திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்!



பாகிஸ்தான் பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. 

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை  அந்நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பிறப்பித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 3 நாட்கள் இருந்த நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரையில் முன்கூட்டியே நேற்று நள்ளிரவில் ஜனாதிபதியால் இவ்வாறு கலைக்கப்பட்டது. 

கடந்த 2018-ல் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. பிரதமராக அவர் 4 ஆண்டுகள் இருந்துவந்த நிலையில் அந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முக்கியக் கட்சி ஆதரவை விலக்கிக் கொள்ள அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியுற்று பதவி இழந்தார். 

 இதை தொடர்ந்து  எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. பாகிஸ்தான் பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( PML-N) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். 

 இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக நேற்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதே வேளை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று வருட சிறையும் 5 வருட அரசியல் தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சில நாட்களேயான நிலையில் பாராளுமன்றம் இவ்வாறு அடுத்த தேர்தலுக்காக திடீரென கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்! திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்! Reviewed by Irumbu Thirai News on August 10, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.