தான் வசிப்பதற்கு மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தது? என்பது தொடர்பான விளக்கத்தை இணைய வழியான கலந்துரையாடல் ஒன்றின் மூலம் ஜாகிர் நாயக் வெளிப்படுத்தியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
2016 ஜூலை முதல் இந்திய அரசின் கெடுபிடிகள் தொடங்கியது. தம் மீதான வழக்கு விசாரணைகள் தீவிரம் அடைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியன. எனினும் அடுத்த இரு மாதங்களுக்குள்
13 முதல் 15 நாடுகள் எனக்கு அழைப்பு விடுத்தன. அந்நாடுகளில் தங்குவதற்கும் தங்கள் நாட்டில் தகுந்த பாதுகாப்பு வழங்குவதாகவும் நல்லபடியாக கவனித்துக் கொள்வதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு நாடுகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து மூன்று நாடுகளை தெரிவு செய்து இறுதியில் மலேசியாவை தேர்ந்தெடுத்தேன்.
உலகில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே மோசமானவற்றுள் சிறந்த நாடு (Best of the worst) மலேசியா என்ற அடிப்படையிலும் ஒரு நபர் வாழ்வதற்கு சிறந்த நாடு என்ற வகையிலும் எனது தேர்வு அமைந்தது.
மலேசியாவை தேர்ந்தெடுத்தமைக்கான காரணங்களை பின்வருமாறு கூறுகிறார் ஜாகிர் நாயக்.
1. மலேசியா போர் பகுதியில் இருந்து வெகு தூரத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தற்போது போர் பகுதியில் உள்ளன. மலேசியா அப்படி அல்ல.
2. தென்கிழக்காசியாவில் அமைந்துள்ளதால் மேற்கத்திய நாடுகளின் நேரடி ஆதிக்கம் மற்றும் கொடுமைகளிலிருந்து மலேசியா விலகி உள்ளது.
3. தற்போது உலகளாவிய இஸ்லாமிய நாடுகளில் மலேசிய கடவுச்சீட்டு தான் அதிக மதிப்புள்ளது. இதனால் 185 நாடுகளுக்கு விசா இன்றி சென்று வர முடியும்.
4. அரேபிய பிராந்தியத்தில் இல்லாத இஸ்லாமிய நாடுகளிலேயே மலேசியாவில் தான் இஸ்லாம் அதிகமாக பின்பற்றப்படுவதாக கருதுகிறேன்.
5. மலேசியாவில் வாழ்க்கைச் செலவு குறைவு கிட்டத்தட்ட இந்தியாவுக்கு இணையான வாழ்க்கைச் செலவுகள்
6. மலேசியா மிக அழகான நாடு. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக இங்குள்ள புத்ராஜெயா என்ற நிர்வாக தலைநகர்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த இஸ்லாமிய நகரம். இஸ்லாமியர்கள் வாழக்கூடிய நகரம் என்பேன். இங்கு இரவு வாழ்க்கை, நடன விடுதிகள் கிடையாது. மதுகூடங்களும் இல்லை.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது எனது தெரிவு சரியானது என நினைக்கிறேன் என்றார்.
ஆனால் இந்தியாவில் 500 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் மலேசியாவில் தன்னுடன் இருவர் மட்டுமே இருப்பதாகவும் ஜாகிர் நாயக் தெரிவித்தார்.
15 நாடுகள் அழைப்பு விடுத்தும் மலேசியாவை ஏன் தேர்ந்தெடுத்தேன்? ஜாகிர் நாயக் விளக்கம்
Reviewed by irumbuthirai
on
September 22, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
September 22, 2020
Rating:

No comments: