Results for Foreign News

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple!

January 18, 2024


உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளரான Samsung நிறுவனத்தை Apple பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

அமெரிக்காவின் iPhone அதன் தென் கொரிய போட்டியாளரான Samsung இன் 12 வருட சாதனையை முறியடித்து உலகில் அதிக விற்பனையாகும் Smart Phone என்ற நாமத்தை பெற்றுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் தரவுகளின்படி, தென் கொரிய நிறுவனத்தின் 226.6 மில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஐபோன் 2023 இல் 234.6 மில்லியன் யூனிட்டுகளுடன் முன்னணியில் காணப்படுகிறது. 

Samsung  19.4% சந்தைப் பங்கையும் iPhone 20.1% சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது என்று IDC தெரிவித்துள்ளது. 

Samsung இன் அண்மைய வெளியீடுகள் தொடர்பான அறிமுகத்திற்கு முன்னரே இந்த தரவுகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
 
 
Previous:

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Reviewed by Irumbu Thirai News on January 18, 2024 Rating: 5

உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு

August 29, 2023


உலகில் முதன்முறையாக மனித மூளையில் உயிருடன் காணப்பட்ட 3 அங்குல அதாவது சுமார் 8 CM புழு கண்டறியப்பட்டுள்ளது. 

அவுஸ்த்ரேலிய பெண் ஒருவருக்கு இருமல், வயிற்று வலி, இரவில் வியர்த்தல், வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் காணப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மறதி நிலைமை அதிகரித்து மன அழுத்தமும் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து 2021 ஜனவரி மாத பிற்பகுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையின் வலது பக்க முன் மடலில் காயம் போன்ற ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
பின்னர் 2022 ஜூன் மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னரே அந்த விடயம் புழு என கண்டறியப்பட்டது. இதைப் பார்த்த சத்திர சிகிச்சை கூடத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூளையில் இவ்வளவு காலமும் அந்த புழு உயிருடன் இருந்துள்ளது. தற்போது அந்தப் பெண் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண் தான் வாழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் கீரைகளை சேகரித்த பொழுது இந்த புழு தொற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும் விலங்குகளிலிருந்து மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள், தொற்று நோய்கள் போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு இந்த சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Previous:

உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு Reviewed by Irumbu Thirai News on August 29, 2023 Rating: 5

சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்!

August 23, 2023


சந்திராயன் - 3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது இந்தியா. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (23) 40 நாட்கள் பயணத்தின் பின்னர் மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது.

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதையடுத்து விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 க்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது 

சந்திராயன்-3 ஆனது தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமையின் ஊடாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பின்னர், நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்த உலகின் 4வது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. 

தென் துருவத்தை தொட்ட முதல் நாடு:
நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் பொதுமக்களுக்காக இஸ்ரோவின் உத்தியோகபூர்வ YOUTUBE தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.  

சந்திரயான் 3 கடந்து வந்த பாதை
இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் 386 கோடி இந்திய ரூபா செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் - 2 திட்டத்திற்கு 978 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டது. சந்திரயான்-3 திட்டத்திற்கான செலவு 615 கோடி இந்திய ரூபா. 

சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு LVM3 M4 ஏவுகணை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

பின்னர், சந்திரயான்-3 விண்கலத்தின் பாதை உயரத்தை உயர்த்தும் (Orbit Raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது. புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 

 ஆகஸ்ட் 17 ஆம் திகதி சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. 

 ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கியது 


 விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யப் போகிறது? 
 நிலவின் தென் துருவப் பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்கி, அங்கு சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யவுள்ளது. 

 நிலவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, அங்குள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பம் தாங்கும் தன்மை கொண்டதா போன்ற பல தரவுகளை சந்திரயான்-3 கண்டறியவுள்ளது. 

 தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. 

 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதன் உள்ளே இருக்கும் ரோவர் (Rover) எனப்படும் ஊர்திக்கலன் வெளியே வரும். 

இந்த ஊர்திக்கலன் நிலவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து, தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவிற்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களை சேகரித்து அனுப்பும்.
Source: newsfirst.
சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்! சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்! Reviewed by Irumbu Thirai News on August 23, 2023 Rating: 5

திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்!

August 10, 2023


பாகிஸ்தான் பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. 

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை  அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் ஜனாதிபதியால் இவ்வாறு கலைக்கப்பட்டது. 

கடந்த 2018-ல் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. பிரதமராக அவர் 4 ஆண்டுகள் இருந்துவந்த நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முக்கியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொள்ள அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியுற்று பதவி இழந்தார். 

 இதை தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( PML-N) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். 

 இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதே வேளை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று வருட சிறையும் 5 வருட அரசியல் தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சில நாட்களேயான நிலையில் பாராளுமன்றம் இவ்வாறு அடுத்த தேர்தலுக்காக திடீரென கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்! திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்! Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு!

August 06, 2023


இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இங்கிலாந்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிகமானோர்க்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்நிலைமை பெருமளவான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இது தொடர்பாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது. 

 இந்த வைரஸானது இங்கிலாந்தில் 07 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Eris என்பது கிரேக்க தெய்வத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.



Previous:


இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! இங்கிலாந்தில் பரவும் புதிய வகை  கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! Reviewed by Irumbu Thirai News on August 06, 2023 Rating: 5

இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

August 05, 2023


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செஷன் நீதிமன்றம் இவ்வாறு 3 வருட சிறை தண்டனை விதித்ததோடு ஒரு லட்சம் பாகிஸ்தானிய ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான் கான், பிரதமர் பதவியை இழந்தார். அதன் பின்னர் அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன அதில் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளும் அடங்கும். 

எவ்வாறாயினும் இம்ரான் கான் தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். மேலும் பொது மக்களிடையே அவருக்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


Previous:


இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! Reviewed by Irumbu Thirai News on August 05, 2023 Rating: 5

US Green Card Winners - 2024

May 06, 2023


2024 ல் அமெரிக்க நிரந்தர வதிவிடத்தை வழங்க கூடிய கிரீன் கார்ட் (Green Card) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை பின்வரும் முறையில் அறிந்து கொள்ளலாம். 

குறிப்பு: அதிக நெரிசல் காரணமாக பெறுபேறுகளை பார்வையிடுவதில் தடங்கள் ஏற்படலாம். தொடர்ந்து முயற்சி செய்க. மேலும் உத்தியோகபூர்வ இணையதள முகவரி இல்லாத வேறு இணையதள லிங்குகள் மூலம் பெறுபேறுகளை அறிய முயற்சிப்பதை தவிர்க்கவும். 6-5-2023 EDT நேரம் நண்பகல் 12 மணி முதல் பெறுபேறுகளை பார்வையிடலாம். 

2024 Green Card Results for US Permanent Residency Released. You can know whether you have been selected in the following way. 

Note: Due to heavy traffic there may be lags in viewing the results. Keep trying. Also avoid trying to get results through other website links which do not have official website address. Results can be viewed from 12 noon EDT on 6-5-2023. 


(1) Click the link below & go check status / கீழுள்ள லிங்கில் சென்று check status என்பதை கிளிக் செய்க. 


(2) Enter the particular details & click submit / உரிய தகவல்களை உள்ளீடு செய்து submit என்பதை கிளிக் செய்க.



Additional information:
Click the link below for green card winners 2017 - 2023.

US Green Card Winners - 2024 US Green Card Winners - 2024  Reviewed by Irumbu Thirai News on May 06, 2023 Rating: 5

கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!

November 20, 2022

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரின் தற்போதைய உரிமையாளரும் உலக செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான இலோன் மஸ்க் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2020இல் தற்காலிகமாக நீக்கப்பட்டது. 

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை இலோன் மஸ்க் கொள்வணவு செய்த பிறகு டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இணைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்புகள் மீண்டும் பேசப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து மீண்டும் ட்ரம்பை இணைக்கலாமா வேண்டாமா என்று கருத்து கணிப்பை இலான் மஸ்க் நடத்தினார். அதில் 51.8% ஆனோர் டொனால்ட் டிரம்ப்பை மீண்டும் இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 

எனவே தற்போது சுமார் 22 மாதங்களின் பின்னர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ட்விட்டர் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஏனையவை:


கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்! கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்! Reviewed by Irumbu Thirai News on November 20, 2022 Rating: 5

Green Card விண்ணப்பம்: பொறுமையாக செயற்படுமாறு அமெரிக்க தூதரகம் ஆலோசனை!

October 16, 2022


 
2024 ஆம் வருடத்திற்கான அமெரிக்க பன்முக விசாவிற்கு தற்போது, உலகளாவிய ரீதியில் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஒரே தடவையில் இவ்வாறு பலர் விண்ணப்பிப்பதினால் குறித்த இணைய தளத்தை அணுகும் போது சேவை தடங்கல் ஏற்படலாம் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

எனவே தயவுசெய்து பொறுமையாக செயல்படுமாறும் , தொடர்ந்து முயற்சி செய்யுமாறும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. 

Green Card ற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 05 தொடக்கம் நவம்பர் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் சர்வதேச ரீதியிலிருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வரை தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. 
 
கிரீன் கார்ட் விண்ணப்பத்திற்கு செல்ல /
Click the link below for the Green Card Application: 




முன்னைய செய்திகள்:
 

 
Green Card விண்ணப்பம்: பொறுமையாக செயற்படுமாறு அமெரிக்க தூதரகம் ஆலோசனை! Green Card விண்ணப்பம்: பொறுமையாக செயற்படுமாறு அமெரிக்க தூதரகம் ஆலோசனை! Reviewed by Irumbu Thirai News on October 16, 2022 Rating: 5

Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024

October 06, 2022


ஒவ்வொரு வருடமும், ஐ. அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் மூலம் 50,000 க்கும் மேற்பட்டோர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு நிரந்தர வதிவிடங்களை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வருகின்றது. 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான விசா திட்டத்தின் கீழ் நேற்று முதல் (05) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 

குறித்த விசாவுக்காக Online மூலமாகவே விண்ணப்பிக்க முடியும் எனவும் எவ்வித பத்திரங்களையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மேலும் தெரிவித்துள்ளது. 

இந்த Green Card ற்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தின் ஊடாக நேற்று (5) இரவு 09.30 மணி முதல் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

Click the link below for Online Application:


Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024 Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024 Reviewed by Irumbu Thirai News on October 06, 2022 Rating: 5

வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு

September 23, 2022

வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் முகக் கவசத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் கடைசியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முற்றாக ஒழியாமல் உலக மக்களை பாதித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாக்கும் கவசமாக முக கவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்நிலையில் வைரஸ் காற்றில் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி ((SMS) மூலம் அணிந்திருப்பவருக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நவீன முககவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது, அவரைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் என எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, முககவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி, முகக் கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் தெரிவிக்கையில், 
முகக் கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவரை எச்சரிக்கும் முக கவசத்தை உருவாக்க விரும்பினோம். எங்கள் முக கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில், அதாவது 'லிப்ட்' அல்லது மூடிய அறைகள் போன்றவற்றில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வேலை செய்யும்' என தெரிவித்துள்ளார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.


வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு Reviewed by Irumbu Thirai News on September 23, 2022 Rating: 5

உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு நாள் இன்று!

September 11, 2022

2001ல் இன்று போல் ஒரு நாள் அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்தது. 

இந்த கோர தாக்குதலின் 21 வருட நினைவு நாள் இன்று. இந்த தாக்குதல்களுக்கு அல்கொய்தா அமைப்பு உரிமை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. 

அன்றைய தினம் அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு மொத்தம் 04 பயணிகள் விமானம் கடத்தப்பட்டது. அதில் இரண்டு விமானங்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது மோதியதில் சுமார் 110 அடுக்குமாடிகள் கீழே விழுந்து தரைமட்டமாகின. அதன் புகை மண்டலம் பல கிலோமீட்டருக்கு பரவியது. 

மற்றுமொரு விமானம் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் மீது தாக்குதல் நடத்தியது. 

பிளைட் 93 என்ற மற்றுமொரு விமானம் அமெரிக்க பென்சில்வேனியாவில் உள்ள வயல் பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் குறித்த தாக்குதல்தாரர்களை எதிர்த்து போராடியதில் விமானம் உரிய இலக்கை அடைய தவறி வயல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த தாக்குதல்களில் மொத்தமாக சுமார் 3000 பேர வரை கொல்லப்பட்டனர். அமெரிக்க வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு நாளாக இது பதிவானது. 

அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில் மறைந்துள்ளதாக கூறி ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. அங்கு பல வருடங்கள் யுத்தம் நடந்தது. பின்னர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் பாகிஸ்தானில் வைத்து கொல்லப்பட்டார். 

ஆப்கானை விட்டு அண்மையில் அமெரிக்க வெளியேறியது. இருந்தாலும் ஆப்கானில் அமெரிக்கா சந்தித்த இழப்புகளை ஒப்பீடு செய்த பாதுகாப்பு நிபுணர்கள் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தோல்வியை சந்தித்ததாகவே பொதுவாக கருத்து வெளியிட்டனர். 

இதேபோன்று ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்திருந்தது. பின்னர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். ஆனால் அங்கு எவ்வித ரசாயன ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

அப்பாவி மக்களை கொள்ளும் எந்த ஒரு செயலும் மன்னிக்க முடியாத பயங்கரவாத தாக்குதலாகும். இது யார் செய்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.


ஏனைய செய்திகள்:




உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு நாள் இன்று! உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு நாள் இன்று! Reviewed by Irumbu Thirai News on September 11, 2022 Rating: 5

மன்னராக பிரகடனப்படுத்தப்பட்ட சார்ள்ஸ் பிறப்பித்த முதல் உத்தரவு!

September 11, 2022

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை தொடர்ந்து ஐக்கிய ராஜ்யத்தின் அரசராக நேற்றைய தினம் மூன்றாம் சார்ள்ஸ் பிரகடனம் செய்யப்பட்டார். 

இந்த நிகழ்வு லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் நேற்று(10) காலை நடைபெற்றது. 

கடந்த 07 தசாப்தங்களுக்கு மேலாக இத்தகைய ஒரு நிகழ்வு நடைபெறவில்லை. காரணம் அவ்வளவு காலப்பகுதி ராணியின் ஆட்சி நடைபெற்றது. இது மாத்திரமன்றி வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த நிகழ்வுகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன. 

ஆக்ட் ஒஃப் செட்டில்மன்ட் 1701 சட்டத்தின் விதிகளின்படி சார்ள்ஸ் மன்னர் அவருடைய தாயின் மறைவுக்குப் பிறகு தாமாக அரசர் ஆகிவிட்டார். இருந்தாலும் இன்று நடைபெற்றது சம்பிரதாய அறிவிப்பு மாத்திரமே. 

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் 
இந்நிகழ்வில் ப்ரைவி கவுன்சிலை சேர்ந்த 200 பேர் அளவில் கலந்து கொண்டனர். ப்ரைவி கவுன்சில் என்பது இன்னாள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய அரசருக்கு முறைப்படி ஆலோசனை வழங்கும் குழுவாகும். இதில் சுமார் 700 பேர் உறுப்பினர்களாக இருந்தாலும் சுமார் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். 


நிகழ்வு நடைபெற்ற விதம்:
மேலும் இன்றைய இந்த நிகழ்வு இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. 

முதலாவது பாகத்தில் மகாராணி இறந்த விடயம் அறிவிக்கப்பட்டதுடன் புதிய மன்னரின் பெயரும் அறிவிக்கப்பட்டது. 

இரண்டாம் பாகத்தில் புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் உரை இடம்பெற்றது. 

அந்த உரையில், தமது அன்புக்குரிய தாயின் சேவை மிகுந்த வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டதுடன் அவரது காலடித்தடத்தை பின்பற்றுவதற்கும் உறுதிமொழி அளித்தார் சார்ள்ஸ். 

நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை குறித்து ஒட்டுமொத்த உலகமும் என் மீது அனுதாபம் கொள்கிறது. காலம் அர்ப்பணிப்பு மற்றும் பக்தியில் என்னுடைய தாயின் ஆட்சி காலம் வேறு எதற்கு நிகரில்லாதது. துயருற்றிருக்கும் இந்த நேரத்திலும் அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கைக்கு நாம் நன்றி கூறுகிறோம். 

என்னுடைய ஆழமான மரபு மற்றும் எனக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மிக்க கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நான் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். மேலும் என் அன்புக்குரிய மனைவியின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது என்றும் தனது உரையில் தெரிவித்தார.

நிகழ்வின் இறுதியாக, பிரகடனங்களுக்கு மன்னர் ஒப்புதல் அளித்தார். அதில் முதலாவது மகாராணியின் இறுதிச்சடங்கு நடக்கும் நாளை பொது விடுமுறையாக அறிவித்ததாகும். 

எனவே புதிய மன்னர் 3ம் சார்ள்ஸின் முதலாவது உத்தரவாக பார்க்கப்படுகிறது.

Related:
மன்னராக பிரகடனப்படுத்தப்பட்ட சார்ள்ஸ் பிறப்பித்த முதல் உத்தரவு! மன்னராக பிரகடனப்படுத்தப்பட்ட சார்ள்ஸ் பிறப்பித்த முதல் உத்தரவு! Reviewed by Irumbu Thirai News on September 11, 2022 Rating: 5

ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!

September 10, 2022


இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக மூன்றாம் சார்ல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தின் தேசிய கீதம், கடவுச்சீட்டு, நாணயம் உட்பட பல விடயங்களில் பல முக்கிய அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

அதாவது 1952 இல் இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றது முதல் பிரிட்டனின் தேசிய கீதத்தில் "காட் சேவ் தி குயின் (God save the Queen)" என்ற வரிகள் பாடப்பட்டு வந்தன. 
தற்போது மன்னராக சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த வரிகள் "காட் சேவ் தி கிங் (God save the king) என்று மாற்றம் பெறுகிறது.

அதேபோன்று மன்னர் சார்ல்சை முன்னிறுத்தி அந்நாட்டு நாணயம், கடவுச்சீட்டு, அஞ்சல் தலை உள்ளிட்ட பலவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்! ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்! Reviewed by Irumbu Thirai News on September 10, 2022 Rating: 5

கௌதம் அதானியின் மற்றுமொரு சாதனை!

August 30, 2022

இந்திய பெரும் செல்வந்தரான கௌதம் அதானியின் அதானி குழுமமானது விமான நிலையம், துறைமுகம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் கால் பதித்து வேகமாக முன்னேறி வருகிறது. 

வேகமாக முன்னேறி வரும் அதானி இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அம்பானியை கடந்த பெப்ரவரி மாதம் பின்தள்ளி இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றார். 

அதன் பின்னர் ஆசியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலிலும் முதலிடத்தை அடைந்தார். 

அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸையும் பின்ள்ளி உலக பணக்காரர்கள் வரிசையில் 4ம் இடத்திற்கு முன்னேறினார். 

இந்நிலையில் அவரது பயணத்தின் மற்றுமொரு மைல் கல்லாக தற்போது 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி, பிரான்சை சேர்ந்த பெர்னாட் ஆர்னால்ட் என்பவரை பின்தள்ளி உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

தற்போதைய நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளனர். 

ப்ளூம்பேர்க் பில்லியனர்கள் குறியீட்டுக்கமைய ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானியின் மற்றுமொரு சாதனை! கௌதம் அதானியின் மற்றுமொரு சாதனை! Reviewed by Irumbu Thirai News on August 30, 2022 Rating: 5

20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர்

August 11, 2022

20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி நபர் ஒருவர் வெற்றி பெற்ற சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 

துங்கநாத் சதுர்வேதி என்ற குறித்த நபர் 1999 ஆம் ஆண்டு புகையிரத அனுமதி சீட்டை கொள்வனவு செய்துள்ளார். குறித்த அனுமதிச்சீட்டை வழங்கியவர் 70 ரூபாவுக்கு பதிலாக 90 ரூபாய் வசூலித்துள்ளார். 

இதனை எதிர்த்து துங்கநாத் சதுர்வேதி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கானது 22 வருடங்களாக சுமார் 100 தவணைகளில் அழைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதாவது மனுதாரருக்கு 20 ரூபாய் பணம் திருப்பி தர வேண்டும். அத்துடன் 1999 முதல் 2022 வரையான காலப்பகுதிக்காக 12 வீத வட்டியையும் சேர்த்து 15,000 ரூபாய் அபராதமாக செலுத்தப்பட வேண்டும். இந்த 15,000 ஆனது 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாவிட்டால் 15 வீதம் வட்டி அறவிடப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பில் துங்கநாத் சதுர்வேதி கூறுகையில், இந்த அபராத தொகையானது சிறிய தொகையாக இருந்தாலும் நீதிக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

குறித்த நபருக்கு தற்போது 66 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர் 20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர் Reviewed by Irumbu Thirai News on August 11, 2022 Rating: 5

புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!

July 07, 2022


புதிய வகையான N95 முகக் கவசத்தை அமெரிக்காவின் ரென்சீலர் பொலிடெக்னிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை. 


இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது. 


ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.


புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

துருக்கியின் பெயர் மாற்றம்! ஐ.நா.வும் அங்கீகாரம்!

June 02, 2022


துருக்கி விடுத்த கோரிக்கைக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையானது துருக்கியின் பெயரை துருக்கியே (Türkiye) என மாற்றியுள்ளது. 

துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லுவிடமிருந்து பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கடிதம் புதன்கிழமை வந்ததாகக் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார், 

அதாவது அனைத்து விவகாரங்களுக்கும் "துருக்கி" என்பதற்குப் பதிலாக "துர்க்கியே" என்று பயன்படுத்துமாறு கடிதத்தில் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

கடிதம் கிடைத்த தருணத்திலிருந்து நாட்டின் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்ததாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஒரு குறிப்பாணையை வெளியிட்டு, ஒவ்வொரு மொழியிலும் நாட்டை விவரிக்க Türkiye ஐப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதை அடுத்து, துருக்கி தனது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயரை ஆங்கிலத்தில் Türkiye என மாற்றுவதற்கான நடவடிக்கையை டிசம்பரில் தொடங்கியது.

துருக்கிய மக்களின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்பாடு துர்கியே. என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


துருக்கியின் பெயர் மாற்றம்! ஐ.நா.வும் அங்கீகாரம்! துருக்கியின் பெயர் மாற்றம்! ஐ.நா.வும் அங்கீகாரம்! Reviewed by Irumbu Thirai News on June 02, 2022 Rating: 5

இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன?

April 10, 2022

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. 
 
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் யாப்புக்கு முரணானது எனக் கூறி அந்நாட்டின் பிரதி சபாநாயகர் அதனை நிராகரித்தார். 
 
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதாக இம்ரான்கான் அறிவித்தார். இவரின் இந்த பரிந்துரையை ஏற்று அந்நாட்டு ஜனாதிபதியும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில் இது தொடர்பான வழக்கை கடந்த வியாழக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்றம் நம்பிக்கை இல்லா பிரேரணையை ரத்து செய்த பிரதி சபாநாயகரின் முடிவு செல்லாது எனவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது எனவும் நம்பிக்கை இல்லா பிரேரணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 
 
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை நடைபெற்றது. இந்தப் பிரேரணை நிறைவேற்றுவதற்கு ஆகக்குறைந்தது 172 வாக்குகள் தேவை. 
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கானுக்கு எதிராக 

174 வாக்குகள் கிடைத்துள்ளன. அந்த வகையில் அவர் தற்போது பிரதமர் பதவியை இழந்துள்ளார். 
 
எனவே தற்போது வேறு ஒரு பிரதமர் தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் 2023 ஒக்ரோபர் மாதம் நடைபெறும் தேர்தல் வரை பதவியில் இருப்பார். 
 
பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் ஆட்சி காலம் முடியும் வரை பதவியில் இருந்ததில்லை. மேலும் நம்பிக்கை இல்லா பிரேரணை மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் இம்ரான் கான் ஆவார். 
 
இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன? Reviewed by Irumbu Thirai News on April 10, 2022 Rating: 5

கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு!

February 12, 2022

கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை எப்போது முடிவுக்கு வரும் என்ற விடயத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் பெட்ரஸ் அதனோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். 
 
அதாவது மொத்த உலக மக்கள் தொகையில் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமாயின் கொரோனாவின் தீவிரத்தன்மை குறையும் என அவர் தெரிவித்துள்ளார். 
 
எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு அது அடையப்பட்டால் கொரோனா பரவலின் தீவிரத்தன்மை நிச்சயம் முடிவுக்கு வரும் எனவும் இது எங்கள் கைகளிலேயே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு! கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on February 12, 2022 Rating: 5
Powered by Blogger.