முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு


உலகம் பூராவும் கொரோனாவானது மனிதர்களுக்கிடையே தீவிரமாக பரவிய கொண்டிருக்கும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் பல முன்னணி நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. 
அந்த போட்டி முடிவடைந்து தற்போது பலவகையான கொரோனா தடுப்பு மருந்துகள் பாவனையில் உள்ள நிலையில் தற்போது விலங்குகளுக்கான கொரோனா தடுப்பு மருந்தையும் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. 
உலகிலேயே விலங்குகளுக்கென உருவாக்கப்பட்ட முதல் கொரோனா தொற்றுத் தடுப்புமருந்து இதுவாகும். 
அந்த மருந்து மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டதோடு 
தற்போது விலங்குகளுக்கு அந்த மருந்தை செலுத்தும் பணியையும் ரஷ்யா தொடங்கியுள்ளது. 
நாய், பூனை, நரி உள்ளிட்ட விலங்குகளிடம் குறித்த மருந்து சோதனை செய்யப்பட்டபோது, நோய் எதிர்ப்புத்தன்மை உருவானதாகத் தெரிவிக்கப்பட்டது. 
ஒரு முறை இந்த மருந்தை போட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி 6 மாதத்திற்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 
உலகெங்கும் பல விலங்குகளிடம் கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டபோதும் அது நோய் காவியாக செயற்படுவதற்கு எந்த ஆதரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு முதன்முறையாக விலங்குகளுக்காக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த நாடு Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.