சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச கற்கை நெறி

October 15, 2022

சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச டிப்ளோமோ பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கிராமிய கலைகள் நிலையத்தால் கோரப்பட்டுள்ளது. 

கற்கை நெறியின் இலக்கு: 
இலங்கையின் கலாசார உரிமைகளை அழியாது பாதுகாத்தல், அழிவுக்குள்ளாகிய மற்றும் உள்ளாகி வரும் கலாசார உரிமைகளை பாதுகாத்தல் அவற்றை புனரமைத்தல் மற்றும் படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை உருவாக்குதல் அதன் மூலம் அவர்களுக்கான நிரந்தர மற்றும் சிறப்பான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புதல். 

காலம்: ஒரு வருடம். 

கட்டணம்: இலவசம். 

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்: 

விண்ணப்பதாரி 18 - 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 

சாதாரண தரத்தில் சித்திரப் பாடத்தில் சித்தியடைந்து இருக்க வேண்டும். 


தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நடைமுறை மற்றும் கோட்பாட்டு ரீதியில் ஒரு வருட காலம் பயிற்சி பெறுதல் வேண்டும். 

அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரிகள் நடைமுறை பரீட்சையொன்றின் பின் இணைக்கப்படுவதோடு பரீட்சை குழுவின் முடிவே இறுதியானதாகும். 

விண்ணப்பங்களை மின்னஞ்சல் முறையில் அனுப்ப...

விண்ணப்பங்களை பதிவு தபாலில் அனுப்ப... 

பணிப்பாளர் நாயகம். 
கிராமிய கலைகள் நிலையம். 
பெலவத்தை, 
பத்தரமுல்லை. 
(கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் கற்கை நெறியின் பெயரை குறிப்பிட வேண்டும்.)

கூகுள் விண்ணப்ப படிவத்தை whatsapp முறையில் பெற்றுக் கொள்ள... 
07534188888. 

மேலதிக விவரங்களுக்கு... 
0112786716 

கற்கை நெறி ஆரம்பமாகும் உத்தேச திகதி: 
15-11-2022. 

விண்ணப்ப முடிவு திகதி: 25-10-2022.முன்னைய செய்திகள்:
 

 
சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச கற்கை நெறி சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச கற்கை நெறி Reviewed by Irumbu Thirai News on October 15, 2022 Rating: 5

மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்!

October 15, 2022


இலங்கையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம் அதிகரித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன இணைந்து இலங்கையில் நிலவும் சமூக பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை கண்டறிய அண்மையில் ஆய்வினை மேற்கொண்டன. 

11 மாவட்டங்களில் 2,871 குடும்பங்கள் மற்றும் தோட்டத்துறையைச் சேர்ந்த 300 குடும்பங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 வீதமானோர் தமது பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் அபாயம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்குரிய பிரதான காரணம் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி என தெரிய வந்துள்ளது. 

மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 2,871 குடும்பங்களில் 34 வீதமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியினால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 பெருந்தோட்டங்களை சேர்ந்த 300 குடும்பங்களில் 7 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக அடிக்கடி பாடசாலைகள் மூடப்பட்டன. இதேவேளை இந்த வருட தொடக்கத்திலிருந்து இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்தை பிரச்சினை என்பவற்றினாலும் பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டன. Online கல்வி நடவடிக்கைகளும் சகலரையும் முறையாக சென்றடையவில்லை. தொழில்நுட்ப இடைவெளி காரணமாக இதில் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இலங்கை சட்டத்தின் படி 16 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட சகலரும் மாணவர்களாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.முன்னைய செய்திகள்:
மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்! மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by Irumbu Thirai News on October 15, 2022 Rating: 5

10-10-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

October 13, 2022

10-10-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
 
 
முன்னைய செய்திகள்:
 
 
10-10-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 10-10-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on October 13, 2022 Rating: 5

07-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-10-2022

October 13, 2022

07-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
 
 
முன்னைய செய்திகள்:

 

 
07-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-10-2022 07-10-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-10-2022 Reviewed by Irumbu Thirai News on October 13, 2022 Rating: 5
Powered by Blogger.