கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு:

June 26, 2021

இந்தியாவில் உருமாற்றம் அடைந்து உருவான கொரோனா வைரஸ் திரிபே ‘டெல்டா' எனப்படுகிறது. 2வது அலையில் பல இலட்சம் பேரை இது கொன்றுள்ளது. இந்த வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து, அதை விட வீரியமிக்கதாக உருவாகி தாக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, ‘டெல்டா பிளஸ்’ என பெயரிடப்பட்டு உள்ளது. 
 இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனாவால் மரணமான பெண்ணின் மீது நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் அவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே டெல்டா ப்ளஸ் காரணமாக இடம்பெற்ற முதலாவது மரணமாக இது பார்க்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு: கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு: Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!

June 26, 2021
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவிற்காக தமது ஆசனங்களை விட்டுக்கொடுக்க நான்கு பேர் தயாராக உள்ளதாக கட்சியின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அந்த வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், ஜயந்த கெட்டகொட, 
மர்ஜான் பளீல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே இவ்வாறு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
எனவே எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தின் போது பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்! பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!  Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா?

June 26, 2021

இலங்கையிலுள்ள வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக் கூடிய வைரஸ் தொடர்பில் இலங்கையில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. இதற்காக கொஸ்லந்தை பிரதேசத்திலமைந்துள்ள வெளவால் குகையை அடிப்படையாக கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வுக்குழு உறுப்பினரான கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனத்தின் பேராசிரியரான தேஜானி பெரேரா தெரிவித்துள்ளார். 
இந்த ஆராய்ச்சியின்போது மனிதர்களுக்கு பரவும் எல்பா மற்றும் பீட்டா ஆகிய கொவிட்19 மாறுபாடுகள் கொண்ட 
இரண்டு வகை விசேட வெளவால்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட எல்பா மற்றும் பீட்டா கொவிட்19 வைரஸ் மாறுபாடு தற்போது பல நாடுகளில் பரவும் பிரிட்டன் எல்பா அல்லது தென்னாப்பிரிக்காவின் பீட்டாவின் துணை வகைகள் அல்ல. ஆனால் இவை கொவிட்19 வைரஸின் நான்கு முதன்மை மாறுபாடுகளில் இரண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த மாறுபாடுகள் மனிதர்களின் உடலில் பரவி கொவிட் 19 வைரஸ் வரை கொண்டு செல்லுமா? என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் மக்கள் வௌவால்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாமென பேராசிரியர் தேஜானி பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்:

June 26, 2021

60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மேலும் இது தினசரி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம். இதற்காக அடையாள அட்டை மட்டுமே தேவைப்படுகிறது. நாம் விண்ணப்ப படிவம் ஒன்றை வௌியிட்டுள்ளோம். குறித்த விண்ணப்ப படிவத்தை வீட்டிலேயே நிரப்பி வந்தால் தடுப்பூசியை மிக விரைவாக பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்: அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்:  Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு)

June 26, 2021

வீட்டில் மரணிப்போர் தொடர்பில் புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிறுபம் ஒன்றை நேற்றைய தினம் (25/6/2021) சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 
இதன் பிரகாரம், 
வீட்டில் ஏற்படும் திடீர் மரணங்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அந்த மரணங்களை முன்னர் போன்று நல்லடக்கம் செய்யும் அனுமதியை, அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் மரணப் பரிசோதகர் ஆகிய இருவரும் இணைந்து மரணச் சான்றிதழ் வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
குறித்த சுற்று நிருபத்தை கீழே காணலாம்.


வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு) வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது!

June 26, 2021

தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டில் சுமார் நான்கரை மில்லியன் (45 இலட்சம்) மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. 
இன்று (26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஆகும். இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க குறித்த சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை):

June 26, 2021

தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 அதாவது மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் போது தமது தற்காலிக இடமாற்ற காலம் முடிவடைந்திருந்தால் அவர்கள் 
தமது நிரந்தர கடமையாற்றும் பாடசாலைக்கே சமூகமளித்தல் வேண்டும். 
இதேவேளை தற்காலிக இடமாற்ற காலத்தை மேலும் நீடிக்க விரும்பும் ஆசிரியர்கள் பாடசாலை மீள ஆரம்பித்ததும் தமது நிரந்தர கடமையாற்றும் பாடசாலை அதிபர் மூலமாக உரிய விண்ணப்பத்தை 'கல்விப் பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) / Director of Education (Teacher Transfer) ற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை): தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை): Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்

June 25, 2021

ஈ - தக்சலாவ (e-thakshalawa) வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (Learning Management System - L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் (Online) கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. 
 உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில் ஆரம்பமாகி, எதிர்காலத்தில் 200 பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தப்படும். 
 Online முறையின் கீழ் கிராமப்புற பாடசாலைகளின் மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும். அத்துடன், வீடியோ (காணொலி) தொழில்நுட்பத்தின் கீழ் ஒன்லைன் கல்வியை இலவசமாக வழங்கும் திட்டமும் ஈ - தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மாதத்திலிருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம் இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம் Reviewed by irumbuthirai on June 25, 2021 Rating: 5

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை (மேல் மாகாணம்) - 2021/2022. (விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் மும்மொழிகளிலும் இணைப்பு)

June 25, 2021

மேற்படி போட்டிப் பரீட்சையின் விண்ணப்ப முடிவு திகதி 15-07-2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
நுண்ணறிவு பரீட்சை, பொது அறிவு ஆகிய பாடங்கள். 
ஒவ்வொரு பாடத்திலும் தலா 40% புள்ளிகளை குறைந்தது பெற்றிருத்தல் வேண்டும். 
வயதெல்லை: 18-40. 
அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை (மேல் மாகாணம்) - 2021/2022. (விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் மும்மொழிகளிலும் இணைப்பு) பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை (மேல் மாகாணம்) - 2021/2022. (விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் மும்மொழிகளிலும் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 25, 2021 Rating: 5

G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும்

June 24, 2021

கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்விற்கான விண்ணப்பங்கள் பரீட்சை திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன. 
மீளாய்வின் போது குறித்த விடைத்தாள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பலரால் முழுமையாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை Online மூலம் மாத்திரமே சமர்ப்பிக்கலாம். 
அதிபரின் கையொப்பமோ சான்றுப்படுத்தலோ அவசியமில்லை. 
ஒரு பாடத்திற்குரிய கட்டணம் 250 ரூபாய். 
தபால் அலுவலகம் / Credit Card / Debit Card ஏதாவது ஒரு முறையில் செலுத்தலாம். 
பணத்தை செலுத்தியதும் தொலைபேசிக்கு SMS செய்தி கிடைக்கும். அதன்பின்னர் விண்ணப்பத்தை PDF முறையில் பதிவிறக்கம் செய்யலாம். 
பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகளை விட குறைவாக பெற்றோர்களும் அந்த படத்திற்காக மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப 
முடிவுத் திகதி: 10-07-2021. 
அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும் G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும் Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமனம்

June 24, 2021

அண்மையில் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்தவகையில் 
18 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை நாட்டிலுள்ள பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த அமைச்சரவை யோசனைக்கே அனுமதி கிடைத்துள்ளது.
பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமனம் பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமனம் Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்:

June 24, 2021

09.08.2021 முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே படித்த ஒருவர் அதற்கு உபவேந்தராக வரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இது மாத்திரமன்றி 43 வயதான றமீஸ் அபூபக்கர் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மிஸ்கீன் பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் 3வது பிள்ளையாவார். 
இவர் கடந்து வந்த முக்கிய தடங்கள் வருமாறு:
2005- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைந்தார். 
2006- சமூகவியல் துறை நிரந்தர விரிவுரையாளராக நியமனம். 
2010- சமூகவியல் முதுதத்துவமானி பட்டம் (பேராதனைப் பல்கலைக்கழகம்) 
2010- முரண்பாடு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்பின் படிப்பு (இங்கிலாந்து பிரட்போர்டு பல்கலைக்கழகம்) 
2011- சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 2 பதவி உயர்வு. 
2017- சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 1க்கு பதவி உயர்வு. 
2017- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் முதலாவது தலைவராக நியமனம். 
2019- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு. 
2019- தென் கிழக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வருடத்திற்கான சிறந்த ஆய்வாளர் விருது. 
2019- கெய்சிட் எனப்படும் வியன்னாவில் உள்ள சர்வதேச சம்பாசனை நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தை பெறல். 
இது மாத்திரமன்றி இவர் கலாநிதி பட்டத்தை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்: பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்:

June 24, 2021

தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியிலும் மின்சார பாவனையாளர்களின் முறைப்பாடுகளை விசாரித்து துரிதமாக சிறப்பான சேவையை அவர்களுக்கு வழங்கும் முகமாக புதிய அவசர தொலைபேசி இலக்கம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
0775 687 387 என்ற இந்த இலக்கத்திற்கு WhatsApp, Viber, IMO மூலமும் தொடர்பு கொள்ளலாம். இதற்கு மேலதிகமாக MMS மூலமும் தொடர்பு கொள்ளலாம். 
பாவனையாளர்கள் தமது எழுத்து மூலமான முறைப்பாடுகளை, புகைப்படமொன்றை எடுத்தும் அனுப்பலாம். 
இச்சேவையைப் பெற்றுக் கொள்பவர்கள், தங்களத, பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்), மின்சாரப்பட்டியல் கணக்கு இலக்கம், முறைப்பாட்டின் விபரம், தொடர்புடைய ஆவணங்கள் (இருப்பின்) ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்: அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா:

June 24, 2021

தெஹிவலை மிருக காட்சிசாலையில் இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்த நிலையில் மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
12 வயதுடைய ஷீனா என்ற சிங்கமே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா: மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில்.

June 23, 2021

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனம் ஒரு வருடத்திற்கும் அதிகமான இடைவௌிக்கு பின்னர் இன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நிரப்பப்பட்டது. 
05 தடவைகள் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ள ரணில் விக்ரமசிங்க, 1977 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார். நான்கு தசாப்தங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர். இலங்கை வரலாற்றில் நீண்டகாலம் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அரசியல்வாதியாவார். 
இவர் தனது கன்னி உரையில், 
 அரசாங்கம் செல்வந்தர்களுக்கு நிவாரணங்களையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுத்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார். கொரோனா, எரிபொருள், கல்வி உள்ளிட்ட பல பிரச்சினைகள் நாட்டில் உள்ளன. மாற்றுத் திட்டம் இல்லாமல் தரவுகள் குறித்து கதைப்பதில் பலனில்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் ஈடுபடுவதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு இருக்கும் ஒரே வழி என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில். செல்வந்தர்களுக்கு நிவாரணத்தையும் ஏழைகளுக்கு பசியையும் கொடுக்கும் அரசாங்கம்: தனது கன்னி உரையில் அதிரடி காட்டிய ரணில்.  Reviewed by irumbuthirai on June 23, 2021 Rating: 5

ரிஷாட் பதியுதீன் வழக்கு: தொடராக விலகும் நீதிபதிகள்:

June 23, 2021

தம்மை கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருந்தல் சட்ட விரோதமானது என்ற தீர்ப்பினை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 
இது தொடர்பான விசாரணைகளிலிருந்து இதுவரை உச்சநீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் விலகியிருந்தனர். 
இந்நிலையில் குறித்த மனு இன்று (23) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தனிப்பட்ட காரணங்களால் தாம் குறித்த மனு விசாரணைகளில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸும் விலகியுள்ளார். 
அந்தவகையில் இந்த விசாரணைகளிலிருந்து மொத்தம் 3 பேர் இதுவரை விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியுதீன் வழக்கு: தொடராக விலகும் நீதிபதிகள்: ரிஷாட் பதியுதீன் வழக்கு: தொடராக விலகும் நீதிபதிகள்: Reviewed by irumbuthirai on June 23, 2021 Rating: 5

21-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 23, 2021

21-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கடந்த வார அமைச்சரவை கூட்ட தீர்மானங்களுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:


Join our WhatsApp group:

Join our Telegram channel:

Like our FB page:



21-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 21-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 23, 2021 Rating: 5

பாடசாலைகளுக்கு 4G வசதி

June 23, 2021

அடுத்த 02 வருடங்களில் 4G தொழில்நுட்பத்துடன் 10,000 பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
நேற்று முன்தினம் (21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
அத்துடன் சரியான திட்டமின்றி சில பகுதிகளில் தொலைபேசி நிறுவனங்களால் தொலைபேசி கோபுரங்கள் கட்டப்படுவதால் கிராமப்புறங்களில் மாணவர்கள் Online கல்வியை பெறுவதில் பிரச்சினைகள் எழுந்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு 4G வசதி பாடசாலைகளுக்கு 4G வசதி Reviewed by irumbuthirai on June 23, 2021 Rating: 5

ஜுன் 25 முதல் LMS முறையில் கல்வி நடவடிக்கைகள்: Data கட்டணமும் இல்லை:

June 23, 2021

பாடசாலை மாணவர்களுக்கு எந்தவொரு Data கட்டணமும் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி வசதிகளை வழங்கும் முறையொன்று இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு எல்.எம்.எஸ் (Learning Management System) முறையின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளுக்குரிய திட்டம் ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 
நேற்று முன்தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜுன் 25 முதல் LMS முறையில் கல்வி நடவடிக்கைகள்: Data கட்டணமும் இல்லை: ஜுன் 25 முதல் LMS முறையில் கல்வி நடவடிக்கைகள்: Data கட்டணமும் இல்லை: Reviewed by irumbuthirai on June 23, 2021 Rating: 5

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கத்தின் தற்போதைய நிலை:

June 22, 2021

தென் கொரியாவில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்ட 'தோர்' என்கின்ற சிங்கம் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில் இந்த சிங்கம் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை மிருக காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கத்தின் தற்போதைய நிலை:  கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கத்தின் தற்போதைய நிலை: Reviewed by irumbuthirai on June 22, 2021 Rating: 5

பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

June 22, 2021

வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3-I(அ) தரத்துக்கு பட்டதாரிகளை தேசிய பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இந்த விண்ணப்பங்களை 2021 ஜூன் 18 முதல் ஓகஸ்ட் 12, வரை சமர்ப்பிக்கலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
அதன்படி விண்ணப்பதாரிகள் பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்தில் ஒன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பட்டதாரிகளுக்கான அறிவித்தல்! பட்டதாரிகளுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on June 22, 2021 Rating: 5

ஆசிரியர்களுக்கு Smartphone களை கொள்வனவு செய்ய விசேட கடன்

June 22, 2021

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு டெப் அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை (Tab / Smart Phone) கொள்வனவு செய்ய கடன் ஒன்றை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் இதற்காக சலுகை கடன் ஒன்றை வழங்குவது தொடர்பாக அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார். 
இந்த சூழ்நிலையில் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதனைக் கருத்திற்கொண்டே இத்தகைய விடயம் ஒன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, இக்காலங்களில் ஒன்லைன் (Online) மூலமான கல்வி செயற்பாடுகளில் பயன்பெற முடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்காக விசேட செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு Smartphone களை கொள்வனவு செய்ய விசேட கடன் ஆசிரியர்களுக்கு Smartphone களை கொள்வனவு செய்ய விசேட கடன் Reviewed by irumbuthirai on June 22, 2021 Rating: 5

ஈரானில் தெரிவான புதிய ஜனாதிபதி: அரசியல் அனுபவம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு: எப்படி?

June 21, 2021

ஈரானின் தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் உச்சபட்சமான 4 ஆண்டுகளுடன் கூடிய தொடர்ச்சியான இரு பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட்டில் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் திகதி நடந்தது. 
இம்முறை வாக்குப்பதிவு குறைவாகவே காணப்பட்டது. அதாவது 2017 ஜனாதிபதித் தேர்தலில் 70% க்கும் அதிகமான வாக்குப்பதிவு இருந்த நிலையில் இம்முறை 60 வீதத்திற்கும் குறைவாகவே காணப்பட்டுள்ளது. 
இம்முறை தேர்தலில் போட்டியிட 40 பெண்கள் உள்ளிட்ட 592 பேர் பதிவு செய்திருந்த நிலையில், ஈரான் பாதுகாவலர் சபையினால் அப்பதவிக்கு போட்டியிட 7 ஆண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 
இதில் அந்நாட்டு உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி 
இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 60 வயதான இவர் அரசியல் சார்ந்த அனுபவம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 ஈரான் நாட்டில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர், 'ஏழைகளின் நாயகன்' என, 60 வயதான இப்ராஹிம் ரைசி புகழப்படுகிறார். 
ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை மக்கள் முன்னிலையில் கூறி, அவர்கள் எந்த வித ஊழலில் ஈடுபட்டார்கள் என்று வெளிப்படையாக மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இந்த இப்ராஹிம் ரைசி.
ஈரானில் தெரிவான புதிய ஜனாதிபதி: அரசியல் அனுபவம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு: எப்படி? ஈரானில் தெரிவான புதிய ஜனாதிபதி: அரசியல் அனுபவம் இல்லை ஆனால் மக்கள் செல்வாக்கு: எப்படி? Reviewed by irumbuthirai on June 21, 2021 Rating: 5

கண்டுபிடிக்கப்பட்டது! கொரோனா இறப்பை குறைக்கும் புதிய சிகிச்சை முறை:

June 21, 2021

கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்கு பிறகு மற்றுமொரு வகையான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஆன்டிபாடிக்கள் யாருடைய உடலில் தன்னிச்சையாக உருவாகவில்லையோ, அவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை கொடுக்க முடியும். ஆனால் இந்த சிகிச்சை முறை தடுப்பூசியை விட செலவு அதிகமானது. 
ரீஜெனரான் என்ற மருந்து நிறுவனம் மோனோகுளோனல் ஆன்டிபாடி என்று அழைக்கப்படும் சிகிச்சை முறையை இதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிகிச்சை முறை காரணமாக 
கொரோனா வைரஸ்களால் மனித உடலில் இருக்கும் மற்ற செல்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது. இந்த சிகிச்சை முறையால் 100 நோயாளிகளில் 06 பேரின் உயிரைக் காப்பாற்றலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்கள் இறக்கும் அபாயத்தை மூன்றில் ஒரு பங்கு வரை குறைக்கிறது என்றும் கூறப்படுகிறது. 
மேலும் இதுதொடர்பான பரிசோதனையின் இணை முதன்மை ஆய்வாளரான சர் மார்டின் லாண்ட்ரே கூறுகையில், 
10,000 பிரிட்டன் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த சிகிச்சை முறை பரிசோதனையில், மரண அபாயத்தை கணிசமாக குறைத்திருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் சராசரியாக 04 நாட்களைக் குறைத்திருக்கிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படுவதைக் குறைத்திருக்கிறது என்று கூறினார்.
கண்டுபிடிக்கப்பட்டது! கொரோனா இறப்பை குறைக்கும் புதிய சிகிச்சை முறை: கண்டுபிடிக்கப்பட்டது! கொரோனா இறப்பை குறைக்கும் புதிய சிகிச்சை முறை: Reviewed by irumbuthirai on June 21, 2021 Rating: 5

Courses: University of Moratuwa (Department of Civil Engineering)

June 20, 2021

Courses: University of Moratuwa (Department of Civil Engineering) 
Closing date: 22-07-2021. 
See the details below.
Source: Sunday Observer 20/6/2021.

Courses: University of Moratuwa (Department of Civil Engineering) Courses: University of Moratuwa (Department of Civil Engineering) Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Export Development Board

June 20, 2021

Vacancies: Sri Lanka Export Development Board
Closing date: 28-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Export Development Board Vacancies: Sri Lanka Export Development Board Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தவறியோர்க்கான அறிவித்தல்!

June 20, 2021

பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 
 நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணத் தடையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 
21, 22, 23 ஆகிய தினங்களிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தவறியோர்க்கான அறிவித்தல்! பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தவறியோர்க்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

நான் ஏன் பாராளுமன்றம் வருகிறேன்? ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கம்!

June 20, 2021

தான் ஏன் பாராளுமன்றம் செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். 
எனக்கு பாராளுமன்றம் செல்லும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் பாராளுமன்றம் செல்லுமாறு பலரும் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு காரணம் இந்த நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான முறையான திட்டமும் அரசாங்கத்திடம்  இல்லை. எதிர்பார்த்ததைவிட மரணங்கள் அதிகரிக்கின்றன. இதுமாதிரியான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் இதற்காக 
குரல் எழுப்பும் தேவை இருப்பதாக நான் உணர்ந்தேன். 
மற்றுமொரு காரணம் மிக வேகமாக அரசாங்கத்தின் செல்வாக்கு மக்களிடையே குறைந்து வருகிறது. இதற்குரிய மாற்றீடுகளோ பொருத்தமான திட்டங்களோ எதிர்க்கட்சியிடம் இல்லை. எனவே நான் பாராளுமன்றம் சென்றால் அங்கிருந்து எனது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கலாம் என்று கூறினார்.
நான் ஏன் பாராளுமன்றம் வருகிறேன்? ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கம்! நான் ஏன் பாராளுமன்றம் வருகிறேன்? ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கம்! Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிப்பபதற்கான இலக்கம்:

June 20, 2021

ஏதேனும் அநீதி செயற்பாடுகள் பொலிஸாரினால் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிக்கு முறையிடலாம் அல்லது விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறான அநீதி செயற்பாடுகள் இடம்பெற்றால் 
பொலிஸ் கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்கலாம் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிப்பபதற்கான இலக்கம்: பொலிஸாரினால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிப்பபதற்கான இலக்கம்: Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை!

June 20, 2021

எவரேனும் ஒருவருக்கு சுகயீன நிலமை தென்பட்டால் அவர்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சதரசிங்க தெரிவித்துள்ளார். 
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கம் ஒன்றுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை! செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு கோரிக்கை! Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு

June 20, 2021

1,098 காரட் அளவுடன் 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் பருமன் கொண்டுள்ள உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அது 3,106 காரட் அளவுடையதாகும். 
 2017 இல் இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அது 1,109 காரட் அளவுடையது. 
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல கோடி ரூபா மதிப்புள்ள இந்த 3வது மிகப்பெரிய வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on June 20, 2021 Rating: 5
Powered by Blogger.