ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை நிலைபடுத்தி கொடுப்பணவு


நுவரெலியா மாவட்டத்தின் அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் அபிவிருத்தி இணைப்புக் குழு இணைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.பியதாச தலைமையில் நடைபெற்றது. 

இதில் உரையாற்றிய விஷேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மலையத்தின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்து ஆசிரியர் பயிற்சிகளை முடித்துக் கொண்ட பயிற்றபட்ட ஆசிரியர்களுக்கு தரம் 3-1 ற்கு பதவி நிலைபடுத்தி அவர்களுக்கான கொடுப்பனவை மத்திய மாகாணம் வழங்காததினால் பயிற்றபட்ட ஆசிரியர்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். ஏனைய சில மாகாணங்களில் அவர்களுக்கான கொடுப்பனவு வழங்கபட்டு வருகின்றது. அதேபோல் இவர்களுக்கும் கூடிய விரைவில் வழங்கப்பட வேண்டும் என்றார். 
இதற்கு பதிலளித்து உரையாற்றிய மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னக்கோன் இதற்கான தீர்வினை 

பெற்றுக் கொடுப்பதில் நானும் இணைந்துக் கொள்கின்றேன். தற்போது பயிற்சி பெற்ற 215 ஆசிரியர் உதவியாளர்களின் விபரம் கிடைத்து உள்ளது. இவர்களில் மூன்று இரண்டுக்கு நிலைப்படுத்த தேவையான அனைத்து விபரங்களும் சரி செய்யபட்டு வருகின்றன. இன்னும் ஒரிரு வாரங்களில் இவர்களுக்கான பதவியை நிலைபடுத்தி கொடுப்பனவை மத்திய மாகாணம் மூலம் வழங்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதே போல் பயிற்சி பெற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கும் பயிற்சி பெற இருப்பவர்களுக்கும் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை நிலைபடுத்தி கொடுப்பணவு ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை நிலைபடுத்தி கொடுப்பணவு Reviewed by irumbuthirai on August 26, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.