Results for Sports

LPL கிண்ணம் செய்யப்பட்ட விதம்: வரலாற்றில் முதற் தடவை எனவும் அறிவிப்பு!

July 30, 2023


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்குபற்றும் 4வது லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடர் இன்று (30) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 


இன்றைய முதலாவது போட்டி, கடந்த சீசனில் செம்பியனான ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் (JK Vs CS) இடையில் இடம்பெறவுள்ளது. 


நான்கவாது LPL கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 24 போட்டிகள். 12 ஆரம்ப சுற்று போட்டிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும், மேலும் 8 ஆரம்ப சுற்று போட்டிகள் கண்டி பல்லேகலை மைதானத்திலும் நடைபெறவுள்ளன. இறுதி சுற்றின் மூன்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .


இவ்வருட செம்பியனுக்கான வெற்றிக்கிண்ணம் நேற்று முன்தினம் (28)கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டது. 


இது மாத்திரமன்றி இவ்வருட செம்பியனுக்கு வழங்கப்படும் LPL கிண்ணம் மீள்சுழற்சி செய்யப்பட்ட அலுமினிய கேன்களினால் தயாரிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். மறுசுழற்சி முறையில் கிரிக்கெட் கிண்ணம் உருவாக்கப்பட்டது வரலாற்றில்  இதுவே முதல் முறையாகும். கடற்கரையில் சேகரிக்கப்பட்ட 2,523 அலுமினிய கேன்களைப் பயன்படுத்தி இந்த கிண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. 

 
LPL போட்டியின் பிரமாண்டமான ஆரம்ப விழா இன்று மாலை 5.30 மணிக்கு கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மைதானத்தின் வாயிற் கதவுகள் பிற்பகல் 3.30 மணி முதல் திறக்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Click the link below for LPL match schedule:




Previous:


LPL கிண்ணம் செய்யப்பட்ட விதம்: வரலாற்றில் முதற் தடவை எனவும் அறிவிப்பு! LPL கிண்ணம் செய்யப்பட்ட விதம்: வரலாற்றில் முதற் தடவை எனவும் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 30, 2023 Rating: 5

கின்னஸ் சாதனையுடன் ஆரம்பமான IPL இறுதிப் போட்டி! அறிமுகமான முதல் சீசனிலேயே சம்பியன் பட்டத்தை வென்ற அணி!

May 30, 2022


15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்றைய தினம் நிறைவடைந்தன. நேற்றைய இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பங்குபற்றின. 

இறுதிப் போட்டியானது கின்னஸ் உலக சாதனையுடனே ஆரம்பமானது. அதாவது போட்டிக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் சீருடையான ஜேர்சி மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இது 66 மீட்டர் நீளமும் 42 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.  

இந்த ஜேர்சியில் 15வது ஐபிஎல் தொடர் என குறிக்கப்பட்டதுடன் விளையாடிய 10 அணிகளின் இலச்சினைகளும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. 

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நிறைவு விழாவில் இடம்பெற்றிருந்தது. 

இறுதிப்போட்டி நடைபெற்றது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திரமோடி மைதானத்திலாகும். 132,000 பேருக்கான இருக்கை வசதிகள் இதில் உள்ளன.

இம்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது இந்த சீசனில்தான் அறிமுகமான அணி என்பது குறிப்பிடத்தக்கது. 


கின்னஸ் சாதனையுடன் ஆரம்பமான IPL இறுதிப் போட்டி! அறிமுகமான முதல் சீசனிலேயே சம்பியன் பட்டத்தை வென்ற அணி! கின்னஸ் சாதனையுடன் ஆரம்பமான IPL இறுதிப் போட்டி! அறிமுகமான முதல் சீசனிலேயே சம்பியன் பட்டத்தை வென்ற அணி! Reviewed by Irumbu Thirai News on May 30, 2022 Rating: 5

நடுவராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல செய்த சாதனை

November 21, 2021

200 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி யின் போட்டி நடுவராக கடமையாற்றிய முதல் நபர் என்ற சாதனையை இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல படைத்துள்ளார். 
 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் 

தலைவரான இவர் தற்போது ஐசிசியின் போட்டி நடுவராக கடமையாற்றி வருகின்றார். 
 
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியே அவர் நடுவராக கடமையாற்றும் 200 ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
நடுவராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல செய்த சாதனை நடுவராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல செய்த சாதனை Reviewed by Irumbu Thirai News on November 21, 2021 Rating: 5

தேசிய ரீதியில் Volleyball மற்றும் Netball வீரர்களைத் தெரிவு செய்தல்

August 07, 2021

கரப்பந்து (Volleyball) மற்றும் வலைப்பந்து (Netball) என்பவற்றுக்கு தேசிய ரீதியில் வீர, வீராங்கனைகளை தெரிவுசெய்வதற்கான செயற்திட்டம் ஒன்றை விளையாட்டு அமைச்சும் தேசிய இளைஞர் படையணியும் சேர்ந்து ஆரம்பித்துள்ளது. 

வயதெல்லை: 24 ற்கு குறைவானவர்கள். 

ஆண்கள் உயரம்: 6 அடி அல்லது அதற்கு மேல். 

பெண்கள் உயரம்: 5.11 அடி அல்லது அதற்கு மேல். 

விபரங்களை அனுப்பும் முறை: 
உங்கள் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், வயது, தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி என்பவற்றை 0703965016 என்ற இலக்கத்திற்கு Whatsapp செய்யவும். 

மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்: 0710377377.
தேசிய ரீதியில் Volleyball மற்றும் Netball வீரர்களைத் தெரிவு செய்தல் தேசிய ரீதியில் Volleyball மற்றும் Netball வீரர்களைத் தெரிவு செய்தல் Reviewed by irumbuthirai on August 07, 2021 Rating: 5

புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா!

July 31, 2021

ஒலிம்பிக் 100M ஓட்டப்போட்டியில் ஜமைக்கா பல்வேறு சாதனைகளை படைப்பது வழமை. 
இதற்கு முன்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் உசைன் போல்ட் சாதனைகளை நிகழ்த்தியது அறிந்ததே. 
அந்தவகையில் இம்முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா மீண்டும் சாதனை படைத்துள்ளது. 
இன்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா 10.61 வினாடிகளில் ஓடி முடித்து தங்கம் வென்றார். 
இதற்கு முன்னர் 10.62 வினாடிகளே இந்த போட்டிக்கு சாதனையாக இருந்தது. அது அமெரிக்க வீராங்கனை பிளோரன்ஸ் நிகழ்த்திய சாதனையாகும். அதனை தற்போது ஜமைக்கா முறியடித்துள்ளது.
புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா! புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த ஜமைக்கா! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்...

July 24, 2021

உலகின் மிகப்பெரும் விளையாட்டு போட்டி நிகழ்வான ஒலிம்பிக் போட்டிகள் 04 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிறது. 

அந்த வகையில் கடந்த வருடம் (2020) ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் பரவல் காரணமாக இந்த வருடம் நடைபெறுகிறது. 

இந்த வருடமும் அங்கு போட்டிகளை நடத்த வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஜப்பான் அரசும் ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியாக இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து இந்த போட்டிகளை நடத்துகிறது. 

இதன் தொடக்க விழா நேற்று(23) ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டு அரங்கில் இலங்கை நேரப்படி மாலை 04:30 மணிக்கு (ஜப்பான் நேரம் இரவு 08.00மணி) ஆரம்பமானது. 

தொடக்க விழாவானது உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 1000 பேருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

இலங்கை சார்பாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். 

இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான சில முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம். 
இது 32வது ஒலிம்பிக். 

 

ஜப்பானில் நடைபெறும் இரண்டாவது சந்தர்ப்பம். இதற்கு முன்னர் 1964இல் முதல்முறையாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. 

 

33 வகையான விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடைபெறுகின்றன. 

 

205 நாடுகளை சேர்ந்த 11,326 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

 

 
ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 நிறைவு பெறுகிறது. 

 

உணர்வுகளால் ஒன்றிணைவோம் (United by Emotions) என்பது இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கான குறிக்கோள் வாசகம் (Motto) ஆகும்.

 

 
இம்முறை புதிதாக 5 விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. (Baseball / Softball, Karate, Skateboarding, Sport Climbing & Surfing) 

ஜப்பானில் அவசரநிலை பிரகடனம் செய்து பார்வையாளர்கள் அனுமதியின்றி இம்முறை போட்டிகள் நடைபெறுவது முக்கிய விடயமாகும்.

 

 
இலங்கையில் இருந்து இம்முறை 9 வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். 

 

இம்முறை போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இம்முறை போட்டிகளில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்ற பசறை தமிழ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) உடற்கல்வி ஆசிரியை மாரிமுத்து அகல்யா ஜப்பானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்ற தெரிவான முதல் இலங்கைத் தமிழர் இவராவார். 

 

அதேபோல் குத்துச்சண்டை போட்டிகளுக்கான பெண் நடுவராக இலங்கையைச் சேர்ந்த நெல்கா ஷிரோமலாவும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை மெய்வல்லுனர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவது 1928ல் ஆரம்பமானது. 

1948 இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது இலங்கைக்கு முதலாவது பதக்கம் கிடைத்தது. 400M தடைதாண்டலில் Duncan White என்பவர் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். 

அதன்பின்னர் 2000 ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 M ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சுசந்திகா மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். 





எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்... எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்... Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

குமார் சங்கக்காரவிற்கு ICC வழங்கிய கௌரம்:

June 13, 2021

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) குமார் சங்கக்காரவை ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (ICC Hall of Fame) என்ற பட்டியலில் சேர்த்து கௌரவித்துள்ளது. 
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய வீரர்களை ICC இந்த பட்டியலில் சேர்த்து கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் 1996 - 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ICC Hall of Fame பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்காரவை சேர்த்துள்ளது. இத்தகைய கௌரவத்தை பெறும் 2வது இலங்கை வீரர் இவராவார். 
 இதற்கு முன்னர் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குமார் சங்கக்காரவிற்கு ICC வழங்கிய கௌரம்: குமார் சங்கக்காரவிற்கு ICC வழங்கிய கௌரம்: Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் ICC யின் புதிய தீர்மானங்கள்!

June 01, 2021

T20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்கவும் அதேபோன்று 2027 மற்றும் 2031 இல் இடம்பெறவுள்ள ஒரு நாள் உலக கிண்ண போட்டியில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கவும் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) தீர்மானித்துள்ளது. 
இதேவேளை 2024 - 2030 வரை T20 உலக கிண்ண போட்டியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் ICC யின் புதிய தீர்மானங்கள்! உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் ICC யின் புதிய தீர்மானங்கள்! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை

May 16, 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வருடம் (2020) நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அந்தவகையில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் ஜப்பானியர்கள் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர். 
அதாவது ஒலிம்பிக்கை இரத்து செய்யுமாறு கோரி சுமார் 350,000 கையொப்பங்களுடனான விண்ணப்பத்தை டோக்கியோ ஆளுநருக்கும் ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் குழு அதிகாரிகளுக்கும் சமர்ப்பித்துள்ளனர். 
ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், விளையாட்டு வீரர்களையும் ஏக மனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலில் மாத்திரமே இந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
கொரோனா பரவல் காரணமாக டோக்கியோ உட்பட முக்கிய நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒலிம்பிக் தொடர்பில் மூன்றரை இலட்சம் கையொப்பங்களுடன் விடுக்கப்பட்ட கோரிக்கை  Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

இம்முறை நடைபெறும் IPL 2021 போட்டிகள் பற்றி...

April 10, 2021

2021 ற்கானதும் 14வதுமான IPL போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. இந்தப் போட்டிகள் எதிர்வரும் மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 60 
போட்டிகள் இடம்பெறும். மொத்தமாக 08 அணிகள் கலந்து கொள்ளும். 
போட்டிகள் மும்பை, சென்னை, பெங்களூரு, அஹமதாபாத், புதுடில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இம்முறை நடைபெறும் IPL 2021 போட்டிகள் பற்றி... இம்முறை நடைபெறும் IPL 2021 போட்டிகள் பற்றி... Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வடகொரியாவின் அதிரடி தீர்மானம்

April 07, 2021

இம்முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. 
தமது நாட்டு வீரர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 
பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. 1988ற்கு பின் முதன்முறையாக வடகொரியா இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளை தவறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வடகொரியாவின் அதிரடி தீர்மானம் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வடகொரியாவின் அதிரடி தீர்மானம் Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு:

March 20, 2021

கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக இவ்வருடம் ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகி, ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரையும் பரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஆரம்பமாகி, 
செப்டம்பர் 5 ஆம் திகதி வரையும் ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ளன. 
இம்முறை ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளில், வௌிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். 
வௌிநாட்டு பார்வையாளர்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாதென ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் குழுக்களுக்கு ஜப்பான் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு: ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட அனுமதி மறுப்பு: Reviewed by irumbuthirai on March 20, 2021 Rating: 5

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்...

February 27, 2021

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தைக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த புதன்கிழமை திறந்து வைத்தாா். 
நாட்டு மக்களின் வலிமையையும் நாட்டின் திறமையையும் இந்த கிரிக்கட் அரங்கம் பறைசாற்றுகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மையமாக 
இந்தியா அறியப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா உயா்ந்தநிலையை அடைந்ததைப் போல மற்ற விளையாட்டுகளிலும் முன்னணி பெறும். மற்ற துறைகளிலும் இந்தியா வளா்ச்சி காணும் என்று குடியரசுத் தலைவர் இந்நிகழ்வின் போது தெரிவித்தார். 
இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 1.32 லட்சம் போ் அமா்ந்து கிரிக்கெட் போட்டியைக் காண முடியும். 
இந்த அரங்கம் சா்தாா் படேல் அரங்கம் என்ற பெயரில்தான் முன்னர் இருந்தது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, அந்த அரங்கத்தைப் புதுப்பித்து, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமாகப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்... உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்... Reviewed by irumbuthirai on February 27, 2021 Rating: 5

இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி..

January 17, 2021

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 
 இதனால் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால் விளையாட முடியாமல் போயிருந்தது. 
இந்தநிலையில் கடந்த 24 மணித்தியாலயங்களில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட 02 PCR பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று 
உறுதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. 
இதன் காரணமாக அவரை இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி.. இங்கிலாந்து அணியிடம் ஒப்படைக்கப்படும் மொயீன் அலி.. Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

காலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மொயின் அலி ...

January 04, 2021

இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட நேற்றைய தினம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாட்டிற்கு வருகை தந்தது. 
அதில் சகல துறை ஆட்டக்காரரான மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதேவேளை 
கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மொயின் அலி காலியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 10 நாட்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இங்கிலாந்து அணி நாளை மறுதினம் தமது பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மொயின் அலி ... காலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மொயின் அலி ... Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா?

January 03, 2021

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் உட்பட 44 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட Rapid Antigen பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி வந்துள்ளது. அதில் முதலாவது போட்டி 
ஜனவரி 14ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஜனவரி 22ஆம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இந்த இரு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா? இலங்கை வந்த இங்கிலாந்து அணிக்கு கொரோனாவா? Reviewed by irumbuthirai on January 03, 2021 Rating: 5

ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு)

December 29, 2020

2020ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், கடந்த 10 ஆண்டு காலப் பகுதியில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரை தெரிவு செய்து ICC யினால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 
தெரிவு செய்யப்படும் முறை: 
90% ஆன தெரிவு, முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட குழு, ஊடகவியலாளர்கள், ஒளிபரப்பு நிறுவன பிரநிதிகள் உள்ளிட்டோரினாலும் 10% ஆன தெரிவு இரசிகர்களின் வாக்களிப்பின் மூலமும் இடம்பெறும். 
தெரிவு செய்யப்பட்டோர்: 
(1) தசாப்பதத்தின் ICC கிரிக்கெட் வீரருக்கான விருதான, சேர் கா(ர்)பீல்ட் சோபர் விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(2) தசாப்பதத்தின் ICC ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(3) தசாப்தத்தின் ICC கிரிக்கெட் வீராங்கனைக்கான, ரச்சல் ஹெஹொ பிளின்ட் விருதுக்கும் தசாப்தத்தின் ஒரு நாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கும் அவுஸ்திரேலிய அணியின் எல்லீஸ் பெர்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
(4) தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் வீரர் - ஸ்டீவன் ஸ்மித் (அவுஸ்திரேலியா). 
(5) தசாப்தத்தின் ரி20 கிரிக்கெட் வீரர் ரஷீட் கான் (ஆப்கானிஸ்தான்) 
(6) தசாப்தத்தின் சிறந்த அறத்துடன் விளையாடிய வீரர்- MS Dhoni (இந்தியா) 
இது தவிர ICC தசாப்தத்தின் டெஸ்ட் அணியில் சங்கக்கார, ஒருநாள் அணியில் மாலிங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 
இது தொடர்பில் ICC யினால் வெளியிடப்பட்ட பட்டியல் வருமாறு: 
Virat Kohli wins the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade 
Ellyse Perry wins the Rachael Heyhoe-Flint Award for ICC Female Cricketer of the Decade 
Steve Smith is ICC Men’s Test Cricketer of the Decade 
Virat Kohli is ICC Men’s ODI Cricketer of the Decade 
Ellyse Perry is ICC Women’s ODI Cricketer of the Decade 
Rashid Khan is ICC Men’s T20I Cricketer of the Decade 
Ellyse Perry is ICC Women’s T20I Cricketer of the Decade 
Kyle Coetzer is ICC Men’s Associate Cricketer of the Decade 
Kathryn Bryce is ICC Women’s Associate Cricketer of the Decade 
MS Dhoni wins ICC Spirit of Cricket Award of the Decade








ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) ICC யின் தசாப்த விருது பெற்றோரும் தெரிவு முறையும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்..

December 26, 2020

ஐபிஎல் போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் புதிய 2 அணிகளை சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது. 
அந்த வகையில் 2022 முதல் 
ஐபிஎல் தொடரில் மொத்தமாக 10 அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்.. 2022 முதல் IPL இல் ஏற்படும் மாற்றம்.. Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது LPL போட்டி முடிவும் வழங்கப்பட்ட விருதுகளும்..

December 16, 2020

Lanka Premier League - LPL (லங்கா பிரிமியர் லீக்) இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று (16) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. 
இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோல் கிளடியேடர்ஸ் (Galle Gladiators) அணியை தோற்கடித்து சாம்பியனானது. 
 Jaffna Stallions சார்பாக அதிக பட்சமாக சுஹைப் மலிக் 46 ஓட்டங்களை பெற்றார். 
போட்டியில் வழங்கப்பட்ட விருதுகளும் நபர்களும் பின்வருமாறு: 
Man of the Final – Shoaib Malik (Jaffna Stallions) 
Emerging Player of the Tournament – Dhananjaya Lakshan (Galle Gladiators) 
Fair Play Award – Dambulla Viiking 
Player of the Tournament – Wanindu Hasaranga (Jaffna Stallions)

இலங்கையின் முதலாவது LPL போட்டி முடிவும் வழங்கப்பட்ட விருதுகளும்.. இலங்கையின் முதலாவது LPL  போட்டி முடிவும் வழங்கப்பட்ட விருதுகளும்.. Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5

திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்...

December 16, 2020


அடுத்த வருடம் முதல் LPL போட்டிகளில் பல மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அவற்றுள் சில பின்வருமாறு:

  • அடுத்த வருடம் ஜூலை 29 போட்டிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜனவரி முதல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். 
  •  அடுத்த வருடம் புதிய அணியொன்று இணைத்துக் கொள்ளப்படும். அதாவது கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திருகோணமலையிலிருந்து அந்த அணி இடம் பெறும். 
  • அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு அணியிலும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இருவர் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்... திருகோணமலையிலிருந்தும் LPL அணி: அடுத்த வருடம் முதல் இடம் பெரும் மாற்றங்கள்... Reviewed by irumbuthirai on December 16, 2020 Rating: 5
Powered by Blogger.