கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்...


கொரோனா தொடர்பான சகல Update களையும் அறிந்திட புதிய App ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. MyHealth என்ற புதிய கைத்தொலைபேசி செயலியை சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவுவது குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். உலகளாவிய கோவிட்-19 வைரஸ் இலங்கையில் பரவத் தொடங்கியவுடன், பாதிக்கப்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவேளையில் ஒரு வலுவான கைத்தொலைபேசி செயலியின் தேவை உணரப்பட்டது. 
அதனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் மேலான அறிவுறுத்தலின் கீழ் இவ் செயலியை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிமுகப்படுத்தியது. 
இந்த App மூலம் வைரஸ் குறித்த தேவையான தரவு, தகவல் மற்றும் கருத்துக்களை மருத்துவ அதிகாரிகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களுக்கும் வழங்குகிறது. 
இவ் கைத்தொலைபேசி செயலியை கூகிள் பிளேஸ்டோர், ஹூவாய் ஆப்ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து, இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றீர்கள். இந்தப் பயன்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, 
வைரஸ் கண்டறியப்பட்டால் அதை எல்லா பயனர்களுடனும் பகிரலாம். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட நபர் இருந்த இடத்தை உங்கள் இருப்பிடத்துடன் வரைபடமாகக் காண்பிக்கிறது. வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர் சென்றுவந்த இடங்களின் தரவுகளை அறிந்துகொள்ள முடியும். மேலும், கடந்த 14 நாட்களில் அவர்கள் குடும்பத்தினரையும், அவர்கள் இணைந்த நண்பர்களையும் பாதுகாக்கும் நோக்கில் கைத்தொலைபேசி செயலியில் பயனர்களின் பதிவுசெய்யப்பட்ட இருப்பிடத் தரவுகள் அனைத்தும் கைத்தொலைபேசிக்குள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்த கைத்தொலைபேசி செயலில் பதிவுசெய்யப்படும் பயனரின் தகவல்கள் அனுமதியின்றி எந்த வெளி அமைப்புகளுக்கும் அனுப்பப்படாது. மேலும், பாதிக்கப்பட்ட நபருடன் உங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தால், நீங்கள் தானாகவே தேசிய நோய் கண்காணிப்பு அமைப்பில் பதிவு செய்யலாம். இது கோவிட்-19 வைரஸ் தொற்றலை அடையாளம் காணவும், பரவலைக் கட்டுப்படுத்தவும் மற்றும் பிற நபர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இவ்வாறு பல அம்சங்களுடன் வெளிவந்திருக்கின்றது இந்த App.
(அ.த.தி)
கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... கொரோனாவுக்காக அறிமுகமாகியது புதிய App... உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பான தரவுகளுடன்... Reviewed by irumbuthirai on April 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.