ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அருகிலுள்ள பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட தகவல்!
Irumbu Thirai News
April 30, 2022
தற்போது நாட்டில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாணவர்களை உள்வாங்கவும் ஆசிரியர்களை அருகிலுள்ள பாடசாலைக்கு இணைப்பு செய்யவும் பல்வேறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்ததை தற்போது தாம் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்காலத்தில் திட்டவட்டமான முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் இந்த விடயத்தை தனிப்பட்ட முறையில் தான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
நாட்டில் சுமார் 10,155 பாடசாலைகள் இயங்குகின்றன. இதில் 2 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள் உள்ள பாடசாலைகளும் இருக்கின்றன. 
மேலும் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆரம்ப பாடசாலைகள் 51% ம், 1000 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 92%ம் 500க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 78% ம் காணப்படுகின்றன. 
மேலும் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3000 பாடசாலைகள் 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1462 பாடசாலைகளும் காணப்படுகின்றன. 
எனவே முதலில் பாடசாலைக்கு வருகின்ற பிள்ளைகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். பின்னர் போக்குவரத்து பிரச்சினைகளை ஆசிரியர்களுடன் ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அருகிலுள்ள பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட தகவல்!
 Reviewed by Irumbu Thirai News
        on 
        
April 30, 2022
 
        Rating:
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
April 30, 2022
 
        Rating: 
 Reviewed by Irumbu Thirai News
        on 
        
April 30, 2022
 
        Rating:
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
April 30, 2022
 
        Rating: 
 


 Source: Sunday Observer.
Source: Sunday Observer. 

 Source: Sunday Observer.
Source: Sunday Observer. 

 
 
 
