Results for Sports

LPL இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகள்

December 14, 2020

லங்கா பிரிமியர் லீக் (LPL) தொடரின் நாளை மறு தினம் (16) இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடன் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இன்று அம்பாந்தோட்டையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தம்புள்ள வைகிங் அணியை தோற்கடித்து ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தது.
LPL இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகள் LPL இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகள் Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

புதிய தெரிவுக்குழுவிற்கு அனுமதி வழங்கிய நாமல்...

December 05, 2020

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
குழு விபரம்: 
குழுவின் தலைவராக அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக பிரமோத்ய விக்கிரமசிங்க, சமிந்த மெந்திஸ், எம்.எ.டயில்யு.ஆர் மதுரசிங்க, டி.நில்மினி குணரத்ன, ஹேமந்த தேவப்பிரிய மற்றும் எஸ்.எச்.யு கர்னேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
புதிய தெரிவுக்குழுவிற்கு அனுமதி வழங்கிய நாமல்... புதிய தெரிவுக்குழுவிற்கு அனுமதி வழங்கிய நாமல்... Reviewed by irumbuthirai on December 05, 2020 Rating: 5

இன்று தொடங்கியது LPL..

November 26, 2020

LPL (Lanka Premier League) கிரிக்கெட் தொடர் இன்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. 
இன்றைய முதல் போட்டியில் அன்ஜலோ மெத்திவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் விளையாடுகின்றன. 
LPL இல் 5 அணிகள் பங்குபற்றுகின்றன.
இன்று தொடங்கியது LPL.. இன்று தொடங்கியது LPL.. Reviewed by irumbuthirai on November 26, 2020 Rating: 5

புத்தளத்தில் விளையாட்டுத்துறை பாடசாலை - நாமல்

November 15, 2020

எதிர்வரும் 4 வருடங்களில் புத்தளத்தில் விளையாட்டுத்துறை பாடசாலை அமைக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றிலே தெரிவித்துள்ளார். 
 மாவட்ட மட்டத்தில் திறமை காட்டும் மாணவர்களைக் கண்டறிந்து, தேசிய, சர்வதேச மட்டங்களுக்கு முன்னேற வழிவகுப்பது தமது நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புத்தளத்தில் விளையாட்டுத்துறை பாடசாலை - நாமல் புத்தளத்தில் விளையாட்டுத்துறை பாடசாலை - நாமல் Reviewed by irumbuthirai on November 15, 2020 Rating: 5

10 முறை 100 ஓட்டங்கள் அமைத்த முதல் ஜோடி

October 15, 2020

IPL போட்டியில் 10 முறை 100 ஓட்டங்கள் எடுத்த கூட்டணி அமைத்த முதல் ஜோடி என்கிற பெருமையை பெங்களூர் அணியைச் சேர்ந்த கோலி - டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்கள். 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28 ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இது நிகழ்ந்துள்ளது. 
இதுமாத்திரமன்றி
 IPL போட்டியில் கூட்டணி அமைத்து 3000 ஓட்டங்கள் எடுத்த முதல் ஜோடி என்கிற பெருமையையும் கோலி - டி வில்லியர்ஸ் பெற்றுள்ளார்கள். கோலி - கெய்ல் கூட்டணி இதற்கு அடுத்ததாக 2,782 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 
ஐபிஎல் போட்டியில் அதிக 100 ஓட்டங்கள் கூட்டணி அமைத்தவர்கள். 
10 முறை - கோலி - டி வில்லியர்ஸ். 
9 முறை - கோலி - கெய்ல் 
6 முறை - தவன் - வார்னர் 
5 முறை - பேர்ஸ்டோவ் - வார்னர் 
5 முறை  - கம்பீர் - உத்தப்பா
10 முறை 100 ஓட்டங்கள் அமைத்த முதல் ஜோடி 10 முறை 100 ஓட்டங்கள் அமைத்த முதல் ஜோடி Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள்

September 18, 2020

 


எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் வீர, வீராங்கனைகளுக்கு வெளிநாடு செல்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
திறமையான 10 வீர - வீராங்கனைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்குடன் போட்டிகளுக்கான செலவினத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு விழாவில் 30 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள் புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள் Reviewed by irumbuthirai on September 18, 2020 Rating: 5

தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு..

August 16, 2020


"உங்களுடன் (தோனி) விளையாடுவதை தவிர வேறு என்ன விரும்பினேன். நெஞ்சம் முழுவதும் பெருமையுடன் நான் உங்களுடன் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்." என தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்துள்ளார். 
33 வயதான ரெய்னா கடந்த 2005ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக இந்தியாவுக்காக விளையாட தொடங்கினார். எம்.எஸ் தோனியை தொடர்ந்து இவரும் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு.. தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on August 16, 2020 Rating: 5

விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்..

August 16, 2020


"உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 19.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக கருதிக் கொள்ளுங்கள்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு ஓய்வை அறிவித்தார் மஹேந்திரசிங் தோனி. 
கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார். 
 தோனி இறுதியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி 2019 நடந்த உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியேயாகும். 
1981 ஜூலை 7ஆம் தேதி ராஞ்சியில் பிறந்த தோனி இளம் வயதில் அதிகம் விளையாடியது கால்பந்து மற்றும் பேட்மின்டன் ஆகியவையே. தோனி படித்த பாடசாலையின் கிரிக்கெட் அணியில் வழக்கமாக விளையாடும் விக்கெட் கீப்பர் ஒரு போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட அந்த போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக விளையாடினார் அப்படி ஆரம்பித்ததே அவரது கிரிக்கெட் வாழ்க்கை. 
2004 டிசம்பரில் தான் இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். 2007 t20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பை தோனியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது. 2013 ஐசிசி சம்பியன்ஸ் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. 2010 மற்றும் 2016 ஆகிய இரு முறைகள் இந்தியா ஆசிய கோப்பையை வென்றதும் இவரது தலைமையில்தான். 
அதேபோன்று 2010 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களில் இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்.. விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்.. Reviewed by irumbuthirai on August 16, 2020 Rating: 5

கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது..

May 19, 2020

ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் செலவழிக்கப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெற் கவுன்சிலும் இலங்கை கிரிக்கெற் நிறுவனமும் இணைந்தே இதற்கான முதலீட்டை மேற்கொள்ளவிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார். 
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விடையத்தை தெரிவித்தார்.

கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது.. கிரிக்கெற்  மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது.. Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்?

May 18, 2020

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ஹோமாகம தியகம பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது. 
அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இந்த விளையாட்டு மைதானத்திற்காக 26 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 
பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் இந்த விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்படும் என்றும், முதற்கட்டத்தின் கீழ் 

போட்டியை பார்வையிடும் சுமார் நாற்பதாயிரம் (40000) பேருக்கான வசதிகளைக் கொண்டதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் இருபதாயிரம் (20000) ஆசனங்களை ஒன்றிணைத்து மொத்தமாக 60 000 பார்வையாளர்களின் ஆசனங்களை கொண்ட வசதிகளை உள்ளடக்கியதாக இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வலம் வருகின்றன. கொரோனாவினால் நாடு எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியில் இது தேவைதானா? ஒரு புறம் நிதி நெருக்கடியென சுட்டிக்காட்டி அரச ஊழியர்களின் சம்பளத்தை அன்பளிப்பு செய்ய கோரும் அரசு மறு புறம் இந்த மைதானத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுவது அரசின் இரு வேறுபட்ட நிலைமைகளைக் காட்டுவதாகவும், மைதானத்திற்கு முன் இலங்கை கிரிக்கெற் அணியை செய்ய வேண்டும், நாட்டில் எத்தனையோ பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் இது இப்போதைக்கு அவசரமா என்றெல்லாம் பல விமர்சனங்கள் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்? பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்? Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம்

May 06, 2020

இங்கிலாந்து MCC கிரிக்கற் கழகத்தின் தலைவர் பதவியிலிருக்கும் குமார் சங்ககார மேலும் 1 வருடம் அப்பதவியில் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
கொரோனா அசாதாரண நிலை காரணமாக இந்த பதவி நீடிப்பு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2019 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் தலைவர் பதவியிருக்கும் சங்ககார 2021 செப்தம்பர் 30 வரை தொடர்வார் என தெரிவிக்கப்படுகிறது. 
MCC கழகத்தின் தலைவர் பதவியிலிருக்கும் முதல் வெளிநாட்டவர் சங்ககார என்பது குறிப்பிடத்தக்கது.

நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது சங்ககாரவின் பதவிக்காலம் Reviewed by irumbuthirai on May 06, 2020 Rating: 5

விண்ணப்பம் கோரல்.. கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி

November 13, 2019


தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இது நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் டிசெம்பர் மாதம் 

20, 21, 22ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. ஆண் பெண் இருபாலாருக்குமான போட்டிகள் இதன் போது நடைபெறும். இப்போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை 

,இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட சங்கம், இலக்கம் 33, ரொரிங்டன் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  இதனை கரப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
(அ.த.தி) 
விண்ணப்பம் கோரல்.. கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி விண்ணப்பம் கோரல்.. கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி Reviewed by irumbuthirai on November 13, 2019 Rating: 5

சச்சின் டெண்டுல்காரின் 30 வருட கால சாதனையை முறியடித்த வீராங்கனை

November 12, 2019


சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சார்பில் குறைந்த வயதில் அரைச் சதத்தை பெற்றுக்கொண்ட வீரராக சச்சின் டெண்டுல்கார் நிலைநாட்டியிருந்த சாதனையை 30 வருடங்களுக்கு பின்னர் 15 வயதான 

ஷாபாளி வர்மா (Shafali Verma) என்ற வீராங்கனை முறியடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ரி-20 போட்டியிலேயே இந்த இளம் வீராங்கனை இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இந்தியாவின் சார்பில் ரி-20 போட்டியில் கலந்துகொண்ட ஆகக்குறைந்த 

வயதைக்கொண்ட வீராங்கனை என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். 1989 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கார் 50 ஓட்டங்களைப் பெற்ற போது அவருக்கு 16 வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
(அ.த.தி)
சச்சின் டெண்டுல்காரின் 30 வருட கால சாதனையை முறியடித்த வீராங்கனை சச்சின் டெண்டுல்காரின் 30 வருட கால சாதனையை முறியடித்த வீராங்கனை Reviewed by irumbuthirai on November 12, 2019 Rating: 5

உலக உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்

November 10, 2019

உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ள.
73ஆவது உலக உடற்கட்டமைப்பு வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் நேற்று கிடைத்துள்ளன. 65 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட சாகத்த அமில வீரர் தங்கப்பதக்கத்தை வென்றார். 60 கிலோ எடை வகுப்பில் போட்டியிட்ட 

இராஜ்குமார் என்ற மலையகத்தை சேர்ந்த வீரர் வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார். இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்றது. இலங்கையின் சார்பில் 11 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
(அ.த.தி)
உலக உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் உலக உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா

November 02, 2019

2019 உலகக் கிண்ண றக்பிபோட்டியின் இறுதிப் போட்டி ஜப்பானில் இன்று இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. ஆரம்பித்தில் இருந்தே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தென்னாபிரிக்க அணி இறுதியில் 

32க்கு 12 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. இதற்கமைய தென்னாபிக்க அணி மூன்றாவது முறையாக றக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
(அ.த.தி)
மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா மூன்றாவது முறையாகவும் உலக சம்பியனான தென்னாபிரிக்கா Reviewed by irumbuthirai on November 02, 2019 Rating: 5

10 வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் நடுவர்கள்

September 24, 2019


சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதன்படி, 

அவுஸ்ரேலியாவின் டேவிட் பூன் இந்தத் தொடரின் போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளதுடன், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்கல் அன்ட்ரூ கோப் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் வில்சன் ஆகியோர் போட்டி நடுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.

ஐ.சி.சியின் அனுமதியுடன் சுமார் 10 வருடங்களுக்குப் பின்பு போட்டி மத்தியஸ்தர் மற்றும் போட்டி நடுவர்கள் பாகிஸ்தான் வரவுள்ளமை சிறப்பம்சமாகும். இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
(அ.த.தி)
10 வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் நடுவர்கள் 10 வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் நடுவர்கள் Reviewed by irumbuthirai on September 24, 2019 Rating: 5

பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டம்

September 16, 2019

எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 22 வரையில் குருநாகல் டி.பீ.வெலகெதர விளையாட்டு மைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான 
அஞ்சல் ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது. நாடு முழுவதிலும் 357 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 8,000 வீரர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர். 
12 வயதிற்கு உட்பட்ட 14 வயதிற்கு உட்பட்ட, 16 வயதிற்கு உட்பட்ட, 18 வயதிற்கு உட்பட்ட மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட 5 பிரிவுகளில் போட்டி நடைபெறவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய வகையில் 38 அஞ்சல் ஓட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன. 
கல்வி அமைச்சு மற்றும் வடமேல் மாகாண கல்வி திணைக்களம் ஒன்றிணைந்து இந்த போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளன. போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை 0718009193 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
(அ.த.தி)

பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டம் பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டம் Reviewed by irumbuthirai on September 16, 2019 Rating: 5

அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு...

September 01, 2019

அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கும் வழங்கப்படவுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள கிரிக்கெட் அணிக்கே இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. 
இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இது தொடர்பாக தெரிவிக்கையில் தானும் கிரிக்கெட்டின் பாதுகாப்பு ஆலோசகர் மாஷல் ஒவ்.டி.எயார்போஸ் றொஷான் குணதிலக்கவும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தோம். பாதுகாப்பு நிலைமையை கண்டறிவதற்காக சென்ற நாம் அங்கு அது தொடர்பான நிலமைகளை கண்டறிவதற்காக சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டோம். 

இதன்போது பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாப்பு பிரிவு மற்றும் அந் நாட்டு கிரிக்கட் பேரவை இலங்கை அணிக்கு அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குவதாக உறுதி தெரிவித்தனர். இலங்கை அணி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு மைதானங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. ஹோட்டலில் இருந்து விளையாட்டு மைதானம் வரையில் பயணிக்கும் பஸ்ஸிற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற சுப்பர்லீக்ஸ் போட்டியில் இறுதிப்போட்டி சிலவற்றிற்கு கலந்து கொண்ட வெளிநாட்டு வீரர்களுக்கு இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திதி இலங்கை அணி மீது லாகூர் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்படவில்லை. 

அன்றிலிருந்து இதுவரை அங்கு ஒருசில போட்டிகளே நடந்துள்ளன. 2015 ஆம் ஆண்டில் சிம்பாவே அணி கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் பாகிஸ்தானில் ஒருநாள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டது. 2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சர்வதேச அணி மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையில் கண்காட்சி ரி-20 கிரிக்கெட் போட்டிகள் 3 நடைபெற்றுள்ளன. திசர பெரேராவின் தலைமையில் இலங்கை அணி 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் லாகூர் நகரில் ரி-20 போட்டியில் கலந்து கொண்டார். இம் முறை பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மூன்றிலும், ரி-20 கிரிக்கெட் போட்டி மூன்றிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு... அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு... Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி

August 25, 2019

2013 ஆம் ஆண்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்தபோது காதல் ஏற்பட்டது. 
4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் நடந்தது. 
தற்போது மேற்கிந்திய தீவில் விளையாடும் விராட் கோலி அங்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாடினார். அப்போது உரையாற்றிய கோலி,


‘அனுஷ்கா சர்மா என் வாழ்வில் கிடைத்தது கிரிக்கெட் கிடைத்ததை விட மிகப் பெரிய வரம். மிகச் சரியான துணையை தேர்ந்தெடுத்துள்ளேன். ஏனென்றால், அவரது பணிகளை அவராகவே சிறப்பாக செய்து வருகிறார். அதோடு எனக்கான இடத்தையும் சரியாக தருகிறார். என்னை சரியான பாதையில் வழிநடத்துவதும் அவர்தான். அவரிடம் இருந்து இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

அம்பட்தி ராயூடு ஓய்வு !! அணிக்குள் அழைக்கும் அயர்லாந்து

July 03, 2019
2019 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியில் அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை, பின்னர் காயமடைந்த ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கருக்கு மாற்றாக ரிஷாப் பந்த் மற்றும் மாயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டபோது இரண்டு முறை புறக்கணிக்கப்பட்டது.

ராயுடு இந்தியாவுக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார், மூன்று சதங்கள் மற்றும் 10 அரைசதங்களுடன் 47.05 சராசரியாக 1694 ரன்கள் எடுத்தார்.  அவர் ஆறு டி 20 சர்வதேச போட்டிகளிலும் இடம்பெற்றார், அவற்றில் 42 ரன்கள் எடுத்தார்.


 சுவாரஸ்யமாக, திங்களன்று இந்திய அணியில் விஜய் சங்கரின் உத்தியோகபூர்வ மாற்றாக மாயங்க் அகர்வால் பெயரிடப்பட்டதை அடுத்து, ஐஸ்லாந்து கிரிக்கெட்டிற்கு ஐஸ்லாந்து கிரிக்கெட்டுக்கு ராயுடு நிரந்தர வதிவிடத்தை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியது.
To Join our whatsap Group
 இங்கிலாந்தில் இந்திய அணியில் இணைந்த சமீபத்திய உறுப்பினரான மயாங்கிற்கு 72.33 ரன்களில் மூன்று தொழில்முறை விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன,
அதற்கு பதிலாக ராயுடு அவர்களுக்காக விளையாட முடியும் என்பது குறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் செவ்வாய்க்கிழமை ஒரு கன்னத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டது.


அம்பட்தி ராயூடு ஓய்வு !! அணிக்குள் அழைக்கும் அயர்லாந்து அம்பட்தி ராயூடு ஓய்வு !! அணிக்குள் அழைக்கும் அயர்லாந்து Reviewed by Irumbu Thirai News on July 03, 2019 Rating: 5
Powered by Blogger.