பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு!நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு நாளைய தினம் செவ்வாய்க்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான விபரங்கள் கல்வி அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில அறிவிப்புகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. 
 
அந்த வகையில் களனி மற்றும் கம்பஹா கல்வி வலயம் மற்றும் கடுவெல கோட்டக்கல்வி பிரதேசத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (4) செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மாகாண கல்வி பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை(4) மற்றும் நாளை மறுதினம்(5) புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் பின்வரும் பிரதேச பாடசாலைகளுக்கு நாளைய தினம்(4) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 
 
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 
நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Previous:

 
 
பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.