தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும்.
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம்.
குறிப்பு: தொடர்புடைய சுற்றறிக்கைகள் வர்த்தமானி என்பன இணைக்கப்பட்டுள்ளன.
பாகம் - 05
(21) மத்திய அரசின் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை முற்தேதியிடல் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பாக செயற்பட வேண்டியது எவ்வாறு?
20.02.2009 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிகளுக்கு அவதானத்தைச் செலுத்தி குறித்த அறிவுரைகளை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
குறித்த வர்த்தமானிகளைப் பார்வையிட...
(22) 2005.07.15 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 20/94 (II) இன் ஏற்பாடுகளை, 31.12.1980 ஆந் திகதியின் பின்னர் அரச சேவையின் பொருட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
முடியாது.
குறித்த சுற்றறிக்கையைப் பார்வையிட..
(23) அரச சேவையில் சகல பட்டதாரிகளையும் ஒரே சம்பளப் புள்ளியில் வைக்க முடியமா?
ஒரே சம்பளப் புள்ளியில் அமைக்க முடியாது. சம்பளத்தினை தீர்மானிப்பது பதவியின் பொருட்டு என்பதுடன்; அப்பதவிகளின் உள்ள நபர்களின் தகைமைகளுக்கமைய மேற்கொள்ளப்படுவது இல்லை.
(24) அரச சேவையில் ஓர் பதவியிலிருந்து அரச சேவையில் வேறொரு பதவியின் பொருட்டு நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உத்தியோகத்தர் ஒருவருக்கு மீண்டும் முன்னைய பதவிக்கு வருதல் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் என்ன?
2009.02.20 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறைக் கோவையில் இதற்குரிய ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை என்பதால் இது தொடர்பாக பொதுச் சேவைகள் ஆணைக் குழுவிடமிருந்து அறிவுரையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
(குறிப்பு:- குறித்த வர்த்தமானி 21ஆவது வினாவுக்கான விடையில் இணைக்கப்பட்டுள்ளது. )
(25) தேர்தல் ஒன்றிற்காகப் போட்டியிடும் அரசியல் உரிமைகள் உடைத்தான உத்தியோகத்தரொருவர், அதன் பொருட்டு விடுமுறைக்காக விண்ணப்பிக்கும் போது, அவ்வருடத்தில் அவருக்குரிய அது வரையில் பெற்றுக் கொள்ளப்படாதுள்ள சாதாரண விடுமுறைகள் இருப்பின் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா?
ஆம். அவ்வருடத்திற்குரிய அமைய விடுமுறைகளையும் உழைத்துக் கொண்டுள்ள ஓய்வு விடுமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
(26) அரசியல் உரிமை உடைத்தான உத்தியோகத்தர் ஒருவர் உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா?
இல்லை. அவர் வகித்த பதவியில் இருந்தவாறே ஆகக் குறைந்தது மாதம் ஒன்றிற்கு 05 நாட்கள் குறித்த கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ள முடியும். (22.05.2007 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 13/2007).
குறித்த சுற்றறிக்கையைப் பார்வையிட..
(27) அரசியல் உரிமையுடைத்தான உத்தியோகத்தர் ஒருவருக்கு உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி தலைவர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா?
இல்லை.
அவருக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 அணுசரணைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
(1) உள்ளுராட்சி நிறுவனத்தில் பதவி வகிக்கும் முழுமையான காலத்திற்கும் சம்பளமற்ற விடுமுறையினைப் பெற்றுக் கொள்ளல்.
(11) நிரந்தர பதவியில் உள்ள போதே மாதத்திற்கு ஆகக் குறைந்தது 07 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ளலாம்.
(28) அரசியல் உரிமை உரித்துடைய உத்தியோகத்தரொருவர் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா?
இல்லை.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 விருப்புக்களில் ஏதாவது ஒரு விருப்பினை அனுபவிக்கலாம்.
(1) மாகாண சபை உறுப்பினராக இருக்கும் வரை சம்பளமற்ற விடுமுறையில் முழு நேர அடிப்படையின் பேரில் விடுவித்தல்.
(11) 22.04.1991 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 1/89( I) இன் 02 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் பேரில் ஓய்வு பெறல்.
(29) அரசியல் உரிமைகள் உரித்துடைய உத்தியோகத்தர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அவர் வகித்த பதவியில் இருந்து விலகுதல் வேண்டுமா?
ஆம்.
(30) அரசியல் உரிமையற்ற உத்தியோகத்தர் ஒருவர் தேர்தலின் பொருட்டு போட்டியிடுவதற்கு சேவையிலிருந்து விலகுதல் வேண்டுமா?
ஆம்.
15.12.2004 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 07/2004 னால் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக்கோவையின் XXXII அத்தியாயத்தின் 1:3 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய செயற்படல் வேண்டும்.
இது தொடர்பான சுற்றறிக்கைகளைப் பார்வையிட..
தொடரும்...
ஏனைய பாகங்களுக்கு செல்ல...
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05
Reviewed by Irumbu Thirai News
on
September 26, 2021
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 26, 2021
Rating:

No comments: