அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01

 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. 
 
இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 
 
 
(01) அரசின் நிரந்தர நியமனம் ஒன்றை பெறும் சந்தர்ப்பத்தில் குழந்தை பிரசவித்த உத்தியோகத்தர் ஒருவருக்கு பிரசவ விடுமுறை வழங்கலாமா? 
 
முடியும். 
 
குழந்தை பிரசவித்த நாள் தொடக்கம் உத்தியோகத்தர் நிரந்தர நியமனத்தினைக் கையேற்ற நாள் வரையிலான கால எல்லையினைக் கழித்து சம்பளத்துடனான, அரைச் சம்பளத்துடனான மற்றும் சம்பளமற்ற பிரசவ விடுமுறையினை வழங்க முடியும்.
 
03.02.2005 ஆந் திகதிய 04/2005 என்னும் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கமைய இதை வழங்கலாம்.
 
இது தொடர்பான சுற்றறிக்கையை பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே கிளிக் செய்க. 
 
 
(02) கடமை வேளையின் பின்னர் விபத்தொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதன் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 382 இன் ஏற்பாடுகளுக்கமைய விடுமுறை வழங்க முடியுமா? 
 
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இற்கமைய எதிர்பார்க்காத அனர்த்தமொன்று என்பது ஓர் புவியியல் பிரதேசமொன்றினுள் ஏற்படும் வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம் நீண்ட வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அல்லது யுத்தம் போன்ற சந்தர்ப்பத்தில் ஏற்படும் அனர்த்தங்கள் என்பதாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகும் உத்தியோகத்தரொருவருக்கு அச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து விடுமுறை வழங்கலாம். 
 
அது தவிர வேறு அவசர விபத்துக்களின் (மோட்டார் வாகன விபத்து போன்ற) பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இன் ஏற்பாடுகளை ஏற்புடையதாக்க முடியாது. 
 
இது தொடர்பான சுற்றறிக்கையை பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே கிளிக் செய்க. 
 
 
 
(03) புலமைப்பரிசிலின் பேரில் வெளிநாடு செல்லும் உத்தியோகத்தர் ஒருவரின் துணையும் அவரோடு செல்ல வெளிநாட்டு விடுமுறை பெறலாமா? 
 
முடியாது. 
 
 
(04) ஒப்பந்த அடிப்படையில் (Contract Base) சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தரொருவருக்கு பிரசவ விடுமுறை வழங்க முடியுமா? 
 
முடியாது. 
 
 
(05) சட்ட ரீதியாக குழந்தையொன்றை தத்தெடுக்கும் உத்தியோகத்தரொருவருக்கு குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொருட்டு விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியுமா? 
 
விசேட விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதன் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். 
 
தொடரும்...
 
இது தொடர்பான ஏனைய பாகங்கள்...
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01 Reviewed by Irumbu Thirai News on September 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.