அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02

 

தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும். 
 
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம். 
 
 
(06) வைத்தியச் சான்றிதழை அடிப்பைடையாகக் கொண்டு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ள போது, அவ்விடுமுறை நாட்களுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து கழிக்கப்படுமா? 
 
வைத்தியச் சான்றிதழொன்றின் அடிப்படையில் அலுவலர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற முழுச் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளின் எண்ணிக்கை யாதெனில், குறித்த ஏற்பாடுகளுக்கு அமைவாக நடப்பாண்டில் தொடர்ந்தும் மீதமாகவுள்ள விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மற்றும் முன்னைய ஆண்டில் மீதமாகவுள்ள ஓய்வு/ சுகயீன விடுமுறைகளின் எண்ணிக்கையுடன் தொடர்ந்தும் விடுமுறை தேவைப்படுமாயின் தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் பெற்றுக்கொள்ள முடியுமான முன்னைய விடுமுறைகளுமாகும். 
 
அவ் அத்தியாயத்தின் 8.3 உப பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய உள் நாட்டில் கழிக்கும் ஓய்வு விடுமுறை காலத்தினுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்கள் என்பன விடுமுறை நாட்களில் இருந்து கழிக்கப்பட மாட்டாது. 
 
அதற்கமைய வைத்தியச் சான்றிதழின் அடிப்படையில் சுகயீன விடுமுறையாக முழுச் சம்பளத்துடன் வழங்கப்படும் சில விடுமுறை நாட்கள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில், 
 
சனிக்கிழமை சாதாரண அலுவலக கடமை நாளாக கணிக்கப்படுகின்ற அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும், 
 
சுழற்சிமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு வாரத்தில் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நாட்களும், 
 
வாரத்தில் 05 நாட்களில் மாத்திரம் சாதாரண அலுவலக கடமை நாட்களாக விதிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து குறைக்கப்பட மாட்டாது. 
 
உதாரணமாக :- முழுச் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் வாரத்தின் 05 நாட்கள் மாத்திரம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டிய அலுவலர் ஒருவருக்கு 05 நாட்கள் வைத்திய காரணங்களின் அடிப்படையில் விடுமுறை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தின் போதும், அக்கால எல்லையில் அரசாங்க விடுமுறை தினங்கள் 02 உள்ளடங்குமாயின், அலுவலர் சுகயீனம் காரணமாக 05 நாட்கள் சேவைக்கு சமூகமளிக்காதிருந்த போதிலும், உள்ளபடியாக அவருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து 03 நாட்களே கழிக்கப்படும். 
 
(07) அரசாங்க அலுவலர் ஒருவர் கர்ப்பிணியாக இருப்பின், 05 மாதமாகும் போது, பிரசவ விடுமுறை பெற்றுக் கொள்ளும் வரையில், கடமையின் நிமித்தம் அலுவலகத்திற்கு அரை மணித்தியாலயம் பிந்தி வருவதற்கும், சாதாரணமாக அலுவலகத்தில் இருந்து வெளியேறும் நேரத்திற்கு அரை மணித்தியாலம் முந்தி புறப்படுவதற்கும் வழங்கப்பட்டுள்ள சலுகையை, காலை அல்லது மாலை ஒரேயடியாக ஒரு மணித்தியாலமாக பெற்றுக்கொள்ள முடியுமா? 
 
விடுமுறையை அனுமதியை வழங்கும் அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து திருப்தியடைவாராயின் அச் சலுகையை ஒரேயடியாக ஒரு மணித்தியாலயம் வழங்குவது சம்பந்தமாக எதுவித எதிர்ப்புக்களும் இல்லை. 
 
(08) பிரசவ லீவு பெற்றுள்ள பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அந்த லீவு காலத்தினுள் இடமாற்றம் கிடைக்கப் பெற்று அதனை நடைமுறைப்படுத்தும் போது பிரசவ லீவு (சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமற்ற) காலத்தின் மீதமுள்ள நாட்களைப் பெற புதிய சேவை நிலையத்தில் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா? 
 
இடமாற்றக் கட்டளைக்கு ஏற்ப புதிய சேவை நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்றதன் பின்னர் சுற்றறிக்கை ஏற்பாடுகளின் படி அப்பெண் உத்தியோகத்தருக்கு தொடர்ந்தும், சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமின்றிய பிரசவ லீவுகள் எஞ்சியிருப்பின் புதிய சேவை நிலையத்தில் அம்மீதமுள்ள லீவு நாட்களைப் பெறுவதற்கு அனுமதிக்க முடியும். 
 
(09) அரச உத்தியோகத்தர்களில் தங்கி வாழும் குழந்தைகளின் பொருட்டு விடுமுறை புகையிரத ஆணைச்சீட்டுக்கள் (Railway warrants) வழங்கும் போது அவர்களின் பொருட்டு உச்ச வயதெல்லைகள் விடுக்கப்பட்டுள்ளதா? 
 
தாபன விதிக்கோவையில்; XVI வது அத்தியாயத்தின் 1:3 வது உப பிரிவின் பிரகாரம் வயதெல்லையைக் கருதாது நிரந்தரமாகத் தங்கி வாழ்வதாக உறுதிப்படுத்திக் கொள்ளல் போதுமானதாகும். 
 
மேலும் அவ் அத்தியாயத்தின் 1:3:4 வது உப பந்திக்கமைய இவ் உறுதிப்படுத்தல் திணைக்களத் தலைவரின் பொறுப்பாகும் என்பதுடன், தேவையெனில் இது தொடர்பாக கிராம அலுவலரிடம் உறுதிப்பாட்டொன்றை வேண்டிக் கொள்ள முடியும்.
தொடரும்... 

ஏனைய பாகங்களுக்கு செல்ல...
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02 அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02 Reviewed by Irumbu Thirai News on September 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.