17-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-12-2021

December 25, 2021

Official Government Gazette Released on 17-12-2021. 
 
17-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
17-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-12-2021 17-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 17-12-2021 Reviewed by Irumbu Thirai News on December 25, 2021 Rating: 5

இலஞ்சம் பெற முயன்ற அதிபர் கைது!

December 23, 2021
 

முதலாம் தரத்திற்கு மாணவரை அனுமதிப்பதற்காக ரூபாய் இரண்டு லட்சம் லஞ்சமாக பெற முயன்று பாடசாலை அதிபர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கம்பஹா மாவட்ட பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் பெற முயன்ற அதிபர் கைது! இலஞ்சம் பெற முயன்ற அதிபர் கைது! Reviewed by Irumbu Thirai News on December 23, 2021 Rating: 5

மாணவர்க்கான வட்டியில்லா கடன் திட்டம் (முழு விபரம் இணைப்பு)

December 20, 2021

கல்வி அமைச்சின் மாணவர் கடன் பிரிவினால், 2018 , 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் க. பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSLS) செயல்படுத்துகிறது. 
 
கல்வி அமைச்சினால் அங்கீகாரம் பெற்ற அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. (111 பட்டக் கற்கை நெறிகள்)
 
விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச தகைமைகள்: 

1) உ. தரத்தில் ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) மற்றும், 
 
2) பொது சாதாரண பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகள், 
 
3) 
(அ) உயர்தர பரீட்சை பொது ஆங்கிலத்தில் சாதாரண சித்தி (S) அல்லது சாதாரண தர பரீட்சை ஆங்கிலத்தில் சாதாரண சித்தி அல்லது 
 
(ஆ) மாணவர் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அடிப்படை பாடநெறியுடன் இணைந்ததாக ஆங்கிலம் மற்றும் தொடர்பாடல் நிபுணத்துவ பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 
4) 2022-01-31 ற்கு வயது 25 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். 
 
03 வருட கற்கை நெறிக்கு ரூ. 06 லட்சமும் 04 வருட கற்கை நெறிக்கு 8 லட்சமும் வழங்கப்படும். 
 
விண்ணப்பங்களை Online மூலம் 21-12-2021 முதல் 31-01-2022 நண்பகல் 12 மணி வரை சமர்ப்பிக்கலாம். 
 
Online விண்ணப்பம் மற்றும் முழு விபரங்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
கற்கைநெறிக்காக அனுமதிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள்:
 
மாணவர் வழிகாட்டி கையேட்டை (Guide Book) கீழே பார்வையிடலாம். 

மாணவர்க்கான வட்டியில்லா கடன் திட்டம் (முழு விபரம் இணைப்பு) மாணவர்க்கான வட்டியில்லா கடன் திட்டம் (முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on December 20, 2021 Rating: 5

பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

December 20, 2021

பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விடுத்துள்ளார். 
 
அதாவது பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால் இனிமேலும் பயிலுனர் பட்டதாரிகளின் 

சேவை நிலைய திருத்தங்கள்/ இடமாற்றங்கள்/ மாகாணங்களுக்கிடையிலான மாற்றங்கள் செய்வதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக நேரடியாக வருகை தந்து அல்லது வருகை தராமல் முன்வைக்கும் எந்த ஒரு கோரிக்கையும் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. மேலும் முறையான அனுமதி இன்றி இந்நாட்களில் அமைச்சுக்கு வந்து நியமனம் வழங்கும் செயற்பாட்டுக்கு தடங்கள் ஏற்படுத்துவது அந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமையும் என்பதையும் அறிவிக்கவும். 
 
அத்துடன் நிரந்தர நியமனம் பெற்றிராத பயிலுனர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்து நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கடிதங்கள் வழங்குவது பொருத்தமான செயற்பாடு அல்ல எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 

 
பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்! பயிலுனர் பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on December 20, 2021 Rating: 5

க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு)

December 19, 2021

இந்த வருடத்திற்குரிய (2021) சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது. 
 
  • இம்முறை பரீட்சைக்காக சகல விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை (Online) முறைமையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். 
 
  • 2021-12-20 (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 
 
  • நிகழ்நிலை முறைமையில் விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி அதன் PDF கோவையை அச்சுப் பிரதி எடுத்து தேவையேற்படின் அதனை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். அச்சுப்பிரதி திணைக்களத்திற்கு அனுப்ப தேவையில்லை. 
 
  • பாடசாலையிலிருந்து விலகி இடுகை பத்திரத்தை பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பாடசாலையில் கற்றுக்கொண்டே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தோற்றுவது கண்டறியப்படின் பரீட்சை பெறுபேறு ரத்து செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் பரீட்சைக்கு தோற்றுவதும் தடை செய்யப்படும். 
 
  • விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலமோ அல்லது Exams SRI LANKA என்ற App மூலமோ சமர்ப்பிக்கலாம். 

  • தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தாய் அல்லது தந்தை அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள முடியும். 
 
  • பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த பின்னர் எக்காரணத்திற்காகவேனும் விண்ணப்பித்த பரீட்சை நிலையமோ ஊடக மொழியோ அல்லது பாடங்களோ பின்னர் மாற்றம் செய்யப்படமாட்டாது. எனவே தங்களின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். 
 
  • கட்டணங்களை தபால் நிலையத்திலோ அல்லது Credit/ Debit அட்டைகள் மூலமோ செலுத்தலாம். 

  • கட்டண விபரம்: 
01 பாடம் -         ரூபா: 100.00 
02 பாடங்கள் -  ரூபா: 150.00 
03 பாடங்கள் -  ரூபா: 200.00 
04 பாடங்கள் -  ரூபா: 250.00 
05 பாடங்கள் -  ரூபா: 300.00 
06 - 09 பாடங்கள் -  ரூபா: 350.00 
  • 2022-01-20 ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
பரீட்சைக்கு விண்ணப்பித்தல் தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.

 

 
க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on December 19, 2021 Rating: 5

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர்

December 19, 2021

இந்த வருடத்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகள் என்பன திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
நேற்று(18) அவிசாவளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதிலிருந்து
பல்கலைக்கழகம் செல்லும் வரை சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். எனவே இந்த காத்திருப்பு காலமும் நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: காத்திருப்பு இடைவெளி நீக்கப்படும் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on December 19, 2021 Rating: 5
Powered by Blogger.