"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி


"2020ஆம் ஆண்டின் அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் பில்கிஸ் என்ற 82 வயது இந்திய மூதாட்டி ஒருவர் இடம் பெற்றுள்ளார். 
கடந்த ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட 
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள முஸ்லிம் பகுதியான ஷாஹின் பாகில் நீண்ட கால அமைதிப் போராட்டம் நடைபெற்றது. 
இதில் பில்கிஸ் உட்பட  நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு அமைதியான முறையில் போராடினர். அவர்களுக்கு இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் ஆதரவாக இருந்தார்கள். 
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரையை படித்து, தாங்கள் இந்தியப் பிரஜைகள்தான் என்பதை அழுத்தமாக தெளிவுபடுத்தி உரையாற்றி, தேசபக்தி பாடல்களும் பாடினர். 
ஜனநாயகத்திற்கு எதிரான விஷயத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு பில்கிஸ் நடத்திய போராட்டம், நம்பிக்கையையும் வலிமையையும் அளித்து, நாடு முழுக்க அமைதியான போராட்டங்கள் நடத்தப்பட உந்துதலாக இருந்தது" என பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான ராணா ஆயுப் எழுதியுள்ளார். 
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி "அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் இடம்பெற்ற 82 வயது மூதாட்டி Reviewed by irumbuthirai on September 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.