4 வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பெற்றார் ரஞ்சன் ராமநாயக்க...


நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது. 
 அதன்படி, ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 
குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாகவும், அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளது. 
குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பினை வழங்கிய மூவரடங்கிய நீதிபதி குழு அறிவித்துள்ளது. 
2017 -08 - 21 ஆம் திகதி அலரி மாளிகையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து 
தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இந்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் அநேகமானோர் மோசடியாளர்கள் என தெரிவித்திருந்தார். 
அதன்படி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கொன்றை தொடர்ந்து உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேராவினால் முறைப்பாட்டின் ஊடாக உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பெற்றார் ரஞ்சன் ராமநாயக்க... 4 வருட கடூழிய சிறைத் தண்டனையைப் பெற்றார் ரஞ்சன் ராமநாயக்க... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.