பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பீடாதிபதிகள் உட்பட பலருக்கு வழக்கு:


பகிடிவதைக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையை உயர் கல்வி அமைச்சு அமுல்படுத்தவுள்ளது. அந்தவகையில் 2018/2019 கல்வி ஆண்டுக்காக 

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தொல்லைக்கு உட்படுத்தினால் அதனுடன் தொடர்புபட்ட மாணவர்கள், இந்த செயற்பாட்டிற்கு உதவி ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உயர்நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே.மாயாதுண்னே கூறியுள்ளார். 

மாணவர் ஒருவர் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு மரணம் அல்லது ஊனமுற்ற நிலைக்கு உள்ளானால் சம்பந்தப்பட்ட பீடாதிபதி முதல் பொறுப்பு கூறவேண்டிய அனைத்து தரப்பினருக்கும் எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
கொடூர பகிடிவதைக்கு எதிராக சட்டத்தில் உள்ள விதிகள் கடுமையானது என்றும் அவர் தெரிவித்தார். 10 வருட சிறைத்தண்டனையும் வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்னார்.

பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்கள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் தொல்லைகளின் காரணமாக வருடாந்தம் 2,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு விலகிச் செல்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பீடாதிபதிகள் உட்பட பலருக்கு வழக்கு: பகிடிவதைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: பீடாதிபதிகள் உட்பட பலருக்கு வழக்கு: Reviewed by irumbuthirai on August 30, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.