உயர்தர பெறுபேறு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!

March 09, 2023


ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமாகின்றன. எனவே உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது மேலும் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.. 

மேலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடருமானால் இந்த வருடத்தில்(2023) உயர்தர பரீட்சைக்கு தோற்றுபவர்களின் பரீட்சை திகதியிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியேற்படும் என அவர் தெரிவித்தார். 

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட போதும் அந்தத் தொகை போதாது என ஆசிரியர் சங்கம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர பெறுபேறு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு! உயர்தர பெறுபேறு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on March 09, 2023 Rating: 5

இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு! இணையத் தளம் மூலம் விண்ணப்பங்கள்!

March 08, 2023


இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து பணியாளர்களை இத்தாலி எடுக்க உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் இணையதளத்தின் மூலம் கோரப்படவுள்ளது. 

கட்டுமானத் துறை, உணவகத் துறை, மின்சாரத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் பாரவூர்தி சாரதிகள் போன்ற தொழில்களுக்காக 87,702 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு! இணையத் தளம் மூலம் விண்ணப்பங்கள்! இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு! இணையத் தளம் மூலம் விண்ணப்பங்கள்! Reviewed by Irumbu Thirai News on March 08, 2023 Rating: 5
Powered by Blogger.