சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா: நுகர்வோருக்கும் விற்பனை:

January 16, 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமை ஆராய்ச்சி செய்த போது அதில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
தியான்ஜினில் உள்ள டேசியாடோ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மொத்தம் 4,836 பெட்டிகள் ஐஸ்கிரீம் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 2,089 பெட்டிகள் இதுவரை களஞ்சியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
மீதமுள்ள ஐஸ்கிரீம் பெட்டிகளில், 1,812 மற்ற மாகாணங்களுக்கும் 935 பெட்டிகள் தியான்ஜின் 
சந்தைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 65 நுகர்வோருக்கு விற்கப்பட்டுள்ளன. 
ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையில் மொத்தம் 1,662 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா: நுகர்வோருக்கும் விற்பனை: சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீமில் கொரோனா: நுகர்வோருக்கும் விற்பனை: Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

மேலதிக வகுப்புகளுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்...

January 16, 2021

ஜனவரி 25 ஆம் திகதி தொடக்கம் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார். 
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து 02 வாரங்கள் கடந்தே மேலதிக வகுப்புகளுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
ஏனைய பிரதேசங்களுக்கு முதற்கட்டமாக சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
மேலதிக வகுப்புகளுக்கு அதிகூடிய மாணவர்களின் எண்ணிக்கை நூறாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 
இதேவேளை மேலதிக வகுப்புகளுக்காக மாணவர்களும் 
ஆசிரியர்களும் மாவட்டங்களிடையே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இந்த விடயங்கள் தொடர்பாக விசேட சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதுடன், மேலதிக வகுப்புகளை நடத்திச் செல்வதற்கான ஆலோசனைகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புகளுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... மேலதிக வகுப்புகளுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல - GMOA. (அறிக்கை இணைப்பு)

January 16, 2021

நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல மாறாக அச்சமின்றி எதிர்க்கொண்ட குழுவினரே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 
இந்த சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனிய கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய ஒருவராக இனங்காணப்பட்ட சம்பவம் தொடர்பிலான விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக இந்த அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது. 
தொற்றாளர்களை அடிக்கடி சந்திக்கும் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வார்ட்டில் உள்ள வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை ஒன்றும் எதிர்பாராத விடயமல்ல எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய குறித்த நபரின் தனிப்பட்ட விபரங்கள் பகிரங்கப்படுத்தக்கூடாது. அது இங்கு மீறப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த அறிக்கையை கீழே காணலாம்.


நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல - GMOA. (அறிக்கை இணைப்பு) நாங்கள் கொரோனாவைக் கண்டு ஓடி ஒழிபவர்கள் அல்ல - GMOA. (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancies: Provincial Road Development Project

January 16, 2021

Vacancies: Provincial Road Development Project. 
Closing date: 01-02-2021. 
See the details below.

Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: Provincial Road Development Project Vacancies: Provincial Road Development Project Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancies: University of Peradeniya.

January 16, 2021

Vacancies: University of Peradeniya. 
See the details below.

Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: University of Peradeniya. Vacancies: University of Peradeniya. Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancies: University of Sri Jayewardenapura.

January 16, 2021

Vacancies: University of Sri Jayewardenapura. 
Closing date: 02-02-2021 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancies: University of Sri Jayewardenapura. Vacancies: University of Sri Jayewardenapura. Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancy: University of Visual and Performing Arts

January 16, 2021

Vacancy: University of Visual and Performing Arts. 
Closing date: 29-01-2021. 
See the details below.
Source : 10-01-2021 Sunday Observer.

Vacancy: University of Visual and Performing Arts Vacancy: University of Visual and Performing Arts Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

Vacancy: Industrial Development Board (IDB)

January 16, 2021

Vacancy: Industrial Development Board (IDB) 
Closing date: 25-01-2021. 
See the details below.
Source: 10-01-2021 Sunday Observer.

Vacancy: Industrial Development Board (IDB) Vacancy: Industrial Development Board (IDB) Reviewed by irumbuthirai on January 16, 2021 Rating: 5

இன்று ஆரம்பிக்கப்பட்ட Park and Ride செயற்படுவது இப்படித்தான்...

January 15, 2021

Park and Ride பஸ் சேவை ஜனாபதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
கொழும்பில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் 15 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஏனைய நேரத்தில் 
25 நிமிடங்களுக்கு ஒரு முறையும் Park and Ride பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. 
இதில், ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிக்க முடியும் என்பதுடன், சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணமும் அறவிடப்படவுள்ளது. 
மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணிப்போருக்கு பாதுகாப்பான பொது போக்குவரத்து பஸ் சேவையை வழங்குதல், 
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தல், 
சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்தல், 
பயணத்திற்கு செலவிடும் நேரத்தைக் குறைத்தல், 
பயணிகளின் மன உளைச்சலைக் குறைத்தல் போன்ற விடயங்கள் இந்தத் திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட Park and Ride செயற்படுவது இப்படித்தான்... இன்று ஆரம்பிக்கப்பட்ட Park and Ride செயற்படுவது இப்படித்தான்... Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை: வெளியானது பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்: (புள்ளிகள் இணைப்பு)

January 15, 2021

கடந்த வருடம் (2020) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்வருடம் (2021) தரம்6 ற்கு பாடசாலைகளை தெரிவு செய்வதற்காக வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. 
இதனை கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத் தளத்தில் பார்வையிடலாம்.  
தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளை கீழே தருகிறோம்.


புலமைப்பரிசில் பரீட்சை: வெளியானது பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்: (புள்ளிகள் இணைப்பு) புலமைப்பரிசில் பரீட்சை: வெளியானது பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள்: (புள்ளிகள் இணைப்பு) Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5

ட்ரம்ப்பிற்கு எதிராக YouTube இன் நடவடிக்கை

January 15, 2021

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிபெற்றதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் போது பாராளுமன்றத்தின் முன்பு குவிந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் சிலர் இறந்தனர். 
இந்த கலவரத்திற்கு காரணம் Trump வெளியிட்ட Twitter பதிவு என கூறப்பட்டது. இதனால் அவரது Twitter பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாக முடக்கப்பட்டது. 
Facebook, Instagram ஆகியனவும் முடக்கப்பட்டன. இதன் தொடராக YouTube ம் தடைவிதித்துள்ளது. 
ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் வகையிலும் விதிகளுக்கு புறம்பாக இருந்ததாகவும் அதனை YouTube நிறுவனம் நீக்கியுள்ளது. அதில் புதிய காணொளிகள் 
தரவேற்றம் செய்யப்படுவதையும் நேரலை காணொளிகளையும் YouTube தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பிற்கு எதிராக YouTube இன் நடவடிக்கை ட்ரம்ப்பிற்கு எதிராக YouTube இன் நடவடிக்கை Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5

11-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

January 15, 2021

11-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
11-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 11-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5

தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை இலங்கையில்...

January 15, 2021

ஹொரண பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. 
இது சுமார் 
155 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை இலங்கையில்... தென் ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை இலங்கையில்... Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5

கொரோனா: இலங்கையில் சமூகத் தொற்றா?

January 15, 2021

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன, கொவிட் 19 தொற்று இதுவரை சமூக தொற்றாக மாறவில்லை என தெரிவித்துள்ளார். 
இதேவேளை, ஏராளமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட 
மேல் மாகாணத்தினுள் வைரஸ் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொரோனா: இலங்கையில் சமூகத் தொற்றா? கொரோனா: இலங்கையில் சமூகத் தொற்றா? Reviewed by irumbuthirai on January 15, 2021 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட GMOA தலைவர்..

January 14, 2021

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தற்போது தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் இடம்பெற்ற 
விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளார். தொற்றாளருடன் அனுருத்த பாதெணிய நெருங்கிப் பழகியவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட GMOA தலைவர்.. தனிமைப்படுத்தப்பட்ட GMOA தலைவர்.. Reviewed by irumbuthirai on January 14, 2021 Rating: 5

இன்றைய தினமும் இலங்கை வந்தடைந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகள்...

January 12, 2021

இன்று பி.ப. 2.40 அளவில் உக்ரைனுக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் 165 உக்ரைன் பிரஜைகள் மத்தளை விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார். 
ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்த 
உக்ரேன் சுற்றுலாப் பயணிகள் குழு இதே விமானத்தில் நாடு திரும்பவுள்ளனர். 
1004 உக்ரைன் பிரஜைகள் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினமும் இலங்கை வந்தடைந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகள்... இன்றைய தினமும் இலங்கை வந்தடைந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகள்... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

கொரோனா உருவானது எப்படி? சீனா வழங்கிய அனுமதி...

January 12, 2021

2020 மே மாதம், உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார சபை கூட்டத்தில், கொரோனா உருவானது எப்படி என்பது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதற்காக WHO, 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த விசாரணைகளை சீனாவிற்குச் சென்று நடத்த சீனா அனுமதி தர மறுத்தது. இதற்கு WHO தலைவர் உட்பட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. 
இந்நிலையில், WHO நிபுணர் குழு வருகைக்கு சீனா நேற்று (11) அனுமதி அளித்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, எதிர்வரும் 
14 ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு சென்று நேரடி விசாரணை நடத்தவுள்ளது. அக்குழு உகான் நகருக்கு செல்லும்போது, சீன நிபுணர்களும் உடன் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா உருவானது எப்படி? சீனா வழங்கிய அனுமதி... கொரோனா உருவானது எப்படி?  சீனா வழங்கிய அனுமதி... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில:

January 12, 2021

அல்குர்ஆனை தான் 02 முறை முழுமையாக வாசித்ததாகவும் எந்த ஒரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வியையும் அதற்கு அமைச்சர் வழங்கிய பதிலையும் இங்கு தருகிறோம்... 
ஊடகவியலாளர்:- அமைச்சராகிய நீங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் அல்குர்ஆன் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை ஆய்வு செய்தா முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தீர்கள்? இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், 
அல்குர்ஆனை முழுமையாக படித்த பின்னே நான் கருத்து தெரிவித்தேன். அல்குர்ஆனை நான் 2 முறை வாசித்தேன். அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடவில்லை. அல்குர்ஆன்; தொடர்பில் நான் விசேட நிபுணர் அல்ல. விசேட நிபுணர் யாராயினும் நான் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். 
குர்ஆனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி நான் இதனை தெரிவித்தேன். குர்ஆனில் இந்த சடல அடக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டிருக்குமாயின், அது குறித்து விளக்கம் அளிக்குமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால் இது குறித்து எவரும் பதிலளிக்கவில்லை. 
சிலர் சமூக ஊடகங்கள் மூலமாக குர்ஆன் குறித்து தகவல்கள் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவற்றில் எதிலும் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து குறிப்பிடப்படவில்லை. அதேவேளை தகனம் செய்வது தடைசெய்யப்பட்டிருப்பதாக எந்த இடத்திலும் செல்லப்பட்டும் இல்லை. 
நான் அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவிக்கும் பேச்சாளராகவே வந்துள்ளேன். எனது தனிப்பட்ட, கட்சி தொடர்பான கேள்விகள் கேட்க விரும்பினால் அவை தொடர்பில் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டிலே வினவ வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
(அரசாங்க தகவல் திணைக்களம்)
அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில: அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில: Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

வேகமாக அதிகரிக்கும் Telegram பாவனையாளர்கள் ... வெளியான தகவல்...

January 12, 2021

உலகளாவிய ரீதியில் டெலிகிராம் (Telegram) செயலியை பயன்படுத்தும் பாவனையாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அந்த செயலி உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. 
இன்றைய தினத்தில் உள்ள தரவுகளின்படி அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 
500 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் புதிதாக 25 மில்லியன் பாவனையாளர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 அண்மையில் வாட்ஸ் அப் செயலி வெளியிட்ட புதிய நிபந்தனைகள் காரணமாக பாவனையாளர்கள் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி பல்வேறு தளங்களுக்கு வழங்கப்படலாம் என்று பரவலாக பேசப்படும் இந்த நிலையில் Telegram பாவனையாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வேகமாக அதிகரிக்கும் Telegram பாவனையாளர்கள் ... வெளியான தகவல்... வேகமாக அதிகரிக்கும் Telegram பாவனையாளர்கள் ... வெளியான தகவல்... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

முதன்முறையாக கொரில்லா குரங்குகளுக்கும் கொரோனா...

January 12, 2021

இரண்டு கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க, கலிஃபோர்னியாவின் சான்டிகோ விலங்கியல் பூங்காவில் உள்ள 
02 கொரில்லாக்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்த பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கடந்த வாரம் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாத பூங்கா ஊழியர்களிடமிருந்து கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. 
தற்போது அங்கு குரங்குகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவிற்கு பொது மக்கள் செல்ல கடந்த டிசம்பர் 6ஆம் திகதி தடை விதிக்கப்பட்டது. 
கொரில்லா குரங்குகளுக்கு முதல்முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக கொரில்லா குரங்குகளுக்கும் கொரோனா... முதன்முறையாக கொரில்லா குரங்குகளுக்கும் கொரோனா... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

சனிக்கிழமைகளிலும் பாடசாலையைக் கோரும் பெற்றோர்..

January 12, 2021

பாடசாலைக்கு மாணவர்களை சனிக்கிழமையிலும் அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
முதலாம் தவணைக்காக பாடசாலைகள் நேற்றைய தினம் (11) ஆரம்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் மேலும் தெரிவிக்கையில், 
 கொரோனா சூழ்நிலைக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வகையில் மிகுந்த சவாலுக்கு மத்தியில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான தீர்மானம் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது அல்ல, மிகுந்த அவதானத்துடன் நாம் தயாரித்த திட்டத்திற்கு அமையவே பாடசாலைகள் திறக்கப்பட்டன.
இதேவேளை பாடசாலைக்கு மாணவர்களை சனிக்கிழமையிலும் அனுப்ப முடியுமா? என்று பெற்றோர் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். 
 சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பிற்பற்றி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெற்றோருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது என மேலும் தெரிவித்தார்.
சனிக்கிழமைகளிலும் பாடசாலையைக் கோரும் பெற்றோர்.. சனிக்கிழமைகளிலும் பாடசாலையைக் கோரும் பெற்றோர்.. Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

4 வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பெற்றார் ரஞ்சன் ராமநாயக்க...

January 12, 2021

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது. 
 அதன்படி, ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 
குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாகவும், அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளது. 
குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பினை வழங்கிய மூவரடங்கிய நீதிபதி குழு அறிவித்துள்ளது. 
2017 -08 - 21 ஆம் திகதி அலரி மாளிகையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து 
தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இந்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் அநேகமானோர் மோசடியாளர்கள் என தெரிவித்திருந்தார். 
அதன்படி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கொன்றை தொடர்ந்து உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேராவினால் முறைப்பாட்டின் ஊடாக உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பெற்றார் ரஞ்சன் ராமநாயக்க... 4 வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பெற்றார் ரஞ்சன் ராமநாயக்க... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

முடிவுக்கு வந்தது யாழ் பல்கலை உண்ணாவிரதம்: நடந்தது என்ன?

January 12, 2021

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு இடித்தழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று இரவு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு சனிக்கிழமை காலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டங்களையும் ஆரம்பித்தனர். 
 இதற்கு தமிழக முதல்வர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், வெளிநாடுகளின் பிரதிநிதிகள் பலரும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தி வந்ததுடன், புலம்பெயர் நாடுகளில் உள்ளோரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 
இதேவேளை நேற்று(11) திங்கட்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் 
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் தரப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது பூரண ஆதரவை தெரிவித்தனர். 
 இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சி. ஶ்ரீ சற்குணராசா மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியைக் கட்டுவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார். 
 அதன்படி காலை 7.00 மணியளவில் மாணவர்களுடன் பல்கலைக்கழத்தினுள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் (STF) தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி துணைவேந்தர் மாணவர்களை அழைத்துக்கொண்டு வளாகத்தினுள் சென்று ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். 
 பின்னர் நினைவு தூபி இருந்த இடத்திற்கு மாணவர்களுடன் 
துணைவேந்தர் சென்ற போது அங்கு வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடுத்து நிறுத்தினார். அதன் போது துணைவேந்தர் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம், "நாம் தற்போது எந்த கட்டுமான பணிகளிலும் ஈடுபடவில்லை. தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்தில் கல் நடப் போகிறோம். என்னுடைய மாணவர்கள் 03 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எம்மை தடுக்காதீர்கள் என கூறினார். 
 அதனை அடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி அளித்தார். நினைவிடத்திற்கு மாணவர்களுடன் சென்ற துணைவேந்தர், நினைவு கல்லினை நாட்டினார். 
 பின்னர் மாணவர்கள் பல்கலை வளாகத்தினுள் இருந்து வெளியேற முற்பட்ட போது . பல்கலை கழகத்தினுள் இருந்த பொலிஸார் நினைவிடத்திற்கு சென்று வந்த மாணவர்களின் விபரங்களை பதிய முற்பட்டனர். அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, தாம் கொரோனா நோய் தொற்று காரணமாக தான் பதிவுகளை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். 
ஆனால் தமது விபரங்களை பல்கலை வளாகத்தினுள் நின்று பொலிஸார் பதிவதனை மாணவர்கள் எதிர்த்தனர். அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த துணைவேந்தர் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மாணவர்களை வெளியேற விடுமாறு பணித்தனர். அதனை அடுத்து மாணவர்களை வெளியற பொலிஸார் அனுமதித்தனர். 
உண்ணாவிரத இடத்திற்கு வந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் கஞ்சி வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.
Source: தினகரன்.
முடிவுக்கு வந்தது யாழ் பல்கலை உண்ணாவிரதம்: நடந்தது என்ன? முடிவுக்கு வந்தது யாழ் பல்கலை உண்ணாவிரதம்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்...

January 11, 2021

இம்மாதம் 13 மற்றும் 15 ஆம் திகதிகளில் மு.ப. 10 மணி முதல் பி.ப. 3 மணிவரை பாராளுமன்றத்தில் PCR பரிசோதனையை செய்ய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதில் 
பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்... Reviewed by irumbuthirai on January 11, 2021 Rating: 5

அமைச்சர் வாசுதேவவின் தொடர்பில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்..

January 11, 2021

அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் ரஹூப் ஹக்கீமைத் தொடர்ந்து இன்றைய தினம் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 இந்நிலையில் அமைச்சர் வாசுதேவவுடன் முதல் நிலை தொடர்பில் இருந்த 
10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். 
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தின் நான்கு நாட்களும் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை இனங்காணப்பட்ட 10 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர.
முதலில் ஆளும்கட்சி பின்னர் எதிர்க்கட்சி அதன் பின்னர் ஆளும் கட்சி என கொரோனா தொற்று தொடர்கிறது.
அமைச்சர் வாசுதேவவின் தொடர்பில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்.. அமைச்சர் வாசுதேவவின் தொடர்பில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்.. Reviewed by irumbuthirai on January 11, 2021 Rating: 5

150 சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் சேவையில் கிடைக்கும் வாய்ப்பு...

January 11, 2021

பொலிஸ் திணைக்களத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சட்ட சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பொலிஸ் திணைக்களத்திற்கு 150 வழக்கறிஞர்களை நியமிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார. 
இன்று நீதி அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கலந்துரையாடலில் போலீஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் உரிய நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு 
அதன்பின்னர் நியமனம் வழங்கப்படும். ஆட்சேர்ப்புக்குப் பிறகு, அவர்கள் நாட்டின் 09 மாகாணங்களுக்கு இணைக்கப்படுவார்கள், மேலும் அவர்களுக்கு சட்டம் மற்றும் பொலிஸ் துறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களமும் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. 
தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருப்பது விஷேட தகைமையாக கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
150 சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் சேவையில் கிடைக்கும் வாய்ப்பு... 150 சட்டத்தரணிகளுக்கு பொலிஸ் சேவையில் கிடைக்கும் வாய்ப்பு...  Reviewed by irumbuthirai on January 11, 2021 Rating: 5

மாணவர்களுக்கு தேவையான பஸ்களைப் பெறும் வசதி...

January 11, 2021

மாணவர்களுக்கான சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் இதற்காக 1500 சிசு செரிய பஸ் சேவைகள் போக்குவரத்திற்கு 
உட்படுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 
அதேவேளே இந்த பஸ்களின் எண்ணிக்கை போதாவிட்டால், டிப்போ முகாமையாளர்களைத் தொடர்புகொண்டு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கு கல்வி வலயப் பணிப்பாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தேவையான பஸ்களைப் பெறும் வசதி... மாணவர்களுக்கு தேவையான பஸ்களைப் பெறும் வசதி... Reviewed by irumbuthirai on January 11, 2021 Rating: 5

கல்வியமைச்சின் செயலாளரின் இரட்டை நிலைப்பாடு: பொறுப்பை ஏற்பாரா?

January 10, 2021

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் பொழுது மாணவர்கள் யாருக்காவது தொற்று ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என கடந்த முறை கல்வியமைச்சின் செயலாளரிடம் கேட்கப்பட்டது. அவ்வாறு ஏற்பட்டால் அதற்கு நானே பொறுப்பு என பதிலளித்தார். 
ஆனால் இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கல்வியமைச்சின் செயலாளரிடம், 
கொவிட் தொற்று ஏற்பட்டால் பொறுப்பை ஏற்பதாக கடந்தமுறை மாணவர்களுக்கு கூறப்பட்டடதாக கூறினீர்கள். ஆனால் இப்போது தொற்று ஏற்படவும் வாய்ப்புண்டு என கூறுகின்றீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? என்று கேட்கப்பட்டதற்கு, 
பொறுப்பின்றி செயற்பட்டால் எனக்கு பதிலளிக்க முடியாது என்று பதிலளித்துள்ளார்.
கல்வியமைச்சின் செயலாளரின் இரட்டை நிலைப்பாடு: பொறுப்பை ஏற்பாரா? கல்வியமைச்சின் செயலாளரின் இரட்டை நிலைப்பாடு: பொறுப்பை ஏற்பாரா? Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா: ரவுப் ஹகீம் விடுத்த வேண்டுகோள்:

January 10, 2021

நாட்டில் இதுவரை 02 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 
இதேவேளை தன்னுடன் 
கடந்த 10 நாட்களுக்குள் தொடர்பில் இருந்தவர்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவை கீழே காணலாம்.


இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா: ரவுப் ஹகீம் விடுத்த வேண்டுகோள்: இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா: ரவுப் ஹகீம் விடுத்த வேண்டுகோள்: Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

கண்டுபிடிக்கப்பட்டது மாயமான விமானம்!

January 10, 2021

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் புறப்பட்டு நான்கே 
நிமிடங்களில் தொடர்பையிழந்தது. பின்னர் அது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. 
இந்தநிலையில் இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று (10) மனித உடல்களின் பாகங்கள் மற்றும் உடைகளை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். எனவே, விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது உறுதியாகியுள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகளில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரியவருகின்றது.
கண்டுபிடிக்கப்பட்டது மாயமான விமானம்! கண்டுபிடிக்கப்பட்டது மாயமான விமானம்! Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

குடும்பநல உத்தியோகத்தர் (Midwives) பயிற்சிக்காக Online ஊடாக பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்தல் (Online விண்ணப்பம் இணைப்பு)

January 10, 2021

துணை மருத்துவ சேவையின் குடும்பநல உத்தியோகத்தர் (Midwives) பயிற்சிக்காக ஆன்லைன் (Online) ஊடாக பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு சுகாதார அமைச்சால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
விண்ணப்ப முடிவு திகதி: 01-02-2021. 
இது தொடர்பான முழு தகவல்களை பெற்றுக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பப்படிவத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
குடும்பநல உத்தியோகத்தர் (Midwives) பயிற்சிக்காக Online ஊடாக பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்தல் (Online விண்ணப்பம் இணைப்பு) குடும்பநல உத்தியோகத்தர் (Midwives) பயிற்சிக்காக Online ஊடாக பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்தல் (Online விண்ணப்பம் இணைப்பு) Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

வட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய நிபந்தனைகள்: மாற்று வழியை தேடும் மக்கள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரின் பரிந்துரை:

January 10, 2021

வட்ஸ்அப் (WhatsApp) சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளினால் பாவனையாளர்கள் பாரிய அளவிலான அதிர்ச்சி, அசௌகரியங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பாவனையாளர்களின் 
தகவல்கள், தொலைபேசி இலக்கம், அவர்கள் செல்லும் இடங்கள் என்பன பற்றிய தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி, பெற்றுக் கொள்ள வட்ஸ்எப் ற்கு முடியும். அதேவேளை
பாவனையாளர்களின் சகல தகவல்களையும் ஏனைய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வட்ஸ்அப் நிறுவனத்திற்கு கிடைக்கும். 
இந்த நிலையில்  WhatsAppன் இந்த புதிய நிபந்தனைகள் காரணமாக 
டெலிகிராம், சிக்னல் ஆகிய மெஸேஜிங் செயலிகள் மீது மக்கள் கூடுதலாக ஆர்வம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 தற்போதைய நிலையில் உலகின் முதலாவது பணக்காரராக இருக்கும் எலன் மஸ்க் போன்றவர்கள் வட்ஸ் அப் சமூக வலைத்தளத்திற்கு பதிலாக சிக்னல், டெலிகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய நிபந்தனைகள்: மாற்று வழியை தேடும் மக்கள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரின் பரிந்துரை: வட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய நிபந்தனைகள்: மாற்று வழியை தேடும் மக்கள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரின் பரிந்துரை: Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

Vacancies: Uva-Wellassa University.

January 10, 2021

Vacancies: Uva-Wellassa University. 
Closing date: 02-02-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.

Vacancies: Uva-Wellassa University. Vacancies: Uva-Wellassa University. Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

Vacancy: UNFPA.

January 10, 2021

Vacancy in the UNFPA. 
Closing date: 17-01-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.

Vacancy: UNFPA. Vacancy: UNFPA. Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

Vacancies: Mantai Salt Ltd.

January 10, 2021

Vacancies: Mantai Salt Ltd.  
Closing date: 21-01-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.

Vacancies: Mantai Salt Ltd. Vacancies: Mantai Salt Ltd. Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

Vacancy : International Organization for Migration (IOM)

January 10, 2021

Vacancy : International Organization for Migration (IOM) 
Closing date: 17-01-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.

Vacancy : International Organization for Migration (IOM) Vacancy : International Organization for Migration (IOM) Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5
Powered by Blogger.