முக்கிய செய்திகள் - 10/4/2025 வியாழக்கிழமை

April 11, 2025

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 




சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த மொத்த வரி விகிதம் 145% என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 




நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணமாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவிக்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தான் ஹடாயிக்கிடம்( (Marlar Than Htaik) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார். 




ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் எனவும் ஒருநாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 




பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெற்றேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான முதல் நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். 




நடப்பு IPL தொடரில் இருந்து சென்னை அணியின் தலைவராக செயற்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக மீண்டும் மகேந்திரசிங் தோனி தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். 





கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. 





போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட GovPay செயலி மூலம் இந்தக் கொடுப்பனவுகளைச் செய்யலாம். இந்த திட்டம் குருநாகல் முதல் அனுராதபுரம் வரையிலான வீதியின் 11 இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 





பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின் போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கை மற்றும் வழிமுறை பின்பற்றப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 




 ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். 




பொலிஸ் துறைக்கு என தனியான சம்பளக் கட்டமைப்பை வகுப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 




அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


முக்கிய செய்திகள் - 10/4/2025 வியாழக்கிழமை முக்கிய செய்திகள் - 10/4/2025 வியாழக்கிழமை Reviewed by Irumbu Thirai News on April 11, 2025 Rating: 5

செய்திச் சுருக்கம் - 9/4/2025 புதன்கிழமை

April 09, 2025

நாட்டின் அரச நிறுவன கட்டமைப்பின் கௌரவம் மற்றும் பெறுமதிகளை அழித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆட்சி செய்வதாகவும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரச சேவையில் எந்தவொரு பகுதியும் சரிவதற்கு இடமளிக்கவில்லை என்றும் அதிகாரிகள் பொறிமுறை இனியும் மாறத் தயாராக இல்லையெனில், மே மாதத்திற்குப் பிறகு அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற “தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029” வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்தார். 


----------------- 

உலகம் முழுவதும் சுமார் 115 நாடுகளுக்கு பரவியுள்ள "சிக்குன்குனியா" நோய் தற்போது இலங்கையிலும் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். நாட்டில் 190 சிக்குன்குனியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அவற்றில் 65 பேர் மருத்துவ ரீதியாக சிக்குன்குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


----------------- 


கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதற்காக விவசாயிகளை அதிகளவில் ஊக்குவிக்கும் நோக்கில், பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டு செயல்முறையை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்ஆராச்சி தெரிவித்துள்ளார். மேற்படி, விலங்குகள் இறந்தாலோ அல்லது முழுமையாக ஊனமுற்றாலோ காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை நாடு முழுவதும் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 


----------------- 


அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சீனா 84% வரி விதித்துள்ளது. 34% வீதமாக இருந்த வரியையே சீனா இவ்வாறு 84% ஆக அதிகரித்துள்ளது. சீனப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி, 104% வரிகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

----------------- 


கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, அண்மையில் கைது செய்யப்பட்ட மேர்வின் சில்வா மீண்டும் இம்மாதம் 21 ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


----------------- 

 கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


----------------- 


2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை இன்று (09) முதல் ஏப்ரல் 30 திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம். அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 


----------------- 

பராட்டே சட்டம் தொடர்பில் வழங்கப்பட்ட சலுகை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனுக்கு 2025-12-31 வரையும் 25- 50 மில்லியனுக்கு 2025-09-30 ம் 50 மில்லியனுக்கும் அதிகளவான கடனை பெற்றுவர்களுக்கு 2025 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
செய்திச் சுருக்கம் - 9/4/2025 புதன்கிழமை செய்திச் சுருக்கம் - 9/4/2025 புதன்கிழமை Reviewed by Irumbu Thirai News on April 09, 2025 Rating: 5

செய்திச் சுருக்கம் - 8/4/2025 செவ்வாய்க்கிழமை

April 08, 2025

குருநாகலை, வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று (07) இரவு ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான்கு பேர் உயியிரிழந்ததுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


------------------ 


நேற்று(7) பாடசாலை நிறைவடைந்த பின்னர், ஹட்டனில் இருந்து டிக்கோயா போடைஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணித்த மாணவி ஒருவரின் கால் அதே பஸ்ஸில் பயணித்த ஆசிரியை ஒருவரின் சேலையில் மிதிபட்டதால் அந்த ஆசிரியை மாணவிக்கு அறைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது போலீஸ் விசாரணைகள் இடம்பெறுகின்றன. 


------------------  


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக மட்டக்களப்பில் வைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 


------------------ 


பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் காரணமாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

------------------ 


வைத்தியரின் பரிந்துரையின்றி, அவிசாவளை பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட மருந்தை உட்கொண்டதால், 3 மாத கர்ப்பிணியான பெண் ஹோமாகம அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 


------------------ 

நேற்றைய தின சரிவில் இருந்து கொழும்பு பங்குச்சந்தை சற்று மீண்டு வருவதாக இன்றைய புள்ளி விவரங்கள் பதிவாகியுள்ளன. 



------------------ 


இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 109 டிப்போக்களில் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், 54 டிப்போக்கள் இலாபம் ஈட்டுவதாகவும் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 


------------------ 

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளமானது ஏப்ரல் 10 ஆம் தேதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு முடியாத பட்சத்தில் நிலுவைத் தொகையானது இம்மாதம் 25 ஆம் தேதி வழங்க வேண்டும் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 


------------------ 

நானுஓயா முதல் பதுளை வரை சேவையில் ஈடுபடும் கலிப்சோ தொடரூந்து சேவை இன்று ஆரம்பமானது. சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவையானது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் இடம்பெறும். 


------------------ 

அரச சேவைக்கு 30,000 பேரை சேர்த்துக் கொள்ளும் திட்டத்தின் ஒரு கட்டமாக 18,853 பேரை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. 

------------------ 


அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையினால் ஏற்படும் தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்களை உள்ளடக்கி கடிதம் ஒன்றை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அணில் ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

------------------ 


13,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த ஒருவகையான ஓநாய் இனத்தின் மூன்று குட்டிகளை மரபணு முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 

------------------ 


இஸ்ரேலுக்கு AI தொழில்நுட்ப ஆயுதங்களை வழங்கி பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிவுக்கு உடந்தையாக இருந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுப்பிய அதில் பணிபுரிந்த மென்பொருள் பொறியியலாளரான மொரோக்க நாட்டு பெண்ணுக்கு குவைத் நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் உயர் சம்பளத்துடன் தொழில் வழங்க முன்வந்துள்ளார்.




Previous:



செய்திச் சுருக்கம் - 8/4/2025 செவ்வாய்க்கிழமை செய்திச் சுருக்கம் - 8/4/2025 செவ்வாய்க்கிழமை Reviewed by Irumbu Thirai News on April 08, 2025 Rating: 5

சகல பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

April 08, 2025

சகல மஸ்ஜித் நிர்வாக உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது. 

அதாவது மஸ்ஜிதையோ அதன் சுற்றுச்சூழலையோ மஸ்ஜிதில் தாம் வகிக்கும் பதவியையோ எதிர்வரும் தேர்தலுக்காக பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மீறி குறித்த விடயம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் வக்ப் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிவித்தல் கடிதத்தினை கீழே காணலாம்.



Previous:





சகல பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்! சகல பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on April 08, 2025 Rating: 5

புதிய சுற்றறிக்கை: ஏப்ரல் 10 ஆம் திகதி அதிகரித்த சம்பளம் கிடைக்காதவர்களுக்காக...

April 08, 2025

வரவு செலவு திட்டத்தின் படி அதிகரிக்கப்பட்ட சம்பளமானது இம்மாதம் 10ம் தேதி வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் இருந்து அதை வழங்க முடியாவிட்டால் வழமையான சம்பளத்தை 10ம் திகதி வழங்கிவிட்டு இம்மாதம் 25 ஆம் தேதி ஏனைய நிலுவைகளை அதாவது புதிய சம்பளத்தின்படி நிலுவை வழங்கப்பட வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகங்கள் அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கையைக் கீழே காணலாம்.




Previous:
புதிய சுற்றறிக்கை: ஏப்ரல் 10 ஆம் திகதி அதிகரித்த சம்பளம் கிடைக்காதவர்களுக்காக... புதிய சுற்றறிக்கை: ஏப்ரல் 10 ஆம் திகதி அதிகரித்த சம்பளம் கிடைக்காதவர்களுக்காக... Reviewed by Irumbu Thirai News on April 08, 2025 Rating: 5

செய்திச் சுருக்கம் - 7/4/2025 திங்கட்கிழமை

April 07, 2025

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை 21,763,170 என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 28.1% என்ற மிகப்பெரிய மக்கள் தொகை மேல் மாகாணத்தில் வசிக்கும் அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் என்பதுடன் அதிக மக்கள் தொகை கம்பஹா மாவட்டத்தில் 2,433,685 பேரும் இரண்டாவது இடத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் 2,374,461 பேர் வசிக்கின்றனர். ஆகக் குறைந்த மக்கள் தொகை முல்லைத்தீவில் 122,542 பேராகும். அதிகபட்ச சராசரி வளர்ச்சி விகிதம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது, இது 2.23 ஆகவும் மிகக் குறைந்த சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் வவுனியா மாவட்டத்தில் 0.001 ஆக பதிவாகியுள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேர் என்ற அதிகபட்ச மக்கள் தொகை அடர்த்தி கொழும்பு மாவட்டத்திலும் மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 பேராகும். குடிசன தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, டெப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது விசேட அம்சமாகும். 

------------------- 


இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 மார்ச் மாதத்தில் 7.1% உயர்ந்து 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. 


-------------------  


இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த முஹம்மத் ருஷ்டி என்பவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த கைதுக்கு எதிராக பரவலாக எதிர்ப்புகள் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. 

------------------- 
 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 

------------------- 


மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார். 

------------------- 


நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் குறித்த வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி, வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிகள் எடுத்த முடிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் இன்று (07) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

------------------- 


இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனை தொடர்பாக எந்த முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

------------------- 


பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை செயல்படுத்துவதற்கான சுற்றறிக்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். "Clean Sri Lanka" திட்டத்திற்கு இணங்க, அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு மேற்படி பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் செயல்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 


------------------- 


உலக சுகாதார தினம் இன்று (07) அனுஷ்டிக்கப்படுகிறது. 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக சுகாதார தினம் நினைவுகூறப்படுகிறது. 


------------------- 


இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.
செய்திச் சுருக்கம் - 7/4/2025 திங்கட்கிழமை செய்திச் சுருக்கம் - 7/4/2025 திங்கட்கிழமை Reviewed by Irumbu Thirai News on April 07, 2025 Rating: 5

செய்திச் சுருக்கம்: 6-4-2025 ஞாயிற்றுக்கிழமை

April 07, 2025

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் சென்றார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடி இலங்கை்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த 4வது தடவை இதுவாகும். 

------------------ 

யாழ், சுழிபுரத்தில் சுடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, கல்லறைகளையும் உடைத்து அதில் சுற்றுலா மையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 150இற்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் , அச்சிறுமியின் உடலம் நீதிமன்ற உத்தரவில் குறித்த சுடுகாட்டிலையே புதைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை சுடுகாட்டுக்காக வேறு பகுதியில் இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கி தருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

------------------  


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. 

 ------------------ 

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் OIC ஐ பதவி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்தில் கடமை தவறியதாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

------------------ 


தேசிய மக்கள் சக்தியின் (NPP) கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். உயிரிழக்கும் போது வயது 38 ஆகும். 

------------------ 

நல்லாட்சி காலத்தில் தாம் தொடங்கிய திட்டமான 5,000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட நாட்டின் முதல் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்பாட்டு விவசாய சேமிப்பு களஞ்சியத்தை தம்புள்ளையில் இந்திய பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ தி சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். நல்லாட்சியின் தோல்வியால் குறித்த திட்டத்தை நிறைவு செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

------------------ 

அரச நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் நிலையான கழிவு முகாமை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு நிறுவனங்களையும் 3R எண்ணக்கருவை கடைப்பிடிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்சுற்றறிக்கை நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் நிறுவனங்களுக்கு முறையான கழிவு முகாமைத்துவ திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

------------------ 

வவுனியா சிறைச்சாலைக்குள் பற்பசையினுள் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


------------------ 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு பெரியளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹேண்ட்ஸ் ஆஃப்" (Hands Off) எனும் பெயரில், அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 1,200 இடங்களில் பேரணிகள் நடந்துள்ளன. டிரம்ப் அமெரிக்க அதிபரானதிலிருந்து அவருக்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய போராட்டம் இது. ட்ரம்பின் புதிய வரிக் கொள்கைகள் குடிவரவு கட்டுப்பாடுகள் வெளியுறவு கொள்கை மாற்றங்கள் வேலைய இழப்புக்கள் போன்ற பல்வேறு காரணங்களை வைத்து இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. 


------------------ 


இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு சென்ற பிரதமர் மோடி மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே அமைக்கப்பட்ட செங்குத்து தூக்கு பலமான பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். இது கீழால் கப்பல் செல்லும்போது தானாக உயர்ந்து வழிவிடக்கூடிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 


------------------ 


தெற்கு காசாவில் கடந்த மார்ச் 23ஆம் தேதி அவசர கால ஊழியர்கள் 15 பேர் கொல்லப்பட்டமை தமது ராணுவ வீரர்களின் தவறு என இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ஹெட் லைட் அல்லது ஒளிரும் விளக்குகள் இல்லாமல் சந்தேகத்திற்கிடமான முறையில் இரவு வேளை வாகனங்கள் நெருங்கி வந்ததால் ராணுவம் தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால் அதில் கொல்லப்பட்ட ஒரு அவசர கால ஊழியரால் பிடிக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி உள்ளது. அதில் குறித்து வாகனங்கள் ஒளிரும் விளக்குகளை எரிய விட்டிருப்பதை காண முடிகிறது. இதில் இஸ்ரேலின் பொய்யும் பொறுப்பற்ற தன்மையும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட நிலையில் தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
செய்திச் சுருக்கம்: 6-4-2025 ஞாயிற்றுக்கிழமை செய்திச் சுருக்கம்: 6-4-2025 ஞாயிற்றுக்கிழமை Reviewed by Irumbu Thirai News on April 07, 2025 Rating: 5

செய்தி சுருக்கம் - 5/4/2025 சனிக்கிழமை

April 06, 2025

மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றும், இது தனக்கு மாத்திரமன்றி, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த விருது என்றும் அது குறித்து ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 1) மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட (HDVC) இடை இணைப்பை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2) டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக மக்கள் மட்டத்தில் செயல்படுத்தப்படும் வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 3) திருகோணமலையை வலுசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 4) பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 5) சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், 6) மருந்து விதிமுறைகள் ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் 7) கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற 07 ஒப்பந்தங்கள் கைச்சாத்திரப்பட்டன. இதே வேளை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 1996 உலகக் கிண்ணத்தை வென்ற கிரிக்கெட் அணியின் வீரர்களை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரையும் மோடி சந்தித்தார். நரேந்திர மோடிக்கும் மலையக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  

------------------------------

IPL தொடரில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்றுள்ள டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. அத்துடன் ஒரு போட்டியில் வெற்றிப்பெற்று தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 08ஆவது இடத்தில் உள்ளது. 

------------------------


சந்தையில் முட்டையின் விலை மீண்டும் 40 வரை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


----------------------

எதிர்வரும் 9ம் திகதி 140,000 மில்லியன் ரூபா பெமதியான திறைசேறி உண்டியல்கள் வழங்கப்பட உள்ளதாக மத்திய வங்கி Tiktok App ற்கு மேலும் 75 நாட்கள் இன்று காலக்கெடுவை ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கி உள்ளார் 
---------------------------

கம்போடியாவில் ரோனி என்ற எலி புதிய உலக 
சாதனை படைத்துள்ளது அதாவது 2021 முதல் இன்று வரை 109 கன்னிவடிகள் 15 வெடிக்காத மருந்துகளையும் கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ளது.
செய்தி சுருக்கம் - 5/4/2025 சனிக்கிழமை செய்தி சுருக்கம் - 5/4/2025 சனிக்கிழமை Reviewed by Irumbu Thirai News on April 06, 2025 Rating: 5
Powered by Blogger.