Results for Common News And Cinema

Vacancies (University of Jaffna)

April 05, 2024

 
Applications are invited by University of Jaffna. 
 
Posts: 
Senior lecturer Grade 1 
 
Senior lecturer Grade 11 
 
Lecturer (Unconfirmed) 
 
Lecturer (Probationary) 
 
 
Closing date: 2024-05-02. 
 
 
Click the links below for... 
 
 
 
 
 
 
 
 
Previous:
 
 
Vacancies (University of Jaffna) Vacancies (University of Jaffna) Reviewed by Irumbu Thirai News on April 05, 2024 Rating: 5

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார்

December 01, 2021
 

தன்னை இனிமேல் யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். 
 
இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
என்னை அஜித் என்றோ அஜித்குமார் என்றோ அல்லது AK என்றோ அழைப்பதையே நான் விரும்புகிறேன். மாறாக தல என்றோ அல்லது வேறு அடைமொழிகளை கொண்டோ அழைப்பதை விரும்பவில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி மற்றும் மனநிறைவு நிறைந்த ஒரு அழகான வாழ்க்கையை நான் மனதார வாழ்த்துகிறேன். 
 
என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2001 இல் 'தீனா (Dheena)' என்ற திரைப்படம் வெளியானதிலிருந்து அஜித் குமாருக்கு 

தல என்ற அடைமொழி மிகப் பிரபலமடைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அஜித்குமாருக்கு இந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
நடிகர் விஜய்யை தளபதி என்றும் அஜீத் குமாரை தல என்றும் அவரவர் ரசிகர்கள் கொண்டாடி வருவது வழமை. அடிக்கடி இந்த இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவதும் வழமை. 
 
வலிமை என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நிலையிலேயே அஜித்குமாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் Reviewed by Irumbu Thirai News on December 01, 2021 Rating: 5

சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்!

October 01, 2021
 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம் இன்றாகும். அவர் மறைந்தாலும் இந்திய சினிமா வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை ஆகும். 
 
அவர் தொடர்பான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகிறோம். 
 
அவர் முதன் முதலில் நடித்த மேடை நாடகம் ராமாயணம். அதில் சீதையாக நடித்தார். 
 
அவரது முதல் திரைப்படம் பராசக்தி. 1952இல் வெளிவந்தது. 
 
சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி. 
 
1962 இல் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். 
 
எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் சிவாஜி. 
 
தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை சிவாஜி ஆரம்பித்தார். ஆனால் சினிமாவில் வெற்றி கண்ட இவருக்கு அரசியலில் வெற்றி காண முடியவில்லை. 
 
கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி கணேசன். 
 
சிவாஜி நடிக்க விரும்பிய கதாப்பாத்திரம் எது தெரியுமா? இவருக்கு 'சிவாஜி' என்ற பெயர் கொடுத்த தந்தை பெரியாருடைய வேடம்தான் அது. ஆனால், இறுதிவரை அது நடக்கவில்லை. 
 
சென்னையில் இவரது பெயரில் சாலை, அவருக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை உண்டு. 
 
இந்த நிலையில் இவரது 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக Google நிறுவனம் டூடுல் (Doodle) வெளியிட்டுள்ளது. இதனை வரைந்தவர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி என்பவர்.
சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! Reviewed by Irumbu Thirai News on October 01, 2021 Rating: 5

"மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி

September 21, 2021
 

மெனிக்கே மகே ஹிதே.. என்ற பாடல் மூலம் குறுகிய காலத்திற்குள் உலகம் பூராவும் புகழ்பெற்றவர் இலங்கையைச் சேர்ந்த யொஹானி சில்வா (Yohani Silva). 
 
குறித்த பாடலை கடந்த மே மாதம் தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டார். இதுவரை அந்தப் பாடல் 118 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை (views) பெற்றுள்ளதோடு 
 
அவரது யூடியுப் தளம் 2.39 மில்லியன் Subscribers ஐயும் பெற்றுள்ளது விஷேட அம்சமாகும். 
 
இவரின் இந்த பாடல் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தற்பொழுது பலராலும் பாடப்பட்டு வருகிறது. 
 
விசேடமாக திரை நட்சத்திரங்கள் பலரும் தமது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலை பகிர்ந்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்த யோஹானியை கௌரவிக்கும் முகமாக அவருக்கு புதிய பதவி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் 
 
இலங்கைக்கு இடையிலான கலாசாரா தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இதற்காக இலங்கை அரசு, இந்திய தூதரகம் உட்பட பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் இந்தியா செல்லவிருக்கும் யோஹானி ஹைதராபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் 
 
நிகழ்ச்சிகளில் பாட இருக்கிறார். மேலும் இந்திய தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.
 
மேலும் அவரது இந்திய விஜயத்திற்கு  இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
"மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி "மெனிக்கே மகே ஹிதே" யொஹானிக்கு கிடைத்த பதவி Reviewed by Irumbu Thirai News on September 21, 2021 Rating: 5

உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

September 20, 2021
 

தற்போதைய டிஜிட்டல் பொருளாதார உலகில் தரவுகள் என்பது முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. ஒவ்வொருவரினதும் இப்படிப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய சந்தையே இயங்கிக்கொண்டிருக்கிறது. 
 
எனவே பொருளாதார கருமங்களுக்கு இப்படிப்பட்ட சகல தரவுகள், தகவல்கள் முக்கியமாக தேவைப்படுவதால் தற்போது இது தகவல் பொருளாதாரம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. 
 
 
எது தனிப்பட்ட தரவுகள்? 

நாம் எந்த இணையத்தளத்திற்கு சென்றாலும் எம்மைப் பற்றி ஏதோ ஒரு சில தரவுகளை அவை பெற்றுக் கொள்கின்றன. சில தளங்கள் நாம் எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிக்கிறோம்? எந்த நேரத்தில் இணையத்தை பயன்படுத்துகிறோம்? எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறோம்? என்ற பொதுவான விடயங்களை பெற்றுக் கொள்கின்றன. 
 
இன்னும் சில இணையதளங்கள் இதற்கு மேலதிகமாக எமது பெயர், முகவரி, வயது, இமெயில், தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களையும் பெற்றுக் கொள்கின்றன. 
 
பொதுவான தரவுகளை பெற்றுக்கொள்வது பிரச்சினை அல்ல. ஆனால் குறித்த தரவுகளை வைத்து நபர் யார் என்பதை அடையாளம் காண முடியும் என்றால் அவை தனிப்பட்ட தரவுகளாக கருதப்படும். இவ்வாறான தகவல்களை பெறுவது தனிநபர் உரிமை மீறலாகும். 
 
 
கவனமாக இருப்பது எப்படி? 
மிக முக்கியமான விடயம் என்னவென்றால் தேவைக்கு அதிகமான தகவல்களை வழங்க கூடாது. இதனால் இரு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்று, எம்மைப் பற்றிய அதிக தகவல்கள் மூன்றாம் நபருக்கு செல்கின்றன. மற்றையது, எம்மை அவர்களது தளத்தில் அதிக நேரம் செலவழிக்க வைப்பதற்கான வாய்ப்பை நாமே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். உதாரணமாக, குறித்த தளம் ஒன்றில் மின்னஞ்சல் முகவரி கேட்கப்படாவிட்டால் நாம் அதை வழங்கக்கூடாது. ஆனால் கட்டாயம் மின்னஞ்சல் வழங்க வேண்டுமென்றால் 

இப்படிப்பட்ட பொதுவான விடயங்களுக்காக வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தனிப்பட்ட எமது மின்னஞ்சல் முகவரியை வழங்கக்கூடாது. எனவே பொதுவான விடையங்களுக்கு ஒன்றும் தனிப்பட்ட விடயங்களுக்கு ஒன்றும் என குறைந்தது இரு மின்னஞ்சல் முகவரிகளை பேணுவது சிறந்தது. 
 
 
VPN பாவிப்பவர்கள் நினைப்பதுண்டு எம்மைப் பற்றிய தரவுகளை வலைத்தளங்களுக்கு பெறமுடியாது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. நாம் விபிஎன் பாவிக்கும் போது எமக்கு இணைய சேவை வசதி வழங்கும் நிறுவனங்களுக்குதான் அது தெரியாமல் போகும். ஆனால் நாம் செல்லும் வலைத்தளங்கள் எமது தரவுகளை பெற்றுக் கொள்கின்றன. எனவே விபிஎன் பயன்படுத்தும் போதும் கவனமாக செயல்பட வேண்டும். 
 
 
சில மென்பொருள்கள் அல்லது செயலிகளை நாம் குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கென தற்காலிகமான தரவுகளை மட்டும் நாம் வழங்குவது போதுமாகும். 
 
சமூக ஊடக மென்பொருள் அல்லது செயலிகளை பதிவிறக்கம்(Download) செய்யும் போது நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
 
 
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் எமது தனிப்பட்ட தரவுகளை அதில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். 
 
 
ஒரு மென்பொருள் அல்லது செயலியை நாம் பயன்படுத்த விரும்பினால் அது தொடர்பான தனிநபர் கொள்கை (Privacy Policy) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions) மூன்றாம் தரப்பு மதிப்பாய்வு (Review) போன்றவற்றை அவசியம் பரிசோதித்தே முடிவெடுக்க வேண்டும். 
 
 
எமது தரவுகளை வழங்குவதால் என்ன நேர்ந்து விடப்போகிறது என்ற அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வணிகர்களால் தகவலாகவும் பயன்படுத்தப்படலாம். தவறாகவும் பயன்படுத்தப்படலாம். எமது தனிநபர் உரிமை குறித்து முதலில் நாமே கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன?

September 19, 2021
 

தென்னிந்திய நடிகர் விஜய் தனது தாய் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 
 
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 09 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
 
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் 
 
போட்டியிடவுள்ளனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பின் அதற்கான அனுமதியை விஜய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
அதாவது இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவும் தனது பெயரையும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட விஜய் அனுமதி அளித்துள்ளார். 
 
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. எவ்வாறாயினும் அவரது பெயரைச் சொல்லி அரசியலில் ஈடுபட அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி தந்தார் என்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான விஜய் அன்பன் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 
 
ஏன் வழக்கு தொடர்ந்தார்? 
 
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் ரசிகர்களை இணைத்து "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற கட்சி தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். மேலும் இந்த கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். 
 
இதற்கு கடுமையான ஆட்சேபணை தெரிவித்த நடிகர் விஜய். தனது பெயரில் கட்சி தொடங்கப்படுவதில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறி தனது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையே இம்மாதம் 27 ஆம் தேதி வருகிறது.
தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்:

July 14, 2021

புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் விஜய்க்கு 1 இலட்சம் ரூபா அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காருக்கு 
நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று(13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு ரூபா: 1 இலட்சம் அபராதமும் விதித்தது. 
சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் இவ்வாறு வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 
இதேவேளை குறித்த Rolls Royce காரின் வகைககள் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபா முதல் 11 கோடி ரூபா வரை விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்: விஜய்க்கு அபராதம் விதித்த நீதிமன்றம்: உண்மையான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்: Reviewed by irumbuthirai on July 14, 2021 Rating: 5

2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு)

April 27, 2021

இந்த வருடத்திற்கான (2021) ஆஸ்கர் (Oscar) விருது வழங்கும் விழா அமெரிக்கா, லொஸ் ஏஞ்சலிஸில் இன்று (26) நடைபெற்றது. 
விருதுகளின் விபரம் பின்வருமாறு: 
 • சிறந்த திரைப்படம்: நோமேட்லேண்ட் (Nomadland) 
 • சிறந்த இயக்குனர்: Chloe Zhao என்ற பெண். (Nomadland திரைப்படத்துக்காக) 
 • சிறந்த நடிகை: Frances McDormand (திரைப்படம் - Nomadland) 
 • சிறந்த நடிகர்: 83 வயதாகும் Anthony Hopkins (திரைப்படம் - The Father) 
 • சிறந்த துணை நடிகர்: Daniel Kaluuya (திரைப்படம் - Judas and the Black Messiah) 
 • சிறந்த துணை நடிகை: Yuh Jung Youn (திரைப்படம் - Minari) 
 • சிறந்த தழுவல் திரைக்கதை: The Father திரைப்படம். 
 • சிறந்த சர்வதேச முழுநீளப் படம்: Another Round திரைப்படம். 
 • சிறந்த முழுநீள அனிமேஷன் படம்: Soul திரைப்படம். 
 • சிறந்த அனிமேஷன் குறும்படம்: If Anything Happens, I Love You என்ற படம். 
 • சிறந்த ஆவணப்படம்: My Octopus Teacher. 

 • சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: Another Round (டென்மார்க்) 
 • சிறந்த ஆவண குறும்படம்: Colette 
 • சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம்: Two Distant Strangers 
 • சிறந்த ஒளிப்பதிவாளர்: Erik Messerschmidt (Mank) 
 • சிறந்த படத் தொகுப்பாளர்: Mikkel EG Nielsen (Sound of Metal) 
 • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: Andrew Jackson, David Lee, Andrew Lockley and Scott Fisher 
 • சிறந்த திரைக்கதை: Emerald Fennell (Promising Young Woman) 
 • சிறந்த பின்னணி இசை: Trent Reznor, Atticus Ross and Jon Batiste (Soul) 
 • சிறந்த பாடல்: Fight For You (Judas and the Black Messiah) 
 • சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: Sergio Lopez-Rivera, Mia Neal and Jamika Wilson (Black Bottom) 
 • சிறந்த ஆடை வடிவமைப்பு: Ma Rainey’s Black Bottom 
 • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: Donald Graham Burt and Jan Pascale (Mank) 
 • சிறந்த ஒலி அமைப்பு: Nicolas Becker, Jaime Baksht, Michelle Couttolenc, Carlos Cortés and Phillip Bladh (Sound of Metal) 
சிறப்பம்சங்கள்:
 • ஒஸ்கரின் 93 வருட வரலாற்றில் பெண் இயக்குநருக்கு 2வது தடவையாக சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 • Nomadland திரைப்படம் மூன்று முக்கிய விருதுகளுக்கு காரணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 • 83 வயதான ஒருவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு) 2021 ஒஸ்கார் விருதுகளும் அதன் சிறப்பம்சங்களும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on April 27, 2021 Rating: 5

நடிகர் விவேக் காலமானார்!

April 17, 2021

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (16) காலை சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (17) அதிகாலை 4.35 மணியளவில் உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 59. 
 • 1961ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தார். 
 • 1987ல் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 
 • தலைமைச் செயலக ஊழியராகவும் 1986-92 வரை பணியாற்றியுள்ளார். 
 • கதாநாயகனாக வெள்ளைப்பூக்கள், நான்தான் பாலா போன்ற படங்களில் நடித்துள்ளார். 
 • நகைச்சுவையுடன் இணைத்து சமூகக் கருத்துக்களையும் சொல்லி சின்ன கலைவானர் என்ற பெயரையும் பெற்றார். 
 • 2009 ல் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றார். 
 • சிறந்த நகைச்சுவை நடிகருக்காக மாநில அரசின் விருதை 5 தடவை பெற்றவர். 

 • இதுவரை 220-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 • இறுதியாக 2020ல் தாராளப் பிரபு என்ற படத்தில் நடித்திருந்தார். 
 • இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார். 
 • மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார். 
 • கொரோனா பாதுகாப்பு, பிளாஸ்டிக் இல்லா தமிழகம் போன்ற விழிப்புணர்வு குறும் படங்களிலும் நடித்து சமூகப் பணியாற்றினார். 
மக்களுக்கு விழிப்புணர்வை வழங்குவதற்காக மாரடைப்பு வருவதற்கு முன்னையநாள் தானே முன்வந்து கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
சிறந்த ஒரு கலைஞரை சமூக சேவகரை திரையுலகம் இழந்து நிற்கிறது.
நடிகர் விவேக் காலமானார்! நடிகர் விவேக் காலமானார்! Reviewed by irumbuthirai on April 17, 2021 Rating: 5

ராதிகா மற்றும் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை... கொரோனா பாதிப்பில் ராதிகா...

April 07, 2021

2014ல் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து 'இது என்ன மாயம்' என்ற படத்தைத் தயாரித்தது ராதிகா, சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃப்ரேம்ஸ் என்ற நிறுவனம். 
இந்த படத் தயாரிப்பிற்காக ரேடியண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் 
ஒன்றரைக் கோடி ரூபாயை கடனாகப் பெற்றது. இந்த பணத்தை திருப்பித் தராத காரணத்தால் இது தொடர்பாக ரேடியண்ட் நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில் சரத்குமார், ராதிகா இருவருக்கும் தலா ஓரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
மேல் முறையீடு செய்யும்வரை சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென சரத்குமார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதற்கமைய சரத்குமாருக்கு மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமளித்து தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதால், அதிலிருந்து மீண்டவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார்.
ராதிகா மற்றும் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை... கொரோனா பாதிப்பில் ராதிகா... ராதிகா மற்றும் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை... கொரோனா பாதிப்பில் ராதிகா... Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு)

December 29, 2020

ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என அறிவித்து மருத்துவர்களின் ஆலோசனையையும் மீறி ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தென்னிந்திய Super Star நடிகர் ரஜனிகாந்த். 
கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்தாலும் அதில் நான்கு பேருக்கு தொற்று உறுதியானது. 
ரஜினிக்கு தொற்று ஏற்படவில்லையாயினும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது. 
வீடு திரும்பிய அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றியும் இதர விடயங்கள் தொடர்பாகவும் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 
அவர் வெளியிட்ட முழுமையான அறிக்கையை கீழே தருகிறோம்.
என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) என்னை மன்னியுங்கள்: மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்ட ரஜினிகாந்த் (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

23 வரை மூடப்படும் திணைக்களம்...

October 17, 2020

கொரோனா பரவல் காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் ஒக்டோபர்  23 ஆம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது. 
மேலதிக விபரங்களுக்காக 0115226126/ 011 5226115 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
23 வரை மூடப்படும் திணைக்களம்... 23 வரை மூடப்படும் திணைக்களம்... Reviewed by irumbuthirai on October 17, 2020 Rating: 5

MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை

June 14, 2020


இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் MS Dhoni யின் வாழ்க்கைப் படமான M.S. Dhoni: The Untold Story என்ற திரைப்படத்தில் நடித்த ஹிந்தி நடிகரான Sushant Singh Rajput தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
மும்பையில் உள்ள அவரது இல்லத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இறக்கும்போது வயது 34. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2

September 07, 2019

பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவட் ஹுசைன் செளத்திரி ட்விட்டரில், அனைவரும் தூங்க செல்லுங்கள், நிலவுக்கு செல்வதற்கு பதிலாக மும்பையில் தரையிறங்கியுள்ளது அந்த பொம்மை என்று பதிவிட்டார். 

சந்திரயான் - 2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவட் ஹுசைன் செளத்திரி கிண்டல் செய்வது போல ட்வீட் செய்தார். அதன்பின் 


#indiafailed என்ற ஹாஷ்டேகை பாகிஸ்தான் டிவிட்டர் பயனர்கள் டிரண்ட் ஆக்கினர். #indiafailed என்ற ஹாஷ்டேக் டிவிட்டர் டிரண்டிங்கில் உலகளவில் இடம் பிடித்தது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய தரப்பில் #worthlesspakistan என்ற ஹாஷ்டேக் டிரண்ட் செய்யப்பட்டது. மேலும் #worthlesspakistan என்ற ஹாஷ்டேக் உலகளவில் டிரண்டிங் பட்டியலில் இடம்பெற்றது. 
பாகிஸ்தானுக்கு எதிராக விஜய், 

அஜித் ரசிகர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் பல பதிவுகள் இந்த ஹாஷ்டேகில் காணப்பட்டன. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சேர்ந்து பாகிஸ்தானை கிண்டல் செய்வது போன்ற பல மீம்களையும் இவர்கள் பகிர்ந்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்திய ட்விட்டர்வாசிகள் கடும் எதிர்வினையாற்ற தொடங்க, ஃபாவட் ஹுசைன் செளத்திரி மீண்டும் வெளியிட்ட ட்விட் பதிவில், சந்திரயான் - 2 திட்டத்தின் பின்னடைவுக்கு நான் எப்படி காரணமாவேன்? ஏன் என்னை வசைபாடுகிறார்கள்? என்றும் கேள்வியெழுப்பினார்.
(பீபீசி)
அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2 அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2 Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்...

August 18, 2019
சகல அம்சங்களும் வாக்கெடுப்பிற்கு உட்படும் நிலையே தற்போது காணப்படுகிறது. அந்த வகையில் உலகத்தில் அதிகம் அழகான ஆண் யார் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 
பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை வீழ்த்தி இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்திருக்கிறார். Top 5 Most Handsome Men In The World in August 2019 என்ற வாக்கெடுப்பில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தில் உள்ளார். 
இதுமட்டுமன்றி Chris Evans, David Beckham, Robert Pattinson போன்ற உலகப்புகழ் பெற்ற பிரபலங்களை ஹ்ரித்திக் ரோஷன் வீழ்த்தியிருக்கிறார். 
(கிசு கிசு)
உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்... உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்... Reviewed by irumbuthirai on August 18, 2019 Rating: 5

பிகீல் அப்டேட் - உச்ச கட்டத்தில் ரசிகர்கள்

July 12, 2019
விஜயுடன் தெறி , மெர்சல் வெற்றிப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்த அட்லீயின் இயக்கில் பிகில் உருவாகிவருகிறது.


 பிகில் படம் மூலம்கால்பந்தை மையப்படுத்தி விளையாட்டில் சில விஷயங்களை சொல்ல இருக்கிறார் அட்லீ. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் சென்னையிலேயே நடந்து வருகிறது.
வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் பட ஃபஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடலின் விவரம் வெளியானது.


தளபதி விஜய் முதல் முறையாக ரகுமான் இசையில் பாடுகிறார் என்றதும் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லை.
தற்போது ரசிகர்களுக்காக வந்துள்ள அப்டேட் என்னவென்றால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.

நிகழ்ச்சிக்கான இடம், தேதி போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்கின்றனர்.
பிகீல் அப்டேட் - உச்ச கட்டத்தில் ரசிகர்கள் பிகீல் அப்டேட் - உச்ச கட்டத்தில் ரசிகர்கள் Reviewed by Irumbu Thirai News on July 12, 2019 Rating: 5

ஒல்லியான தல அஜித்!! வைரலாகும் புகைப்படம்

May 22, 2019
அஜித் தற்போது நடித்து வரும் படத்தில் வழக்கறிஞராக நடிக்கின்றார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்

இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
தற்போது தல 60-வது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளார். இப்ப்படத்துக்காக அஜித் தனது உடல் எடையைக் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான புகைப்படம் இன்று இணையத்தில் வைரலாகியுள்ளது..


ஒல்லியான தல அஜித்!! வைரலாகும் புகைப்படம் ஒல்லியான தல அஜித்!! வைரலாகும் புகைப்படம் Reviewed by Irumbu Thirai News on May 22, 2019 Rating: 5

நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸும் விவாகரத்தா

March 30, 2019
தமிழில் விஜய்  நடித்த 'தமிழன்' படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு இந்தியில் நடிக்க சென்ற அவர் அங்கு முன்னணி நடிகையானார். தற்போது ஹொலிவூட் படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார்.

இவர் அங்கு நடிக்கும்போது, தன்னை விட 10 வயது குறைந்த, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த 3 மாதத்துக்குள் அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக, ஓகே (OK magazine) என்ற ஹொலிவூட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த விவாகரத்துக் கதையில் உண்மையில்லை, அது வெறும் வதந்திதான் என்றும் பிரியங்காவும் நிக் ஜோனாஸும் குடும்பத்துடன் மியாமியில் விடுமுறையை கழித்து வருவதாகவும் பிரியங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸும் விவாகரத்தா நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸும் விவாகரத்தா Reviewed by Irumbu Thirai News on March 30, 2019 Rating: 5

சர்கார் படத்தின் தமிழ்நாடு முதல் நாள் வசூலை 2 நாளில் தொட்ட பேட்ட , விஸ்வாசம்

January 13, 2019
கடந்த 10ம் திகதி வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படங்கள் மக்கள் இடைய பெரிய வரவேற்பை பெற்றுள்ளது..

இதன்படி இவ் இரண்டு படத்தின் வசூல் வெளியாகியுள்ளது..
இந்தியா முழுவதும்  2நாட்களில்

#Petta - ₹ 35.50 crs (2 days All-India BO collection ) 
#Viswasam - ₹ 33.50 crs (2 days All-India BO collection ) 

ஆனால் விஜயின் சர்கார் படம் தமிழ்நாடு முதல் நாள் வசூல் செய்த தொகையை விட இது குறைவாகும் என குரிப்பிடத்தக்கது
#Sarkar - ₹ 31.67 crs ( opening day Tamilnadu BO collection alone )

சர்கார் படத்தின் தமிழ்நாடு முதல் நாள் வசூலை 2 நாளில் தொட்ட பேட்ட , விஸ்வாசம் சர்கார் படத்தின் தமிழ்நாடு முதல் நாள் வசூலை 2 நாளில் தொட்ட பேட்ட , விஸ்வாசம் Reviewed by Irumbu Thirai News on January 13, 2019 Rating: 5

தளபதி 63யில் இணையும் வெற்றிப்பட ஹீரோ

January 12, 2019

விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் விரு விருப்பாக Cast தேர்வு நடைபெற்று வந்தது..

ஏற்கனவே நடிகை , காமெடியன் மற்றும் வில்லன் ஆகியோரை உத்தியக பூர்வகமாக அறிவித்தது..
இன்று மாலை 6மணிக்கு இன்னுமொரு அப்டேட் வந்துள்ளது..

அது என்னவேன்றால் கடந்த வருடம் வெளியான பரியேறும் பெருமாள் படித்தில் நடித்து பாராட்டினைப் பெற்ற கதிர் தளபதி 63 நடிக்கவுள்ளார்.
இதனை தயாரிப்பு நிறுவனம் உத்தியகப் பூர்வமாக அறிவித்துள்ளது.


தளபதி 63யில் இணையும் வெற்றிப்பட ஹீரோ தளபதி 63யில் இணையும் வெற்றிப்பட ஹீரோ Reviewed by Irumbu Thirai News on January 12, 2019 Rating: 5
Powered by Blogger.