மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்!



இலங்கையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம் அதிகரித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன இணைந்து இலங்கையில் நிலவும் சமூக பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை கண்டறிய அண்மையில் ஆய்வினை மேற்கொண்டன. 

11 மாவட்டங்களில் 2,871 குடும்பங்கள் மற்றும் தோட்டத்துறையைச் சேர்ந்த 300 குடும்பங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 வீதமானோர் தமது பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் அபாயம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்குரிய பிரதான காரணம் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி என தெரிய வந்துள்ளது. 

மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 2,871 குடும்பங்களில் 34 வீதமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியினால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 பெருந்தோட்டங்களை சேர்ந்த 300 குடும்பங்களில் 7 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக அடிக்கடி பாடசாலைகள் மூடப்பட்டன. இதேவேளை இந்த வருட தொடக்கத்திலிருந்து இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்தை பிரச்சினை என்பவற்றினாலும் பாடசாலைகள் அடிக்கடி மூடப்பட்டன. Online கல்வி நடவடிக்கைகளும் சகலரையும் முறையாக சென்றடையவில்லை. தொழில்நுட்ப இடைவெளி காரணமாக இதில் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இலங்கை சட்டத்தின் படி 16 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட சகலரும் மாணவர்களாகவே கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



முன்னைய செய்திகள்:




மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்! மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாயம்! ஆய்வில் வெளியான தகவல்! Reviewed by Irumbu Thirai News on October 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.