஹேர் ஸ்டைல்ஸை பின்பற்றலாம். வெயில் தாக்கத்திற்கு ஹை பன் ஸ்டைல் பின்பற்றினாலும் லூஸாக போடுங்கள்.எண்ணெய் அல்லது கண்டிஷ்னர் பயன்படுத்தலாம்: முடி வேர்களின் வறட்சியைத் தன்மையினை போக்க  தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். கண்டிஷ்னர் பயன்படுத்தலாம். குளிக்கும் போது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

சீப்பு தேர்வில் கவனம் : பற்களில் அதிக இடைவெளி கொண்ட சீப்பு பயன்படுத்துங்கள்.  முடிக்கு பாதிப்பும் ஏற்படாது.தண்ணீர் அல்லது இளநீர் அருந்துங்கள்: உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க அதிகமாக நீர் அருந்துங்கள், இளநீர் அருந்துவதாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.
கோடை காலத்தில் எவ்வாறு முடியினை பாராமரிப்பது கோடை காலத்தில் எவ்வாறு முடியினை பாராமரிப்பது Reviewed by Irumbu Thirai News on April 28, 2019 Rating: 5

இரத்ததினை சுத்தமாக வைத்து இருக்க என்ன செய்ய வேண்டும்

April 27, 2019
நமது உடலில் மிக முக்கியமான ஒன்று தான் இரத்தம்.. இரத்தம் இல்லாமல் நாம வாழ கூட முடியாது..
நாம் இரத்ததினை எப்போதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்
எப்டி சுத்தம் செய்வது என்பது பற்றி பார்ப்போம்

இரத்ததினை சுத்தமாக வைத்து இருக்க என்ன செய்ய வேண்டும் இரத்ததினை சுத்தமாக வைத்து இருக்க என்ன செய்ய வேண்டும் Reviewed by Irumbu Thirai News on April 27, 2019 Rating: 5

சிறு வயதில் இருத நோய் வர இது தான் காரணம்

April 26, 2019
தற்காலத்தில் சிறு குழந்தைகளுக்கு கூட குணப்படுத்த முடியாத நோய்களும் வருகின்றது..
அது எப்டி வருகிறது எதனால் வருகின்றது.. நமது சிறிய வயதில் இருதய நோயினை  எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்பதுக்கு சில டிப்ஸ்சிறு வயதில் இருத நோய் வர இது தான் காரணம் சிறு வயதில் இருத நோய் வர இது தான் காரணம் Reviewed by Irumbu Thirai News on April 26, 2019 Rating: 5

வியர்க்குருவினை சீக்கிரம் இல்லாமல் செய்ய

April 20, 2019
வியர்க்குரு எல்லாருக்கும் இருக்குன்ற இயல்பான நோயாகும்..
இது அதிக வெப்ப நிலை காரணமாக வியர்க்குரு ஏற்படும். அதனை குறைப்பதற்கான சில டிப்ஸ்கள்..
பிடித்து இருந்தால் பகிருங்கள்
வியர்க்குருவினை சீக்கிரம் இல்லாமல் செய்ய வியர்க்குருவினை சீக்கிரம் இல்லாமல் செய்ய Reviewed by Irumbu Thirai News on April 20, 2019 Rating: 5

கண் துடிப்பது நல்லதா? கெட்டதா?

April 18, 2019
கண்கள் துடித்தால் நாம் நினைப்பது நமக்கு ஏதோ நடக்கப்போகிறது என. இது பாரம்பரியமான பரவலான நம்பிக்கை உள்ளது.
வலது கண் துடித்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் எனவும் இடது கண் துடித்தால் வெளியூர் பயணம் என பொதுவாக நம்பப்படுகிறது. கண் இமைகள் துடிப்பதையே கண் துடிக்கிறது என்கிறோம்.

இதற்கான காரணம் என்ன?
கண்ணின் இமைப்பகுதி, வெளிப்புற நரம்பு மண்டலம், உடலில் செல்லும் மின்னோட்டம், மின்னணுக்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இந்த இணைப்பில் மிக நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். ரத்த ஓட்டம் எப்படிச் சீராகச் செல்லுமோ அதுபோல, உடலுக்குத் தேவையான மின்னோட்டமும் அனைத்து உறுப்புகளுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும்.நம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களும் அதிக மன அழுத்தம், தூக்கமின்மையால் ஏற்படும் சோர்வு, முக்கிய சதை மற்றும் தோல் பகுதியில் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள் (Biochemical changes) ஊட்டச்சத்துக் குறைபாடு, மற்றும் தொடர்ந்து கணினி மற்றும் ஸ்மார்ட்போன் என அதிக கதிர்வீச்சுகள்கொண்ட பொருட்களைப் பார்ப்பது, கண்களில் ஈரப்பதம் குறைவது, சிலருக்குக் கண்களில் நீர் வழிவது, எரிச்சல், வீக்கம், அலர்ஜி போன்ற காரணங்களால் கண் இமைகள் துடிக்கக்கூடும்.

இதில் வெளிப்புற நரம்பு மண்டலத்தில் செல்லும் நரம்புகளுக்குச் செல்ல வேண்டிய மின்னணுக்களில் (Electrons) மிக நுண்ணிய மாற்றம் ஏற்படும்போது, கண் இமைகள் துடிக்கும். சில சமயங்களில், ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கண் இமைகள் துடித்துவிட்டு நின்றுவிடும். சிலருக்கு இடை இடையே கண் தொடர்ந்து துடித்துக்கொண்டேயிருக்கும். இதற்கு பயப்படத் தேவை இல்லை.தீர்வு என்ன?
நமது கண்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளவே நாம் கண்களைச் சிமிட்டுகிறோம். கண் சிமிட்டுதல், இதயம் துடித்தல் போன்றவை நம் உடலில் நடக்கும் இயல்பான செயல்பாடுகள் அதனை பெரிதாக அளட்டிக் கொள்ள வேண்டாம்
எவ்வகையான சிகிச்சையும் இதற்கு தேவை இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடாது. ஏனெனில் இது சிகிச்சை செய்யக்கூடிய நோய் அல்ல. மாத்திரை மருந்துகளை உட்கொள்வதோ கூடாது.

ஒரு நாளைக்கு கண் இமைகள் 10 முறை துடித்தால்கூட நார்மல்தான். அதுவே விட்டு விட்டு 25 முறைக்கு மேல் துடித்துக்கொண்டிருந்தால் வைத்தியரை நாடுங்கள். கண்களுக்கும், நரம்பு மண்டலத்துக்கும் என்ன பிரச்னை என மருத்துவர் பரிசோதனை செய்து சிகிச்சையை அளிப்பார்.
கண் துடிப்பது நல்லதா? கெட்டதா? கண் துடிப்பது நல்லதா? கெட்டதா? Reviewed by Irumbu Thirai News on April 18, 2019 Rating: 5
Powered by Blogger.