இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்...

 

கூகுள் தொடங்கி இன்றுடன்(27/9/2021) 23 வருடங்களாகின்றன. எனவே இதை முன்னிட்டு கூகுள் தொடர்பாக 23 சுவாரஸ்ய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். 

(1) அதிகம் தேடப்படும் மற்றும் பார்க்கப்படும் இணையதளம் இதுவாகும். 
 
(2) கல்லூரி மாணவர்கள் இருவரால் உருவாக்கப்பட்டதே Google. லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்பவர்களாலேயே உருவாக்கப்பட்டது. இணையதளங்களை தரவரிசைப்படுத்தும் ஓர் தளமாகவே இதை உருவாக்க விரும்பினர். அதாவது ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை உருவாக்கப்பட்டது. 
 
(3) Google என்ற சொல் கூகொல் (Googol) என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூச்சியங்களைப் போடுவதால் வரும் எண்ணைக் குறிக்கவே இந்த கூகொல் என்ற சொல் பயன்படுகிறது. எவ்வளவு தகவல்களை இதில் தேட விரும்புகிறோம் என்பதை குறிக்கவே இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர். 
 
(4) 1998 இல் முதல் கூகுள் டூடுல் உருவாக்கப்பட்டது.'burning man' என்ற நிகழ்வுக்காக இது உருவாக்கப்பட்டது. 
 
(5) முதல் வீடியோ டூடுல் ஜோன் லெனனின் 70 வது பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. 
 
(6) கூகுளின் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் அமைந்துள்ளது. இந்த தலைமை அலுவலகம் கூகுள் ப்ளக்ஸ் என அழைக்கப்படுகிறது. 

(7) தலைமை அலுவலகத்தில் டி-ரெக்ஸ் டைனோசரின் பெரிய சிலை காணப்படுகிறது. இந்த சிலை அடிக்கடி பிளமிங்கோ பறவையால் முழுமையாக மறைக்கப்படும். கூகுள் எப்போதுமே அழிந்து விடக்கூடாது என்பதை ஊழியர்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக ஒரு வதந்தி இருக்கிறது. 
 
(8) கூகுளின் முதல் சேர்வர் (Server) லெகோ என்ற பிளாஸ்டிக் பொம்மை பாகங்களால் தயாரிக்கப்பட்ட பெட்டியில் தான் அமைந்திருந்தது. 

(9) கூகுளின் தலைமை அலுவலகம் மிகவும் பசுமையாக இருக்கும். அங்குள்ள புற்களை சீர் செய்வதற்கு ஊழியர்களுக்கு பதிலாக ஆடுகளே இருக்கும். 
 
(10) தமது செல்லப் பிராணியான நாய்களை கொண்டு வருவதற்கு Google இன் ஊழியர்களுக்கு அனுமதி உண்டு. 
 
(11) கூகுளில் இமேஜ் தேடுதல் முறை 2001 இல் ஆரம்பிக்கப்பட்டது. 
 
(12) Google தனது இமெயில் சேவையை Gmail என்ற பெயரில் 1-4-2004 இல் ஆரம்பித்தது. 
(13) கூகுள் என்ற வார்த்தை 2006 இல் முதன்முதல் அகராதியில் சேர்க்கப்பட்டது. அதன் பொருளாக "கூகுளை பயன்படுத்தி தகவலைத் தேடிப் பெறுதல்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
(14) 2006இல் 1.5 பில்லியன் டொலருக்கு யூடியூப் ஐ கூகுள் வாங்கியது. தற்போது இதில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 400 மணித்தியால அளவிற்கு வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. 
 
(15) ஒவ்வொரு நாளும் வேறு எதிலும் தேவைப்படாத 15%மான தேடல்கள் கூகுளில் மாத்திரமே தேடப்படுகின்றன. 
 
(16) 2018 ஏப்ரல் தொடக்கம் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டும் பயன்படுத்தும் நிறுவனமாக கூகுள் மாறியது. அதாவது 1KW மின்சாரத்தை பயன்படுத்தினால் அது முழுமையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். 
 
(17) கூகுளிற்கு 6 பிறந்த நாட்கள். ஆனால் செப்டம்பர் 27 ஐயே இது தேர்ந்தெடுத்தது. 
 
(18) கூகுள் ஹோம் பேஜ் (Home Page) குறைந்தபட்சம் 80 மொழிகளில் வழங்கப்படுகின்றது. 

(19) நமது தேடலின் முடிவை தருவதற்கான Google இன் கணிப்பு ஆற்றலின் அளவு அப்பலோ 11 விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்புவதற்கு தேவைப்பட்ட கணிப்பு ஆற்றலின் அளவுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
(20) கூகுளை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி, 1995இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, அவருக்கு அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி காட்டுவதற்காக செர்கே கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் இருவரும் நண்பர்களாகி "Backrub" என்ற தேடுபொறியை உருவாக்கினர். பின்னர் Backrub - Googol என மாற்றினர். (Googol என்பது 1 ஐ தொடர்ந்து 100 பூச்சியங்கள் இருப்பதற்கு கணிதத்தில் பயன்படுத்தப்படும் சொல்). ஆனால் நடந்தது என்னவென்றால் லாரி பேஜ் அதன் எழுத்தை தவறாக எழுதியதால் உருவானதே கூகுள் (Google). பின்நாளில் அதையே பெயராக வைத்துவிட்டனர். 
 
(21) கூகுள் நிவ்ஸ் செப்டம்பர் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டது. 

(22) கூகுள் அனலிட்டிக்ஸ் நவம்பர் 2005 இல் தொடங்கப்பட்டது, இது வலைத்தள ட்ராஃபிக்கை (Website Traffic)  கண்காணித்து அறிக்கை செய்கிறது.
 
(23) Google தற்போது வெறுமனே ஒரு தேடுபொறியாக மட்டும் கருதப்படுவதில்லை. செயற்கை நுண்ணறிவு, ஓட்டுனர்கள் இல்லாத கார்கள், புதிய விளையாட்டு தளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய எதிர்கால வளர்ச்சியின் உதாரணமாகவே கருதப்படுகிறது. 

இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.