அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்:


பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் பொருட்களை விற்பனை செய்ய இரு கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 
எனவே அவ்வாறான வியாபார நிலையங்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் அவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படுவதோடு அந்த ஊரில் உள்ள வேறு கடைக்கு அந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். 
கொண்டுசென்று விற்றல், வீட்டுக்கு வீடு பொருள் விநியோகம், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இரு கடைகளைத் திறத்தல் என பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்கு வசதியாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை(Hotline 1977) பெறும் முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்: அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் ரத்து: வேறு கடைக்கு அனுமதிப்பத்திரம்: Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.