25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

September 26, 2020

25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 25-09-2020 (In three languages) 
இதில், 
அரச பதவி வெற்றிடங்கள், 
போட்டிப் பரீட்சைகள் உட்பட இன்னும் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 25-09-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.

September 26, 2020

நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் ஒருபோதும் தலையிடாதென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர்.  அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது - நீதியமைச்சர். Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி

September 26, 2020

"2020ஆம் ஆண்டின் அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் பில்கிஸ் என்ற 82 வயது இந்திய மூதாட்டி ஒருவர் இடம் பெற்றுள்ளார். 
கடந்த ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட 
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள முஸ்லிம் பகுதியான ஷாஹின் பாகில் நீண்ட கால அமைதிப் போராட்டம் நடைபெற்றது. 
இதில் பில்கிஸ் உட்பட  நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு அமைதியான முறையில் போராடினர். அவர்களுக்கு இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் ஆதரவாக இருந்தார்கள். 
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரையை படித்து, தாங்கள் இந்தியப் பிரஜைகள்தான் என்பதை அழுத்தமாக தெளிவுபடுத்தி உரையாற்றி, தேசபக்தி பாடல்களும் பாடினர். 
ஜனநாயகத்திற்கு எதிரான விஷயத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு பில்கிஸ் நடத்திய போராட்டம், நம்பிக்கையையும் வலிமையையும் அளித்து, நாடு முழுக்க அமைதியான போராட்டங்கள் நடத்தப்பட உந்துதலாக இருந்தது" என பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான ராணா ஆயுப் எழுதியுள்ளார். 
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி "அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா?

September 25, 2020

தான் பாடிய பாடல்களை அழியாத நினைவுகளாக தந்துவிட்டு பிரிந்து சென்றார் எஸ். பி. பாலசுப்ரமணியம் 
கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இறக்கும்போது வயது 74. 
 ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கோவிட்-19 நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் உயிர் காக்கும் கருவிகளுடன் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வந்தது. 
அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கடந்த 4ஆம் தேதி முடிவு வந்தது. 
இந்த நிலையில், 
இன்று (25.09.2020) காலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதிகபட்ச உயிர் காக்கும் சிகிச்சை கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், இதய சுவாச நிபுணர்கள் கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில், பிற்பகல் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. 
இரு வாரங்களுக்கு முன்பு எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.பி. சரண், 
எனது தந்தையின் உடல்நிலை மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது. அவர் எங்களை எல்லாம் அடையாளம் கண்டுள்ளார். விசில் அடிக்கிறார், பாடலை ஹம்மிங் செய்கிறார், அவரது பிறந்த நாளை கூட கொண்டாடினோம் என்று தெரிவித்தார். 
கொரோனா தொற்றில் இருந்து மீண்டபோதும், பிற உடல் உறுப்புகள் ஒத்துழைக்காத நிலையில், போராடி மாண்டிருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். 
அவருக்கு தற்போது கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை இல்லை" என்று மருத்துவர் தெரிவித்தார். 
காற்றில் கலந்து வந்த பாடல்கள் மூலம் எல்லோர் உள்ளங்களிலும் இடம் பிடித்த அவரை காற்றில் கலந்து வந்த வைரஸ் கொண்டு சென்றது.
SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா? SPB: சாவுடன் போராடிய அந்த நிமிடங்கள்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாமா? Reviewed by irumbuthirai on September 25, 2020 Rating: 5

28 வருடங்களின் பின்னர் நடைபெற்ற கூட்டம்

September 24, 2020

28 வருடங்களின் பின்னர் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் தலைமையில் நேற்று ஒன்று கூடியது. 1979ஆம் ஆண்டில் ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தாபிக்கப்பட்டது. இச்சட்டத்தின் பிரகாரம் இதன் தலைவர் பதவி ஜனாதிபதிக்கு உரியதாகும். 
ஏற்றுமதியாளர்களை வலுவூட்டி அத்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது அதன் நோக்கமாகும். கொள்கைகளை வகுத்தல், அங்கீகரித்தல் மற்றும் பரிந்துரைகளை செய்தல் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிகளாகும். அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்து சர்வதேச சந்தையை வெற்றிகொண்டு மக்கள்மைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை விரைவுபடுத்துவது இச்சபையின் விடயப்பரப்புக்கு உட்பட்டதாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். 
துறையின் பிரச்சினைகளை தீர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மாதத்திற்கு ஒரு தடவை ஒன்றுகூட வேண்டுமென முன்மொழியப்பட்டது. 
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விமான நிலைய வசதிகளை விரிவுபடுத்தி வர்த்தகர்களையும் முதலீட்டாளர்களையும் கவரும் வகையில் சிறந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். 
பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ ஏற்றுமதியாளர்களை அதைரியப்படுத்தும் தேவையற்ற சட்டதிட்டங்களை நீக்க வேண்டுமென தெரிவித்தார்.
28 வருடங்களின் பின்னர் நடைபெற்ற கூட்டம் 28 வருடங்களின் பின்னர் நடைபெற்ற கூட்டம் Reviewed by irumbuthirai on September 24, 2020 Rating: 5

உறுதியானது கடல் மாசு: அறிக்கை சட்டமா அதிபரிடம்:

September 24, 2020

MT New Diamond எரிபொருள் கப்பலில் இருந்து கசிந்த எரிபொருள் காரணமாக கடல் மாசடைந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த குழுவின் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது .
உறுதியானது கடல் மாசு: அறிக்கை சட்டமா அதிபரிடம்: உறுதியானது கடல் மாசு: அறிக்கை சட்டமா அதிபரிடம்: Reviewed by irumbuthirai on September 24, 2020 Rating: 5

பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

September 24, 2020

எதிர்வரும் மாதம் நடைபெறவிருக்கும் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவை தொடர்பான விசேட அறிவித்தலை பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ளது. 
அந்தவகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ம் திகதி நள்ளிரவு முதல் உயர்தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் அத்தோடு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நள்ளிரவு முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து விதமான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் தடை செய்யப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவித்தல் Reviewed by irumbuthirai on September 24, 2020 Rating: 5

கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

September 23, 2020

நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு விஷேட அறிவித்தலை விடுத்துள்ளது. 
அதாவது சகல தேசிய பாடசாலைகளிலும் இடைநிலை வகுப்புகளிற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 
இது தொடர்பான அறிவித்தலை கீழே காணலாம்.


கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் Reviewed by irumbuthirai on September 23, 2020 Rating: 5

இம்முறை சிறுவர் தினம் கொண்டாட வேண்டிய முறை பற்றி கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிறுபம்

September 23, 2020

2020 சிறுவர் தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்ற வழிகாட்டலை கல்வி அமைச்சு சுற்றுநிருபம் மூலம் தெரிவித்துள்ளது. 
இம்முறை சிறுவர் தினத்திற்கான தொனிப் பொருளாக "எங்கள் நாடு எங்கள் கைகளில்" என்பது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 
எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி விடுமுறை என்பதனால் அக்டோபர் 2 மற்றும் 5ம் திகதிகளில் மாத்திரம் குறித்த தொனிப்பொருளுக்கு அமைவாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். 
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
இம்முறை சிறுவர் தினம் கொண்டாட வேண்டிய முறை பற்றி கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிறுபம் இம்முறை சிறுவர் தினம் கொண்டாட வேண்டிய முறை பற்றி கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிறுபம்   Reviewed by irumbuthirai on September 23, 2020 Rating: 5

கிராம உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகள்: சுற்றுநிருபம் வெளியானது:

September 23, 2020

கிராம உத்தியோகத்தர்கள் தமது விடுமுறை நாளை தவிர வாரத்தில் 6 நாட்களும் 24 மணித்தியாலமும் கடமையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதேபோன்று செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 08.30 முதல் பி.ப. 04.15 வரையும் சனிக் கிழமைகளில் பிற்பகல் 12: 30 மணி வரையும் கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். 
திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டும். 
திங்கட்கிழமை பொதுமக்கள் தினமாக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க இந்த புதிய நடைமுறை  தொடர்பிலான சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த நடைமுறைகள் எதிர்வரும் 1.10.2020 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும். 
இது தொடர்பில் தமது பிரதேச பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் கிராம சேவகர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவித்தலை கீழே காணலாம்.



கிராம உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகள்: சுற்றுநிருபம் வெளியானது: கிராம உத்தியோகத்தர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகள்: சுற்றுநிருபம் வெளியானது: Reviewed by irumbuthirai on September 23, 2020 Rating: 5

21-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

September 23, 2020

21-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
21-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 21-09-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on September 23, 2020 Rating: 5

20ற்கு எதிராக மனுத்தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா?

September 22, 2020

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் ஊடாக அடிப்படை உரிமை மீறல் இடம்பெறுவதால் குறித்த சட்டமூலம் பொதுஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தர்ஷன வேரதுவகேவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மற்றும் பல ஏற்பாடுகள் குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
20ற்கு எதிராக மனுத்தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? 20ற்கு எதிராக மனுத்தாக்கல்: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா? Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

15 நாடுகள் அழைப்பு விடுத்தும் மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தேன்? ஜாகிர் நாயக் விளக்கம்

September 22, 2020

தான் வசிப்பதற்கு மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தது? என்பது தொடர்பான விளக்கத்தை இணைய வழியான கலந்துரையாடல் ஒன்றின் மூலம் ஜாகிர் நாயக் வெளிப்படுத்தியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. 
 2016 ஜூலை முதல் இந்திய அரசின் கெடுபிடிகள் தொடங்கியது. தம் மீதான வழக்கு விசாரணைகள் தீவிரம் அடைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியன. எனினும் அடுத்த இரு மாதங்களுக்குள் 
13 முதல் 15 நாடுகள் எனக்கு அழைப்பு விடுத்தன. அந்நாடுகளில் தங்குவதற்கும் தங்கள் நாட்டில் தகுந்த பாதுகாப்பு வழங்குவதாகவும் நல்லபடியாக கவனித்துக் கொள்வதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. 
ஒவ்வொரு நாடுகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து மூன்று நாடுகளை தெரிவு செய்து இறுதியில் மலேசியாவை தேர்ந்தெடுத்தேன். 
 உலகில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே மோசமானவற்றுள் சிறந்த நாடு (Best of the worst) மலேசியா என்ற அடிப்படையிலும் ஒரு நபர் வாழ்வதற்கு சிறந்த நாடு என்ற வகையிலும் எனது தேர்வு அமைந்தது. 
மலேசியாவை தேர்ந்தெடுத்தமைக்கான காரணங்களை பின்வருமாறு கூறுகிறார் ஜாகிர் நாயக். 
1. மலேசியா போர் பகுதியில் இருந்து வெகு தூரத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தற்போது போர் பகுதியில் உள்ளன. மலேசியா அப்படி அல்ல. 
2. தென்கிழக்காசியாவில் அமைந்துள்ளதால் மேற்கத்திய நாடுகளின் நேரடி ஆதிக்கம் மற்றும் கொடுமைகளிலிருந்து மலேசியா விலகி உள்ளது. 
3. தற்போது உலகளாவிய இஸ்லாமிய நாடுகளில் மலேசிய கடவுச்சீட்டு தான் அதிக மதிப்புள்ளது. இதனால் 185 நாடுகளுக்கு விசா இன்றி சென்று வர முடியும். 
4. அரேபிய பிராந்தியத்தில் இல்லாத இஸ்லாமிய நாடுகளிலேயே மலேசியாவில் தான் இஸ்லாம் அதிகமாக பின்பற்றப்படுவதாக கருதுகிறேன். 
5. மலேசியாவில் வாழ்க்கைச் செலவு குறைவு கிட்டத்தட்ட இந்தியாவுக்கு இணையான வாழ்க்கைச் செலவுகள் 
6. மலேசியா மிக அழகான நாடு. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக இங்குள்ள புத்ராஜெயா என்ற நிர்வாக தலைநகர்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த இஸ்லாமிய நகரம். இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நகரம் என்பேன். இங்கு இரவு வாழ்க்கை, நடன விடுதிகள் கிடையாது. மதுகூடங்களும் இல்லை. 
 இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது எனது தெரிவு சரியானது என நினைக்கிறேன் என்றார். 
 ஆனால் இந்தியாவில் 500 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் மலேசியாவில் தன்னுடன் இருவர் மட்டுமே இருப்பதாகவும் ஜாகிர் நாயக் தெரிவித்தார்.
15 நாடுகள் அழைப்பு விடுத்தும் மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தேன்? ஜாகிர் நாயக் விளக்கம் 15 நாடுகள் அழைப்பு விடுத்தும் மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தேன்? ஜாகிர் நாயக் விளக்கம் Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

வெளியாகின ஆசிரியர் கலாசாலை பெறுபேறுகள் (பார்வையிடுவதற்கான லிங்க் இணைப்பு)

September 22, 2020

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இறுதி பரீட்சைகள் கடந்த 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டன. அதன் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட் டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
பரீட்சைக்கு தோற்றிய 966 பேரின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 
பெறுபேறுகளைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

வெளியாகின ஆசிரியர் கலாசாலை பெறுபேறுகள் (பார்வையிடுவதற்கான லிங்க் இணைப்பு) வெளியாகின ஆசிரியர் கலாசாலை பெறுபேறுகள் (பார்வையிடுவதற்கான லிங்க் இணைப்பு) Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை: கொழும்பு, கண்டியின் நிலை:

September 22, 2020

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. தற்பொழுது பெய்துவரும் மழையின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 17 நாட்களில் நாட்டில் 506 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். 
இவர்களுள் பெரும் எண்ணிக்கையிலானோர் கண்டி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். 
தமது வீடுகளுக்கு அருகாமையிலும் பாடசாலை உள்ளிட்ட சுற்றாடல் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பரவாதவகையில் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று தொற்றுநோய் விசேட வைத்தியர்கள் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
(அ.த.தி)
டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை: கொழும்பு, கண்டியின் நிலை: டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை: கொழும்பு, கண்டியின் நிலை: Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

நாளை முதல் பஸ்ஸிற்குரிய நிரலில் பயணிக்க கூடிய வேறு வாகனங்கள்

September 22, 2020

 


கொழும்பில் அமல்படுத்தப்படும் வீதி ஒழுங்கு விதிமுறையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது. 
அதாவது அரச தனியார் பேருந்துகள், காரியாலய சேவையில் ஈடுபடும் பேருந்துகள், பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வேன்கள் மாத்திரமே குறித்த ஒழுங்கையில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பயணிகளை ஏற்றும் பொழுதும் இறக்கும்பொழுதும் உரிய பஸ் தரிப்பிடங்களில் மாத்திரம் அதை ஒட்டியதாக நிறுத்த வேண்டும். 
இவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களை முந்திச் செல்வதற்காக மாத்திரம் குறித்த ஒழுங்கையில் பயணிக்கும் ஏனைய வாகனங்கள் இரண்டாவது ஒழுங்கையை பயன்படுத்தலாம்.
நாளை முதல் பஸ்ஸிற்குரிய நிரலில் பயணிக்க கூடிய வேறு வாகனங்கள் நாளை முதல் பஸ்ஸிற்குரிய நிரலில் பயணிக்க கூடிய வேறு வாகனங்கள் Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

அதாவுல்லாவின் ஆடைக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு: இறுதியில் நடந்தது ...

September 22, 2020

 


பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று பாராளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை தொடர்பில் எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. 
இந்த பாராளுமன்றத்திற்கு இவ்வாறான ஆடைகள் அணிந்து வர முடியாது. இது ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அல்ல என்று பல கோஷங்கள் எழுப்பப்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இறுதியில் பாராளுமன்றத்தில் இருந்து அதாவுல்லா வெளியேறினார்.
அதாவுல்லாவின் ஆடைக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு: இறுதியில் நடந்தது ... அதாவுல்லாவின் ஆடைக்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு: இறுதியில் நடந்தது ... Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

சிறையிலிருக்கும் பிள்ளையானுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதவி

September 22, 2020

சிறையிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களால் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கடந்த பொதுத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்தார். 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் சிறையில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறையிலிருக்கும் பிள்ளையானுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதவி சிறையிலிருக்கும் பிள்ளையானுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதவி Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

மீண்டும் ஆரம்பமாகும் அரசின் உத்தியோகபூர்வ SMS சேவை

September 21, 2020

அரச தகவல் திணைக்களத்துக்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்க உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை (Official SMS News Alerts) பொது மக்களுக்கு மிக இலகுவான வகையில் நம்பிக்கை மற்றும் துரிதமான செய்தி வேவையாக முன்னெடுக்கும் நோக்கிலான குறுஞ்செய்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  
அந்தவகையில் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை (SMS) மீண்டும் நாளை ஆரம்பமாகவுள்ளது. 
இதற்கான வைபவம் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அவர்களின் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் வளவில் நாளை செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகும். 
உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை மொபிடெல் மற்றும் டயலொக் போன்ற கையடக்க தொலைபேசி வலைப்பின்னல் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
மொபிடெல் வலைப்பின்னலில் REG (space)என்று டைப் செய்து 2299 என்ற இலக்கத்திற்கும், டயலொக் வலைப்பின்னலில் info என்று டைப் செய்து 678 என்ற இலக்கத்திற்கும் எஸ்.எம்.எஸ் செய்வதன் மூலம் உங்களது கையடக்க தொலைபேசியில் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.
(அ.த.தி.)
மீண்டும் ஆரம்பமாகும் அரசின் உத்தியோகபூர்வ SMS சேவை மீண்டும் ஆரம்பமாகும் அரசின் உத்தியோகபூர்வ SMS சேவை Reviewed by irumbuthirai on September 21, 2020 Rating: 5

இலங்கை பொலிஸிற்கு முதலாவது பெண் DIG

September 21, 2020

இலங்கை பொலீஸ் வரலாற்றில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் முதன்முறையாக DIG தரத்திற்கு உயர்த்தப்பட உள்ளார். இதற்கான அனுமதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது. 
ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவிக்கையில், 
SSP தரத்திலுள்ள 9 பெண் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அதில் ஒருவரை DIG ஆக அனுமதிக்கும்படி பதில் பொலிஸ் மா அதிபர் ஆணைக்குழுவிடம் கோரியிருந்தார். 
அந்த வகையில் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி SSP Bimsani Jasinghaarachchi இதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
Bimsani Jasinghaarachchi 1997 இல் பொலிசில் இணைந்து 2017 இல் SSP ஆக பதவியுயர்வு பெற்றவர். 
இலங்கை பொலிஸ் வரலாற்றில் இதுவரை பெண்கள் SSP வரையே உயர் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(நிவ்ஸ்வய)
இலங்கை பொலிஸிற்கு முதலாவது பெண் DIG இலங்கை பொலிஸிற்கு முதலாவது பெண் DIG Reviewed by irumbuthirai on September 21, 2020 Rating: 5

Covid-19 காரணமாக வெளிநாடுகளில் தொழில்வாப்புக்களை இழந்தவர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு..

September 21, 2020

Covid - 19 தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ள இலங்கை பணியாளர்களுக்கு வேறு இடங்களில் தொழில்வாய்ப்பு வழங்கும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாப்பு பணியத்தின் தலைவர் கமல் ரத்வத்தையினால் சுற்றறிக்கை மூலம் வெளிநாட்டு வேலைவாப்பு முகவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தொழில் தொடர்பான உடன்படிக்கை கால எல்லை முடிந்த பின்னர் நாடு திரும்ப முடியாதுள்ள பணியாளர்களுக்கு தற்போதுள்ள நாட்டில் வேறு தொழில்வாப்புகளை பெறுவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இதற்கு தேவையான அனுமதி மற்றும் பாதுகாப்பு முத்திரையிடப்பட்ட கடவு சீட்டை பெற்றுக்கொடுப்பதற்கான நடைவடிக்கை பணியாளர்கள் இருக்கும் இலங்கை தூதரக அலுவலகத்தின் தொழிலாளர் சேமநால நிதியத்தின் மூலம் மேற்கொள்ள முடியும். 
தேவையான ஆவணங்களை நாட்டிலுள்ள தொழில் முகவர்கள் மூலம் பணியாளர்கள் தொழில் செய்ய எதிர்பார்த்துள்ள இடத்தின் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
(அ.த.தி)
Covid-19 காரணமாக வெளிநாடுகளில் தொழில்வாப்புக்களை இழந்தவர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. Covid-19 காரணமாக வெளிநாடுகளில் தொழில்வாப்புக்களை இழந்தவர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. Reviewed by irumbuthirai on September 21, 2020 Rating: 5

மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை

September 21, 2020

 


இலங்கை அடுத்த வருடம் மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் அறிவித்துள்ளது. 
1500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் தற்சமயம் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது இதனால் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் 22,500 மெற்றிக்தொன் மஞ்சள் அறுவடையாக கிடைக்கும் என்று ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணும் இலங்கை Reviewed by irumbuthirai on September 21, 2020 Rating: 5

பொறியியல் பீடங்களுக்கு மேலதிக மாணவர்கள்..

September 20, 2020

 


நாட்டிலுள்ள பொறியியல் பீடங்களுக்கு மேலதிகமாக 405 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். 
உயர்கல்வி அமைச்சில் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் அதிகாரிகளுடன் கல்வி அமைச்சர் பேராசிரி ஜீ.எல். பீரிஸ் நடத்திய கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். 
பேராதனை, யாழப்பாணம், ருஹூணு, மொரட்டுவை, தென்கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு இந்த மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொறியியல் பீடங்களுக்கு மேலதிக மாணவர்கள்.. பொறியியல் பீடங்களுக்கு மேலதிக மாணவர்கள்.. Reviewed by irumbuthirai on September 20, 2020 Rating: 5
Powered by Blogger.