அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு...


அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கும் வழங்கப்படவுள்ளது. அடுத்த மாத நடுப்பகுதியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள கிரிக்கெட் அணிக்கே இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. 
இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இது தொடர்பாக தெரிவிக்கையில் தானும் கிரிக்கெட்டின் பாதுகாப்பு ஆலோசகர் மாஷல் ஒவ்.டி.எயார்போஸ் றொஷான் குணதிலக்கவும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தோம். பாதுகாப்பு நிலைமையை கண்டறிவதற்காக சென்ற நாம் அங்கு அது தொடர்பான நிலமைகளை கண்டறிவதற்காக சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டோம். 

இதன்போது பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாப்பு பிரிவு மற்றும் அந் நாட்டு கிரிக்கட் பேரவை இலங்கை அணிக்கு அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குவதாக உறுதி தெரிவித்தனர். இலங்கை அணி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கும் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு மைதானங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. ஹோட்டலில் இருந்து விளையாட்டு மைதானம் வரையில் பயணிக்கும் பஸ்ஸிற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற சுப்பர்லீக்ஸ் போட்டியில் இறுதிப்போட்டி சிலவற்றிற்கு கலந்து கொண்ட வெளிநாட்டு வீரர்களுக்கு இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திதி இலங்கை அணி மீது லாகூர் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்படவில்லை. 

அன்றிலிருந்து இதுவரை அங்கு ஒருசில போட்டிகளே நடந்துள்ளன. 2015 ஆம் ஆண்டில் சிம்பாவே அணி கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் பாகிஸ்தானில் ஒருநாள் சர்வதேச போட்டியில் கலந்து கொண்டது. 2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சர்வதேச அணி மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையில் கண்காட்சி ரி-20 கிரிக்கெட் போட்டிகள் 3 நடைபெற்றுள்ளன. திசர பெரேராவின் தலைமையில் இலங்கை அணி 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் லாகூர் நகரில் ரி-20 போட்டியில் கலந்து கொண்டார். இம் முறை பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மூன்றிலும், ரி-20 கிரிக்கெட் போட்டி மூன்றிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு... அரச தலைவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு... Reviewed by irumbuthirai on September 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.