செயற்பாட்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு இன்றைய தினம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனைக் கீழே காணலாம்.
சுற்றுநிறுப இலக்கம்: 18/2021
மாகாண பிரதம செயலாளர்கள்,
மாகாண கல்வி செயலாளர்கள்,
மாகாண கல்விப் பணிப்பாளர்கள்,
வலயக் கல்விப் பணிப்பாளர்கள்,
கோட்ட பிரதி / உதவி கல்வி பணிப்பாளர்கள்,
பிரிவெனாதிபதிகள்,
சகல அரச பாடசாலை அதிபர்களுக்கு,
2020 - க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் செயற்பாட்டுப் பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை கா. பொ. த. (உயர்தர) வகுப்புகளுக்கு அனுமதித்தல்.
கபொ.த. (உயர்தர) வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பாக இதற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள 2008-4-30 ஆம் திகதி 2008/17 ஆம் இலக்கத்தை கொண்ட சுற்றுநிறுபம் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றுநிறுப திருத்தங்களுக்கு மேலதிகமானது.
2.0 இச்சுற்றுநிறுப அறிவுறுத்தல்கள் 2020 க. பொ. த. (சாதாரண தரப்) பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை க.பொ.த. (உயர்தர) வகுப்புகளுக்கு அனுமதித்து கொள்வதற்கு மட்டுமே பொருந்தும்.
3.0 க.பொ.த (சாதாரண தர) பரீட்சை - 2020 பெறுபேறுகளின் படி செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை 12 ஆம் தரத்திற்கு அனுமதித்துக் கொள்வதற்காக குறைந்தபட்ச தகைமைகளைப் பொருத்திக் கொள்ள வேண்டிய முறை:
3.1 மேற்படி 3.0(அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளின் அடிப்படையில் தேவைப்படும் இரண்டு திறமை சித்திகளில் ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் 2020 - க. பொ. த. (சாதாரண தரப்) பரீட்சையில் எழுத்துப் பரீட்சையில் சாதாரண சித்தியைப் பெற்று அப்பாடத்திற்கு பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் சாதாரணம் அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சியினைப் பெற்றிருப்பின் அது ஒரு திறமை சித்தியாக கொள்ளப்படும். இது தாய் மொழி மற்றும் கணித பாடத்திற்கு பொருந்தாது.
3.2
பாடசாலை பரீட்சார்த்தியாக முதற் தடவை தோற்றிய பின்னர் இரண்டாம் தடவையாக க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர் ஒருவருக்கு மேலே 3.1இல் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, தகைமைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக முதற் தடவையில் பெற்றுக்கொண்ட பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் பெறுபேற்றினை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
3.3 க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்களை க.பொ.த. (உயர்தர) வகுப்புகளுக்கு அனுமதிக்கும் போது அதி திறமை சித்தி அல்லது விசேட திறமைச் சித்தி தேவைகளுக்கும் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடங்களில் பெற்றுக் கொண்டுள்ள, பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் தேர்ச்சி மட்டத்தினை உரியதாக்கிக் கொள்ள வேண்டும்.
3.4 க.பொ.த. (சாதாரண தர) - 2020 பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றி, அப்பாடங்கள் உள்ளடங்கலாக க.பொ.த. (உயர் தர) த்தினைக் கற்பதற்கு எதிர்பார்த்திருப்பின் அப் பாடத்திற்காக பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் திறமை தேர்ச்சி அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சி மட்டத்தினை பெற்றிருத்தல் வேண்டும்.
எனினும், பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட கணிப்பீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் தேர்ச்சி மட்டம் குறிப்பிடப்பட்டிருக்காத சந்தர்ப்பத்தில் மாத்திரம் அதற்கான அனுமதியை கல்வி அமைச்சிடம் (பாடசாலை செயற்பாட்டு கிளை) பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
3.5 க.பொ.த. (சாதாரண தர) - 2020 பரீட்சையில் செயற்பாட்டு பரீட்சையுடன் கூடிய அழகியல் பாடத்திற்கு தோற்றிய மாணவர்கள் 2021 ஆம் வருடத்தில் க.பொ.த. (உயர் தரம்) 12ஆம் தரத்தில் அனுமதிக்கும் போது மேற்படி அறிவுறுத்தல்களின்படி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மேலதிக விதிமுறைகளுக்கு மேலதிகமாக உரிய சுற்றுநிருபங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய சகல விடயங்களும் அவ்வாறே நடைமுறையிலிருக்கும். இச் சுற்றறிக்கையில் எழும் எந்தவொரு பிரச்சினை தொடர்பாகவும் கல்வி செயலாளரின் முடிவே இறுதியானதாக இருக்கும்.
பேராசிரியர் கே. கபில சி. கே. பெரேரா.
செயலாளர்.
கல்வி அமைச்சு.
செயற்பாட்டு பரீட்சைக்குரிய மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல்: வெளியானது சுற்றறிக்கை!
Reviewed by Irumbu Thirai News
on
September 28, 2021
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 28, 2021
Rating:


No comments: