Results for Local News.

Results Released: G.C.E. (A/L) - 2024

April 20, 2025

G.C.E. (A/L) 2024 results have been released. 


How to check results? 👇

(01) How to check the results through the examination department website? 
 1. Click any link from the following 

Or

 2. Click View button on G.C.E. (A/L)  2024

 3. Enter your index number

 4. Click View results

 

(02) How to check through SMS? 

 1. General SMS 
Type exam {exam code} {index number} and send to 1919

 2. Mobitel 

Type "EXAMS" (Index number) and send to 8884 

 

3. Dialog 

 Type "EXAMS" (Index number) and send to 7777

 

4. Hutch 

 Type "EXAMS" (Index number) and send to 8888

 

5. Airtel 

Type "EXAMS" (Index number) and send to 7545

Results Released: G.C.E. (A/L) - 2024 Results Released: G.C.E. (A/L) - 2024 Reviewed by Irumbu Thirai News on April 20, 2025 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்...

December 30, 2020

மேல் மாகாணத்தில் தற்போதைய நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பாடசாலைகளை மீள திறப்பது சற்றுக் கடினம். அது 
00000
மேலும் தாமதம் அடையலாம் என கல்வி அமைச்சர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 முடக்கப்படாத ஏனைய பிரதேசங்கள் பற்றியே தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த பிரதேச பாடசாலைகள் திட்டமிட்டபடி ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்... மேல் மாகாண பாடசாலைகள்: மீள ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

நாளை முதல் பஸ்ஸிற்குரிய நிரலில் பயணிக்க கூடிய வேறு வாகனங்கள்

September 22, 2020

 


கொழும்பில் அமல்படுத்தப்படும் வீதி ஒழுங்கு விதிமுறையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது. 
அதாவது அரச தனியார் பேருந்துகள், காரியாலய சேவையில் ஈடுபடும் பேருந்துகள், பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வேன்கள் மாத்திரமே குறித்த ஒழுங்கையில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
பயணிகளை ஏற்றும் பொழுதும் இறக்கும்பொழுதும் உரிய பஸ் தரிப்பிடங்களில் மாத்திரம் அதை ஒட்டியதாக நிறுத்த வேண்டும். 
இவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்களை முந்திச் செல்வதற்காக மாத்திரம் குறித்த ஒழுங்கையில் பயணிக்கும் ஏனைய வாகனங்கள் இரண்டாவது ஒழுங்கையை பயன்படுத்தலாம்.
நாளை முதல் பஸ்ஸிற்குரிய நிரலில் பயணிக்க கூடிய வேறு வாகனங்கள் நாளை முதல் பஸ்ஸிற்குரிய நிரலில் பயணிக்க கூடிய வேறு வாகனங்கள் Reviewed by irumbuthirai on September 22, 2020 Rating: 5

புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள்

September 18, 2020

 


எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் வீர, வீராங்கனைகளுக்கு வெளிநாடு செல்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
திறமையான 10 வீர - வீராங்கனைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்குடன் போட்டிகளுக்கான செலவினத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு விழாவில் 30 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள் புலமைப்பரிசில் பெறவிருக்கும் விளையாட்டு வீரர்கள் Reviewed by irumbuthirai on September 18, 2020 Rating: 5

பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தலாம்: பின்பற்றவேண்டிய முறை இதோ!

September 18, 2020

 


Covid-19 தொற்றுக்கு மத்தியில் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சினால் விசேட ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒன்றிணைந்து இந்த ஆலோசனைகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
கொரோனா தொற்றுக்கு மத்தியில் எற்பட்டுள்ள அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு 4 பிரிவுகளின் கீழ் இந்த ஆலோசனைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது விளையாட்டு நடவடிக்கையின் போது கைகளை கழுவுதல் மற்றும் சுகாதார முறைப்படி உணவு உட்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை முன்னெடுத்தல் போன்ற அடிப்படை ஆலோசனைகளுக்கு மேலதிகமாக விளையாட்டு மைதானங்களில் பிரவேசிப்போருக்கு போதுமான சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு இடம்பெறும் சுற்றாடலில் உணவு விற்பனை மற்றும் உணவை விநியோகிக்கும் பணியாளர்களின் சகாதார பாதுகாப்பு விடயங்களை உரிய முறையில் முன்னெடுத்தல் உள்ளிட்;டன இந்த ஆலோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள அதிபர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு தெளிவுபடுத்துவதற்கு தற்பொழுது அனைத்து மகாண கல்வி அதிகாரிகள் விளையாட்டு சங்கங்களின் முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தலாம்: பின்பற்றவேண்டிய முறை இதோ! பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தலாம்: பின்பற்றவேண்டிய முறை இதோ! Reviewed by irumbuthirai on September 18, 2020 Rating: 5

வெளிநாடுகளில் பட்டம் பெற்றோர்க்கு ஆசிரியர் நியமனம் உட்பட ஏனைய அரச வேலைவாய்ப்புகள்

September 17, 2020

 


வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களை இங்கு அரச சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். 
இவ்வாறான பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு பின்தங்கிய பிரதேசங்களில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பித்தல் மற்றும் தேவைப்படும் ஏனைய தொழில்களுக்கும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் செயலாளர் தெரிவித்தார். 
இதுவரை இவ்வாறான 4100 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாகவும் இந்த அடிப்படையில் வெளிநாடுகளில் கல்வி கற்றவர்களின் சேவையை உள்நாட்டில் பெரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பட்டம் பெற்றோர்க்கு ஆசிரியர் நியமனம் உட்பட ஏனைய அரச வேலைவாய்ப்புகள் வெளிநாடுகளில் பட்டம் பெற்றோர்க்கு ஆசிரியர் நியமனம் உட்பட ஏனைய அரச வேலைவாய்ப்புகள் Reviewed by irumbuthirai on September 17, 2020 Rating: 5

அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு என வந்தால் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்:

September 17, 2020

 


ஜனாதிபதி, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர், பிரதமரின் காரியாலய அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் வேண்டுகோள் அல்லது கட்டளை என்ற பெயரில் கடிதத்தோடு வருகின்ற மாணவர்களின் அனுமதியை செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
சில வேளைகளில் அரச அதிகாரிகளும் இவ்வாறான கடிதங்களை அனுப்புவதாக தெரியவந்துள்ளது. மாணவர் அனுமதி தொடர்பாக உள்ள நியதிகள், நடைமுறைகள் மாத்திரமே பின்பற்றப்பட வேண்டும் மாறாக கடிதங்களுக்கு மாணவர் அனுமதி மேற்கொள்ளக்கூடாது 
இவ்வாறு நடக்கும் அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலாளர் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.
​00000
அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு என வந்தால் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்: அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை: ஜனாதிபதி, பிரதமரின் செல்வாக்கு என வந்தால் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம்: Reviewed by irumbuthirai on September 17, 2020 Rating: 5
Powered by Blogger.