விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்..



"உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 19.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக கருதிக் கொள்ளுங்கள்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு ஓய்வை அறிவித்தார் மஹேந்திரசிங் தோனி. 
கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார். 
 தோனி இறுதியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி 2019 நடந்த உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியேயாகும். 
1981 ஜூலை 7ஆம் தேதி ராஞ்சியில் பிறந்த தோனி இளம் வயதில் அதிகம் விளையாடியது கால்பந்து மற்றும் பேட்மின்டன் ஆகியவையே. தோனி படித்த பாடசாலையின் கிரிக்கெட் அணியில் வழக்கமாக விளையாடும் விக்கெட் கீப்பர் ஒரு போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட அந்த போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக விளையாடினார் அப்படி ஆரம்பித்ததே அவரது கிரிக்கெட் வாழ்க்கை. 
2004 டிசம்பரில் தான் இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். 2007 t20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பை தோனியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது. 2013 ஐசிசி சம்பியன்ஸ் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. 2010 மற்றும் 2016 ஆகிய இரு முறைகள் இந்தியா ஆசிய கோப்பையை வென்றதும் இவரது தலைமையில்தான். 
அதேபோன்று 2010 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களில் இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்.. விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்.. Reviewed by irumbuthirai on August 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.