28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

May 29, 2021

28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 28-05-2021 (In three languages) 
இதில், 
கிராம அலுவலர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை,
சுகாதார அமைச்சிற்கான  பதவி வெற்றிடங்கள்,
தொழில் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கான பதவி வெற்றிடங்கள் 
உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



கடந்த வார வர்த்தமானி:

Join our WhatsApp Groups:


Join Our Telegram Channel:

Like our FB Page:







28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி!

May 29, 2021

யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். 
இவர் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்தவர். இவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா 
தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியானது. 
அதனைதொடர்ந்து இவர் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28) வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி! பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்!

May 29, 2021

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. 
இலங்கையும் பல்வேறு நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை பெற்றாலும் இன்னும் பற்றாக்குறையாகவே உள்ளது. 
இந்நிலையில் கொழும்பு, பொரளை பிரதேச வீடொன்றில் அஸ்ரா செனகா கொரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி, 
குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
இந்த தடுப்பூசி உள்நாட்டவர்களுக்கு ரூபா. 1000 - 25000 வரையிலும் வெளிநாட்டவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்! பொரளை பிரதேச வீடொன்றில் தடுப்பூசி விற்பனை! விசாரணைகள் ஆரம்பம்! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்!

May 29, 2021

ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து இரண்டு தடவைகள் தப்பியோடிய Covid நோயாளி மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய குறித்த நபரின் உடல் மீகொட பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 
குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து தப்பிய நிலையில் வைத்தியசாலைக்கு 
அருகில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார். மீண்டும் அதே தினம் மாலை 3 மணிக்கும் தப்பிச் சென்றதும் வைத்தியசாலையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்! இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

பல்கலைக்கழக விண்ணப்பங்கள்: வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை:

May 29, 2021

பயண கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ள காரணத்தினால் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குரிய ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க குறித்த புத்தக கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விண்ணப்பங்கள்: வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை: பல்கலைக்கழக விண்ணப்பங்கள்: வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை: Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா?

May 29, 2021

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
அதில் தடுப்பூசியை பெறுவதற்காக பொதுமக்கள் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற செய்தியும் பரவுகிறது. 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் அவர்கள், 
தடுப்பூசிக்காக மக்கள் தம்மை முன்பதிவு செய்து கொள்ளும் எந்த ஒரு நடைமுறையையும் சுகாதார அமைச்சு பின்பற்றவில்லை என தெரிவித்தார். மக்கள் தமக்கு கிடைக்கும் வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளின் அடிப்படையில் செயல்பட வேண்டியதில்லை. சுகாதார அமைச்சு மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமையவே மக்கள் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா? தடுப்பூசிக்காக மக்கள் தம்மை பதிவு செய்ய வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்)

May 29, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
நீளம், தூரம், நிறை. 

 

எண் விளக்கங்கள் 

 

எண் கோலங்கள் 

 

கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற சகல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

மாணவர்கள் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

பயிற்சிகளை அதே நேரத்தில் செய்து சரிபார்க்கவும் முடியும்.

 

இலகுவான விளக்க முறைகள். 

குறித்த பாடத்தை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Join our WhatsApp Groups:


Join our Telegram Channel:

Like our FB Page:




தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (கணிதம்) Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021)

May 28, 2021

கிராம உத்தியோகத்தர் பதவிக்குரிய போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாடளாவிய ரீதியில் கோரப்பட்டுள்ளன. 28/5/2021 அன்று வெளியான வர்த்தமானியில் இது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

பரீட்சைக்குரிய மொழிமூலம்:     தமிழ்/சிங்களம்/ஆங்கிலம். 

 

பரீட்சைக்குரிய பாடங்கள்:         
(1) மொழித் திறம                                             (2) பொது அறிவு, உளச்சார்பு. 

 

நேரம்:    ஒவ்வொரு பாடமும் 1 1/2 மணித்தியாலங்கள். 

 

பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள்: 40 (ஒவ்வொரு பாடத்திலும் 40 புள்ளிகள்) 

 

பரீட்சைக்குரிய உத்தேச காலம்:     2021 செப்டம்பர். 

 

வயது எல்லை:     21-35 

 

விண்ணப்ப முடிவு திகதி:     28-06-2021. 

தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 3 மாத பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பணவாக வழங்கப்படும். 

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இது தொடர்பான முழுமையான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிடுக. (சிங்கள மொழி மூல வர்த்தமானி மாத்திரமே தற்போதைய நிலையில் பதிவேற்றப்பட்டுள்ளது)

Latest Update (29/5/2021):

இன்றைய தினம் ஏனைய இரு மொழிகளிலும் (தமிழ், ஆங்கிலம்) வர்த்தமானிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து மும்மொழிகளிலும் வர்த்தமானிகளைப் பார்வையிடுக.

28-05-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021) கிராம சேவையாளர் பதவிக்கான விண்ணப்பம் / Application for the post of Grama Niladhari - 2020 (2021) Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம்

May 28, 2021

தமது நாடுகளுக்கு வழங்க வேண்டிய தடுப்பூசிகளை ஒப்பந்தத்தை மீறி மூன்றாம் நாடுகளுக்கு விநியோகித்து வருவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் பிரெஸல்ஸில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
மூன்றாம் நாடுகளுக்கு அந்த நிறுவனம் தடுப்பூசிகளை வழங்கி ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும், தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களும் புரிந்துகொள்ளும் வகையில் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபேல் ஜப்ராலி குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம் கொரோனா தடுப்பூசிக்காக வழக்கு பதிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம்  Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு

May 28, 2021

உலகம் பூராவும் கொரோனாவானது மனிதர்களுக்கிடையே தீவிரமாக பரவிய கொண்டிருக்கும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் பல முன்னணி நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. 
அந்த போட்டி முடிவடைந்து தற்போது பலவகையான கொரோனா தடுப்பு மருந்துகள் பாவனையில் உள்ள நிலையில் தற்போது விலங்குகளுக்கான கொரோனா தடுப்பு மருந்தையும் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. 
உலகிலேயே விலங்குகளுக்கென உருவாக்கப்பட்ட முதல் கொரோனா தொற்றுத் தடுப்புமருந்து இதுவாகும். 
அந்த மருந்து மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டதோடு 
தற்போது விலங்குகளுக்கு அந்த மருந்தை செலுத்தும் பணியையும் ரஷ்யா தொடங்கியுள்ளது. 
நாய், பூனை, நரி உள்ளிட்ட விலங்குகளிடம் குறித்த மருந்து சோதனை செய்யப்பட்டபோது, நோய் எதிர்ப்புத்தன்மை உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது. 
ஒரு முறை இந்த மருந்தை போட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி 6 மாதத்திற்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 
உலகெங்கும் பல விலங்குகளிடம் கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டபோதும் அது நோய் காவியாக செயற்படுவதற்கு எந்த ஆதரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்:

May 28, 2021

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பொருட்களை விற்பனை செய்ய இரு கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 
எனவே அவ்வாறான வியாபார நிலையங்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் அவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படுவதோடு அந்த ஊரில் உள்ள வேறு கடைக்கு அந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். 
கொண்டுசென்று விற்றல், வீட்டுக்கு வீடு பொருள் விநியோகம், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இரு கடைகளைத் திறத்தல் என பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்கு வசதியாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை(Hotline 1977) பெறும் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்: அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்: Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளியானது அரசாங்கத்தின் முடிவு!

May 28, 2021

தற்போது அமுலில் உள்ள பயண கட்டுப்பாட்டை தளர்த்துவது தொடர்பான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. 
 அந்தவகையில் எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தினங்களில் பயண கட்டுப்பாடு தளர்த்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். 
மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் மற்றும் மருந்து வகைகள் என்பவற்றை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட நடமாடும் வியாபார நிலையங்களில் கொள்வனவு செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளியானது அரசாங்கத்தின் முடிவு! பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா? வெளியானது அரசாங்கத்தின் முடிவு! Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி)

May 28, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 
சொற்களைத் தெரிவோம். 
விரிவான சொற்களுக்குரிய சுருக்க எழுத்துக்களை அறிவோம். 
அலுவலக ரீதியான கடிதம் ஒன்றில் கடிதத்தின் வடிவமைப்பு. 
உவமான உவமேயங்களைக் கற்றுக் கொள்வோம். 
சுவரொட்டி தயாரிப்போம். 
உறுப்பமைய எழுதுவோம். 
வாக்கியம் அமைத்தல். 
போன்ற விடயங்கள் பயிற்சிகளுடன் தரப்பட்டுள்ளன. 
மாணவர்கள் கற்றுக் கொள்வதோடு உடனுக்குடன் பயிற்சிகளை செய்து சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். 
குறித்த விடயங்களை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (தமிழ் மொழி) Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

தரம்:05 புலமைப்பரிசில் பரீட்சை (40 ற்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்)

May 28, 2021

தரம்:05 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள்களை இங்கு தருகிறோம். 
இதில், 
40 ற்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் (பகுதி- 1 & 11) 
அவற்றிற்குரிய புள்ளி வழங்கும் திட்டம் 
போன்றன முறையாக தரப்பட்டுள்ளன. 
பெற்றோர்களும் புள்ளி வழங்கும் திட்டத்தை பார்வையிட்டு முறையாக வழிகாட்டலாம்.
குறித்த வினாத்தாள்களையும் புள்ளி வழங்கும் திட்டத்தையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம்:05 புலமைப்பரிசில் பரீட்சை (40 ற்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்) தரம்:05 புலமைப்பரிசில் பரீட்சை (40 ற்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்) Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

400 நாட்களின் பின் உறவினர்களுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்!

May 28, 2021

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 
400 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ், நேற்று (27) தனது உறவினர்களுடன் வெலிக்கடை சிறையிலிருந்து வீடியோ தொழில்நுட்பம் ஊடாக உரையாடியுள்ளார். 
இதற்குரிய ஏற்பாடுகளை வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
400 நாட்களின் பின் உறவினர்களுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்! 400 நாட்களின் பின் உறவினர்களுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்! Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

Grade: 05 Scholarship Examination (Performance of Candidates - 2020) / புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள்

May 28, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2020) மாணவர்களின் அடைவுகள் பல்வேறு அடிப்படையில் ஒப்பீடு செய்து பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை இங்கு தருகிறோம். 
பல்வேறு அடிப்படையில் பெறுபேறுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஒப்பீடு செய்யப்பட்டு புள்ளிவிபர ரீதியாக இதில் தரப்பட்டுள்ளது. 
குறித்த அறிக்கையை முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
Grade: 05 Scholarship Examination (Performance of Candidates - 2020) / புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் Grade: 05 Scholarship Examination (Performance of Candidates - 2020) / புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வு செய்யப்பட்ட பெறுபேறுகள் Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி! வெளியாகுமா கொரோனாவின் மர்மம்?

May 27, 2021

அமெரிக்க புலனாய்வு அமைப்புகளிற்கு ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 
அதாவது கொரோனா வைரஸ் எப்படி உருவானது? வுஹான் ஆய்வுகூடத்திற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா? என்று கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதுவும் 90 நாட்களுக்குள் 
அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார். இதற்காக தங்களுடைய முயற்சிகளை இரட்டிபாக்கி பணியாற்றுங்கள்," என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
இது தொடர்பாக ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிபராக பதவி ஏற்றவுடனேயே இதுதொடர்பாக அறிக்கை கோரியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை தற்போது அவருக்கு அளிக்கப்பட்டதன் பின்னணியிலேயே தற்போது கூடுதலாக விரிவான அறிக்கையை 90 நாட்களுக்குள் அதிபர் கோரியுள்ளார். 
தற்போது வழங்கப்பட்டுள்ள அறிக்கைகளில், சில புலனாய்வு அமைப்புகள் வைரஸானது விலங்கிடம் இருந்து பரவியது என்ற 
நிலைப்பாட்டிலும் இன்னும் சில புலனாய்வு அமைப்புகள் வைரஸானது ஆய்வு கூடத்தில் இருந்து பரவியிருக்கலாம் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளன. ஆனால் இரண்டிற்கும் உறுதியான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. 
எனவேதான் தற்போது மீண்டும் விரிவான விசாரணை ஒன்றுக்கு அதுவும் 90 நாட்களுக்குள் அறிக்கை வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 
இந்த விசாரணைகளில் வைரஸிற்கும் ஆய்வுகூடத்திற்கும் தொடர்பு உள்ளது என்று நிரூபிக்கப்பட்டால் அமெரிக்கா - சீனா உறவு மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி! வெளியாகுமா கொரோனாவின் மர்மம்? அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி! வெளியாகுமா கொரோனாவின் மர்மம்? Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

தடுப்பூசி வரலாற்றிலேயே சீனா செய்த சாதனை!

May 27, 2021

தடுப்பூசி வரலாற்றிலேயே சீனா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. 
அதாவது நேற்றைய தினம் (26) 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி வரலாற்றில் ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதி கூடிய தடுப்பூசி எண்ணிக்கை இதுவாகும். 
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை வரை 546 மில்லியனுக்கும் மேற்பட்ட சீன மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி வரலாற்றிலேயே சீனா செய்த சாதனை! தடுப்பூசி வரலாற்றிலேயே சீனா செய்த சாதனை! Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

வெளியானது விசேட வர்த்தமானி! கிராம உத்தியோகத்தர் சேவை உட்பட பல விடயங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)

May 27, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அதிவிசேட வர்த்தமானி இன்று வௌியிடப்பட்டுள்ளது. 
அதாவது எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியே இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் பணிகள், 
 
சகல விதமான எரிபொருள் விநியோகம்,  

துறைமுகங்களில் உள்ள கப்பல்களுக்குரிய சேவை,  

பொது போக்குவரத்து சேவை, 
 
இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள்,  

உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படும் கழிவுப் பொருள் முகாமைத்துவ சேவை, 
 
மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட இன்னும் பலரது சேவைகள்... 
 
இது தொடர்பான முழுமையான விவரங்கள் அடங்கிய தமிழ் மொழிமூல வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கில மொழிமூல வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க 
சிங்கள மொழி மூல வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியானது விசேட வர்த்தமானி! கிராம உத்தியோகத்தர் சேவை உட்பட பல விடயங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) வெளியானது விசேட வர்த்தமானி! கிராம உத்தியோகத்தர் சேவை உட்பட பல விடயங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

எச்சரிக்கை!! 6 நாட்களில் 54 பேர் வீடுகளில் மரணம்:

May 27, 2021

கொரோனா தொற்றின் காரணமாக வீடுகளிலேயே மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 06 தினங்களில் மாத்திரம் 54 பேர் இவ்வாறு மரணித்துள்ளனர். அதாவது இம்மாதம் 
20 தொடக்கம் 26 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதிலும் கடந்த இரு தினங்களில் (25 & 26) மாத்திரம் 22 பேர் வீடுகளில் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலைமை அபாயகரமான நிலைமை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை மற்றுமொரு இந்தியாவாக மாறுமா என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
எச்சரிக்கை!! 6 நாட்களில் 54 பேர் வீடுகளில் மரணம்:  எச்சரிக்கை!! 6 நாட்களில் 54 பேர் வீடுகளில் மரணம்: Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

Aptitude Test (B.Sc Honours in Sports Science & Management / B. Sc Honours in Physical Education)

May 27, 2021

Aptitude Test (B.Sc Honours in Sports Science & Management / B. Sc Honours in Physical Education) 
Closing date: 10-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Aptitude Test (B.Sc Honours in Sports Science & Management / B. Sc Honours in Physical Education) Aptitude Test (B.Sc Honours in Sports Science & Management / B. Sc Honours in Physical Education)  Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

External Degrees - Online (Rajarata University of Sri Lanka)

May 27, 2021

Applications called for online external degrees from Rajarata university of Sri Lanka. 
Closing date: 15-06-2021. 
Click the link below for Application forms and further information: 
See the paper advertisement below.
Source: Sunday Observer.


External Degrees - Online (Rajarata University of Sri Lanka) External Degrees - Online (Rajarata University of Sri Lanka) Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

சிறந்த காரியாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒன்பது வயது சிறுமி

May 27, 2021

இங்கிலாந்தில் உள்ள பிரபலமான இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான "இஸ்லாம் சனல் TV" நடத்திய இந்த வருடத்திற்கான (2021) "அல் குர்ஆன் கிராஅத் போட்டி" நிகழ்ச்சித் தொடரில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 09 வயது மர்யம் ஜெஸீம் வெற்றிவாகை சூடப்பட்டார். 
குறித்த தொலைக்காட்சி இந்த போட்டியை 15 வருடங்களாக தொடராக நடாத்தி வரும் நிலையில் 
 "முதல் தடவையாக கலந்து கொண்ட மர்யம் ஜெஸீம் முதலிடத்தைப் பெற்று 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய இராஜ்ஜியத்தின் "அதி சிறந்த அல் குர்ஆன் காரியாவாக " மகுடம் சூட்டப்பட்டார். 
6-14 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே இந்த போட்டி நடத்தப்பட்டது. 
இச் சிறப்பு மகுடத்தை அதி குறைந்த வயதில் வென்ற, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட முதலாவது சிறுமி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த காரியாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒன்பது வயது சிறுமி சிறந்த காரியாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒன்பது வயது சிறுமி Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு!

May 27, 2021

தேங்காய் எண்ணெய் கொரோனாவைக் குணப்படுத்துமா என்பது தொடர்பில் புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. 
அதாவது தூய்மையான தேங்காய் எண்ணெயிலுள்ள சேர்மங்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் உடலில் வைரஸின் அளவை 
60 – 90% வரை குறைக்க முடியும் என பிலிப்பைன்ஸின் அட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பேராசிரியரும் பிலிப்பைன்ஸ் சங்கத்தின் ஒருங்கிணைந்த இரசாயனவியலாளர்கள் சங்கத்தின் தலைவருமான ஃபேபியன் டெரிட் கூறியுள்ளார். 
எனினும் லேசான அறிகுறிகளைக் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே இதைச் செய்ய முடியும். 
கொரோனா சிகிச்சை நிலையம் மற்றும் பொது வைத்தியசாலையில் 57 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை சுத்தமான தேங்காய் எண்ணெயை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்றும் கூறினார். அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறை உணவுக்குப் பின் 02 தேக்கரண்டி சுத்தமான எண்ணையை எடுக்க வேண்டும் என்றார். 
எவ்வாறாயினும் இந்த அளவு தற்போதைய நிலையில் பரிந்துரைக்கப்பட்டாலும் அது தொடர்பில் ஆராய்ச்சிகள் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! கொரோனாவைக் குணப்படுத்தும் தேங்காய் எண்ணெய்: எப்படி பாவிக்க வேண்டும்? வெளியான புதிய ஆய்வு! Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு

May 27, 2021

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஊடகத்துறை அமைச்சும் தகவல் திணைக்களமும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். 
இந்த தடுப்பூசி மாவட்ட மட்டத்தில் வழங்கப்படும். கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பத்திரிகையாளர்களுக்கான தடுப்பூசிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் ஏற்கனவே வழங்கப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரன, ஊடகவியலாளர்களுக்காக தனியான ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தை நிறுவ பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் அரசின் அறிவிப்பு  Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா?

May 26, 2021

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் பாதுகாப்பு தொடர்பில் 4ம் நிலை தரத்தின் கீழ் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான விடயம் எனவும் நாட்டில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவுகின்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா? இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா? Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி:

May 26, 2021

இலங்கைக்கு வரும் பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஜூன் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் ஒரு விமானத்தில் ஆக கூடுதலாக 75 பயணிகளையே அழைத்து வரலாம். 
எவ்வாறாயினும், 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு தொடர்ந்தும் பயணத்தடை அமுலில் இருக்கும். 
இதேவேளை இலங்கைக்கு வரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பதோடு இலங்கை கடவுச் சீட்டினை கொண்டுள்ளவர்களும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களும் தாயகம் திரும்புவதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.  
நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி: நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி: Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழர்

May 26, 2021

இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 
இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இவர் திருகோணமலையை பூர்வீகமாகக் கொண்ட முடிக்குரிய வழக்கறிஞரான D.ராஜரட்ணத்தின் பேரனும் சிரேஷ்ட சட்டத்தரணி சிவா ராஜரட்ணத்தின் புதல்வருமாவார்.
புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழர் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழர் Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி!

May 26, 2021

கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்யப்பட்டு வந்தது. 
ஆனால் தற்போது திருகோணமலை, கிண்ணியா, மஹமாரு என்ற பகுதியிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
அண்மையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரசியல்வாதிகள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து இடத்தை பார்வையிட்டனர். 
இதனை தொடர்ந்து இதற்கான அனுமதி நேற்று (25) கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி! கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி! Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 26, 2021

24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.




24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 24-05-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya)

May 26, 2021

University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya) 
2020/21 ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதியிலே களனி பல்கலைக்கழகத்திற்கு எந்தெந்த பாடநெறிகளுக்கு Aptitude Test அவசியம் என்பது தொடர்பாகவும் அதற்கான தகைமைகள் தொடர்பாகவும் வெளியான அறிவித்தலை கீழே காணலாம். 
விண்ணப்ப முடிவு திகதி: 06-06-2021. 



University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya) University Admission 2020/21 (Aptitude Tests for University of Kelaniya) Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant)

May 26, 2021

Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant) 
Closing date: 05-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant) Vacancy: Bank of Ceylon (Trainee Secretarial Assistant) Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

"SriLanka unites" தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷினி! நடந்தது என்ன?

May 26, 2021

SriLanka unites என்ற அமைப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டையும் தான் தெரிவித்த கருத்தையும் அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே மாற்றிக்கொண்டார். அதாவது, 
"SriLanka unites" என்ற பெயரில் குறித்த குழுவொன்றினால் போலியான, வைத்திய உபகரணப் பட்டியலொன்று தயாரித்து தனது பெயரைப் பயன்படுத்தி ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக நிதி வழங்குமாறு கேட்டு பதிவிட்டுள்ள செய்தி தவறானது என்றும், இது தொடர்பாக நிதி நன்கொடைகள் அல்லது வைத்திய உபகரணங்களை வழங்க வேண்டாம் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் இப்படிப்பட்ட கோரிக்கையை தான் அவர்களிடத்தில் முன்வைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை செய்வதற்கு அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு பல தடவைகள் தொடர்பு கொண்டபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். 
இந்த செய்தியை irumbuthirainews.com உம் தனக்குரிய வாட்ஸ்அப் குழுமங்களில் பகிர்ந்தது. 
Irumbuthirainews இன் செய்தியைப் பார்த்த குறித்த அமைப்பின் அம்பாறை 
மாவட்ட இணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய நபர் ஒருவர் நம்மை தொடர்பு கொண்டு தமது நிறுவனம் தொடர்பாகவும் குறித்த செய்தியின் பின்னணி தொடர்பாகவும் விளக்கங்களை வழங்கினார். அதற்குரிய ஆதாரங்களையும் அனுப்பி வைத்தார். 
அதனை அடிப்படையாகக் கொண்டும் பொறுப்பான ஊடகம் என்ற வகையிலும் இதன் தெளிவுபடுத்தல்களை நாம் முன்வைக்கிறோம். 
(01) குறித்த அமைப்பு அமைச்சருக்கு அனுப்பிய விளக்கக் கடிதம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூலம் (இந்தக் கடிதத்தில் அமைப்பு தொடர்பான விளக்கமும் அதன் செயற்பாடுகளின் தன்மையும் கூறப்பட்டுள்ளதோடு அமைச்சர் தொடர்பு கொண்டபோது ஏன் பதிலளிக்க முடியவில்லை என்ற காரணமும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது) 




(02) இதன் பிறகு அமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கமைய தெரிவித்த ஃபேஸ்புக் பதிவு. 


(03) அமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதற்கு குறித்த அமைப்பு நன்றி தெரிவித்த பதிவு. 


குறிப்பு:- Sri Lanka Unites தொடர்பான முழு விபரங்களையும் அவர்களது இணையத்தளத்தில் பார்வையிடலாம். இணையத்தள முகவரி கீழே தரப்பட்டுள்ளது.
"SriLanka unites" தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷினி! நடந்தது என்ன? "SriLanka unites" தொடர்பில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் அமைச்சர் சுதர்ஷினி! நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்!

May 25, 2021

இலங்கையில் இதுவரை இடம்பெற்ற கொரோனா மரணங்களில் நேற்றைய தினம் (24) அறிவிக்கப்பட்ட மரணங்களில் அதிகூடிய வயதுடைய மரணம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. 
அதாவது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 33 மரணங்களில் காலி, கினிமல்லகஹ (Ginimallagaha) என்ற இடத்தைச் சேர்ந்த 104 வயதுடைய பெண்ணின் மரணமே இவ்வாறு வயது கூடிய 
கொரோனா மரணமாக இலங்கையில் பதிவாகியுள்ளது. 
இவர் இம்மாதம் 22ஆம் திகதி தனது வீட்டில் மரணமானது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை 33 மரணங்களில் 05 மரணங்கள் மாத்திரமே நேற்றைய தினம் இடம்பெற்றதாகும். ஏனைய 28 ம் இம்மாதம் 17 - 23 வரை இடம்பெற்றதாகும். 
இதேவேளை நேற்று அறிவிக்கப்பட்ட 33 மரணங்களில் 11 மரணங்கள் வீட்டிலேயே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மொத்த மரணங்கள் 1243 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்! இதுவரையான கொரோனா மரணங்களில் பதிவான வயது கூடிய மரணம்! Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வு! மிகச் சிறந்த தடுப்பூசியும் கண்டறிவு!

May 25, 2021

கொரோனா பரவலுக்காக தற்போதைய நிலையில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளின் சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வை அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஒன்று மேற்கொண்டது. 
இதன்போது தற்போது பயன்பாட்டில் உள்ள பைஸர் பயோஎன்டெக், மொடர்னா, ஜோன்சன் என் ஜோன்சன், ஸ்புட்னிக், அஸ்ரா ஸெனகா, நொவாவெக்ஸ், சினோவெக் மற்றும் சினோபாம் போன்ற 8 தடுப்பூசிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 
இதில் சகல தடுப்பூசிகளும் கொவிட் மரணம் 
ஏற்படுவதிலிருந்து உயர்த்த பாதுகாப்பை வழங்குவதாக தெரியவந்துள்ளது. 
இது மாத்திரமன்றி இந்த தடுப்பூசிகளிலேயே 'பைஸர் என்பயோடெக்' என்ற தடுப்பூசியே உச்ச அளவில் வினைத்திறனாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வு! மிகச் சிறந்த தடுப்பூசியும் கண்டறிவு! கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான புதிய ஆய்வு! மிகச் சிறந்த தடுப்பூசியும் கண்டறிவு! Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

கர்ப்பிணிகளுக்கு ஏன் கொரோனா அபாயம் அதிகம்?

May 25, 2021

கர்ப்பிணி தாய்மார்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 
இவ்வாறான நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களை பாதுகாப்பது வீட்டிலுள்ள சகலரினதும் பொறுப்பாகும் என தெரிவித்த அவர், இதுவரை கர்ப்பிணித் தாய்மார்களுக்கென விசேடமாக கொரோனா தடுப்பூசியொன்று அறிமுகப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
கர்ப்பிணிகளுக்கு ஏன் கொரோனா அபாயம் அதிகம்? கர்ப்பிணிகளுக்கு ஏன் கொரோனா அபாயம் அதிகம்? Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

அத்தியாவசிய சேவைகளுக்காக அறிமுகமானது 1965

May 25, 2021

பயணக் கட்டுப்பாடு காலத்திலும் அதற்குப் பின்னரும் அரச பொறிமுறையுடன் தொடர்புகளை மேற்கொண்டு அத்தியாவசிய சேவைகள் குறித்த தகவல்களை பொது மக்கள் கேட்டறிவதற்காக 1965 என்ற அவசர தொலைபேசி இலக்கம் நேற்று அலரி மாளிகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இதுதொடர்பான மத்திய நிலையமும் நேற்று (24) திறக்கப்பட்டதோடு  குறித்த நிகழ்வு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. 
24 மணித்தியாலமும் இயங்கும் இந்த தொலைபேசி சேவையின் ஊடாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 தற்போதும் எதிர்வரும் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியிலும் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேடமாக பயணக் கட்டுப்பாட்டு 
காலப்பகுதியில் அத்தியாவசிய பொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் போதும் ஏற்படும் பிரச்சினைகள் அந்தந்த அரச நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தல் மற்றும் பொது மக்கள் செயல்திறன் மிக்கதாக இநத பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான இணைப்பு மத்திய நிலையமாக 1965 என்ற அவசர தொலைபேசி மத்திய நிலையம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக அறிமுகமானது 1965 அத்தியாவசிய சேவைகளுக்காக அறிமுகமானது 1965 Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

Vacancy: Lanka Electricity Company (PVT) Ltd.

May 25, 2021

Vacancy: Lanka Electricity Company (PVT) Ltd. 
Post: Customer Service Superintendent.
Age: Below 50. 
Closing date: 03-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.



Vacancy: Lanka Electricity Company (PVT) Ltd. Vacancy: Lanka Electricity Company (PVT) Ltd. Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

Vacancy: Bank of Ceylon (BOC)

May 25, 2021

Vacancy: Bank of Ceylon (BOC) 
Closing date: 05-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Bank of Ceylon (BOC) Vacancy: Bank of Ceylon (BOC) Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

பொலிஸ் திணைக்களத்தின் புதிய Mobile App: வீடியோ மற்றும் படங்களுடன் முறைப்பாடு செய்யலாம்: (App. Download செய்யும் வசதி இணைப்பு)

May 25, 2021

According to the increasing population and the number of vehicles, it is impossible to deploy large police forces to reduce the violations to the traffic law. Therefore, an official app is a timely requirement so that police can enforce the general. 
Also, this can act as an empowerment tool. At the moment, many people share traffic violations videos via social media and personal groups unofficially. This should not happen like this. This should be available for everyone to use at any time. 
These actions conclude that there is a need in the community for official reporting mechanisms so that they can make roads a safer place for all of us. So that, our proposed application enables the general public to report traffic violations or traffic obedience cases along with media evidence and its location. 

சனத்தொகையும் வாகனங்களும் அதிகரிப்பதற்கு ஏற்ப இடம்பெறும் போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள தற்போது அவசியமில்லை. அது சாத்தியமும் இல்லை. 
இதற்காக போலீஸ் திணைக்களம் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றை (Mobile App.) வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக பொதுமக்கள் இந்த App மூலம் முறைப்பாடு செய்யலாம். 
இந்த முறைப்பாடுகள் அதே நேரத்திலேயே போலீஸ் தலைமையகத்திற்கு சென்றடைகின்றன. 
வீடியோ படங்கள் என்பவற்றுடன் Location வசதி காணப்படுவதனால் குறித்த இடத்தையும் சேர்த்து முறைப்பாட்டில் தெரிவிக்கலாம். 
இதன் காரணமாக, போக்குவரத்து குற்றங்களை புரிந்துவிட்டு தப்பிப்பதோ அல்லது போலீசாருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிப்பதோ முடியாமல் போகிறது. 
குறித்த செயலியை (App) உங்கள் கையடக்க தொலைபேசிக்கு Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

பொலிஸ் திணைக்களத்தின் புதிய Mobile App: வீடியோ மற்றும் படங்களுடன் முறைப்பாடு செய்யலாம்: (App. Download செய்யும் வசதி இணைப்பு) பொலிஸ் திணைக்களத்தின் புதிய Mobile App: வீடியோ மற்றும் படங்களுடன் முறைப்பாடு செய்யலாம்: (App. Download செய்யும் வசதி இணைப்பு) Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5
Powered by Blogger.