இது ஒரு அரியவகைப் புற்று நோயாகும். திசுக்கள், தசைகள், தசைநார்கள், மூட்டுகள் மற்றும் பிற உடல் அமைப்புகள் வழியாக மிகவும் மெதுவாகப் பரவுவதால்,
இந்த வகைப் புற்றுநோயை கண்டறிவது மிகவும் கடினம்.
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, மனித உடலில் புற்று அல்லாத பல கட்டிகள் உள்ளன. இவை உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதில்லை. உயிருக்கு ஆபத்தானதும் அல்ல. ஆனால், புற்றாக மாறுவதற்குச் சாத்தியமுடைய கட்டிகள் படிப்படியாகக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடுகின்றன. இதுதான்
’சாஃப்ட் திசு சார்கோமா’ என்று அழைக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
தசைகளில் வீக்கம், எலும்புகள் மற்றும் கட்டிகளில் ஏற்படும் வலி நீண்டகாலம் தொடர்வது இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.
இந்த நோய் உடலின் எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம் என்றும், பொதுவாக கைகள் மற்றும் கால்களிலுள்ள தசைகளை பாதிக்கிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(பிபிசி)
(பிபிசி)
'சாஃப்ட் திசு புற்றுநோய்' என்றால் என்ன?
Reviewed by irumbuthirai
on
August 25, 2019
Rating:
Reviewed by irumbuthirai
on
August 25, 2019
Rating:

No comments: