Results for Election

ஒரு வாக்காளர் அட்டை ரூ..5000: இருவர் கைது:

August 04, 2020


வாக்காளர் அட்டைகளை தலா 5,000 ரூபாய் கொடுத்து வாங்கிய இருவர் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்கள் வந்த காரை போலீசார் கைப்பற்றியதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வாக்காளர் அட்டை ரூ..5000: இருவர் கைது: ஒரு வாக்காளர் அட்டை ரூ..5000: இருவர் கைது: Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

இம்முறை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்...

August 04, 2020


2020 பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அடுத்த நாள் அதாவது 6 ஆம் திகதி இடம்பெற இருக்கிறது. அதேவேளை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்... இம்முறை 66 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள்... Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

மூன்று வாக்களர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம்

August 04, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை மட்டக்களப்பு வாவியின் நடுவே மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு மேற்காக அமைந்துள்ள தீவாகும். இது பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதொழுநோய் வைத்திய சாலை. தொழுநோய் வைத்தியசாலையில் சுமார் 200பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது அங்கு வேலைசெய்யும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் வணக்க தலங்கள் என பலவசதிகளும் இருந்துள்ளது. 
இந்நிலையில் மாந்தீவில் 2009ம் ஆண்டு பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்ப்பட்டுள்ளது அப்போது 13 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் அங்கு தீ அனர்த்தத்தின் பின்னர் வைத்தியசாலை சரியான பராமரிப்பு இன்றி மூன்று பேர்தவிர அனைவரும் சென்றுவிட்டதாகவும் அதில் தற்போதுள்ளவர்களின் வாக்குகள் மட்டக்களப்பு தேர்தல் தொகுயில் பதியப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. இவர்களுக்கான வாக்குப் பெட்டி இயந்திரப்படகு மூலம் மாந்தீவு வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜாதெரிவிதார்.
அ.த.தி.
மூன்று வாக்களர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம் மூன்று வாக்களர்களுக்காக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம் Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்

August 02, 2020


இம்முறை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக, நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களம் பயன்படுத்தப்படவுள்ளது. 
எனவே நாரஹேன்பிட்டி போக்குவரத்து திணைக்களகளம் எதிர்வரும் 04ஆம், 05ஆம் திகதிகளில், வழமையான சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது. 
இதுதொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:


மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடப்படவுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் Reviewed by irumbuthirai on August 02, 2020 Rating: 5

இரத்தானது நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம்!

July 27, 2020


ஜுலை மாதம் 30 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் வேலைத்திட்டம் மேற்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
தற்பொழுது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாக இதனை திட்டமிட்ட வகையில் மேற்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அரசியல் கட்சி செயலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அ.த.தி.
இரத்தானது நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம்! இரத்தானது நடமாடும் வாக்களிப்பு வேலைத்திட்டம்! Reviewed by irumbuthirai on July 27, 2020 Rating: 5

தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள்: வெளியானது விஷேட வர்த்தமானி: (மும்மொழிகளிலும்)

July 17, 2020


தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி இன்று வெளியானது. 
இதில் தேர்தல் கூட்டங்கள், பிரச்சாரம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற விடயங்கள் உட்பட இன்னும் பல வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
இந்த விஷேட வர்த்தமானியை மும்மொழிகளிலும் தருகிறோம். 
தமிழில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 

ஆங்கிலத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. (The Corona Virus Disease 2019 (COVID 19) (Elections) Regulations, No. 1 of 2020)
English
சிங்களத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Sinhala
தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள்: வெளியானது விஷேட வர்த்தமானி: (மும்மொழிகளிலும்) தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகள்: வெளியானது விஷேட வர்த்தமானி: (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 17, 2020 Rating: 5

ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு)

July 13, 2020


அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேசிய தேர்தலின் போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறையில் கணக்கிடாத வகையில் சுயமாக வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்கப்படவேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
ஊழியர்களுக்கு உரிய முறையில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தொழில் தருனர்களால் தராவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மேலதிக விளக்கங்களும் அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. 
தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையை கீழே காணலாம்.


ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு) ஊழியர்கள் வாக்களிப்பதற்காக சம்பளத்துடன் விடுமுறை: மீறினால் சட்டநடவடிக்கை: (அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on July 13, 2020 Rating: 5

ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு!

July 12, 2020


ராஜாங்கன பிரதேச செயலாளர் பிரிவின் தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஆர்.எம். வன்னிநாயக தெரிவித்துள்ளார். 
குறித்த பிரதேசத்திலுள்ள குடும்பங்கள் சில தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
தபால் மூல வாக்களிப்பு நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு! ராஜாங்கனையில் பிற்போடப்பட்ட வாக்களிப்பு! Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்:

July 12, 2020


தற்போதுள்ள கொரோனா பரவல் நிலைமைகளை கருத்திற்கொண்டு இம்மாதம் 13, 14, 15 ஆகிய தினங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த பிரச்சார கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது ஜன பெரமுன அறிவித்தல் விடுத்துள்ளது. 
இதற்கான ஆலோசனையை கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ அவர்கள் வழங்கியதாக  அக்கட்சியின் செயலாளர் அந்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை அக்கட்சியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் தமது கூட்டங்களையும் மக்கள் சந்திப்புகளையும் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அவ்வாறு சிறு சிறு சந்திப்புக்களை நடத்தும் பட்சத்தில் மிகத் தீவிரமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் படியும் அதில் கூறப்பட்டுள்ளது. 
இதனையடுத்து நாமல் ராஜபக்ச தனது கூட்டங்களை குறித்த தினங்களில் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக  தனது ட்விட்டர் செய்தியில் அறிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அறிவித்தலை கீழே காணலாம்.


ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்: ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

தபால்மூல வாக்களிப்பு தினங்கள்...

July 11, 2020

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் பல கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளன. இதற்கமைவாக சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் திங்கட்கிழமை வாக்களிக்கவுள்ளனர். 
எதிர்வரும் 14ஆம் 15ஆம் தினங்களில் அரச பணியாளர்களுக்கும் 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால்மூல வாக்களிப்பு தினங்கள்... தபால்மூல வாக்களிப்பு தினங்கள்... Reviewed by irumbuthirai on July 11, 2020 Rating: 5

வேட்பாளர்களை ஆதரித்து தமது வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியவர்களுக்கு...

July 10, 2020


கட்சிகளை அல்லது குழுக்களை அல்லது வேட்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சகல வாகனங்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் ஒட்டப்பட்டுள்ள ஸ்ரிக்கர்களையும் புகைப்படங்களையும் சித்திரங்களையும் அகற்றுதல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு;

அ.த.தி.

வேட்பாளர்களை ஆதரித்து தமது வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியவர்களுக்கு... வேட்பாளர்களை ஆதரித்து தமது வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியவர்களுக்கு... Reviewed by irumbuthirai on July 10, 2020 Rating: 5

வாக்களிக்கச் செல்ல விசேட போக்குவரத்து வசதி தேவையானோர்க்கான விண்ணப்பம்

July 07, 2020


2020 பாராளுமன்ற தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாத உடற்றகுதியீனம் உற்றவர்கள் விசேட போக்குவரத்து வசதிகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மற்றும் விண்ணப்பம் பின்வருமாறு:


வாக்களிக்கச் செல்ல விசேட போக்குவரத்து வசதி தேவையானோர்க்கான விண்ணப்பம் வாக்களிக்கச் செல்ல விசேட போக்குவரத்து வசதி தேவையானோர்க்கான விண்ணப்பம் Reviewed by irumbuthirai on July 07, 2020 Rating: 5

வாக்களிப்பிற்கான நேரம் நீடிப்பு

July 06, 2020


எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான கால எல்லையை ஒரு மணி நேரத்தால் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் அதனடிப்படையில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பிற்கான நேரம் நீடிப்பு வாக்களிப்பிற்கான நேரம் நீடிப்பு Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

அஞ்சல் மூல வாக்களிப்பு உரிய தொழில் இடங்களில்..

July 06, 2020

2020 பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூலமாக வாக்களிப்பவர்களுக்கு உரிய தொழில் இடங்களில் வாக்களிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்துமாறு தெரிவத்தாட்சி அலுவலரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:



அஞ்சல் மூல வாக்களிப்பு உரிய தொழில் இடங்களில்.. அஞ்சல் மூல வாக்களிப்பு உரிய தொழில் இடங்களில்.. Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

June 27, 2020


சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் உள்ள விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம் Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

எம்.சி.சி. உடன்படிக்கையை அரசாங்கம் கைச்சாத்திடுமா?

June 18, 2020


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் எம்.சி.சி. உடன்படிக்கையை கைச்சாத்திட தயாராவதாக சிலர் தெரிவிக்கும் கூற்றுக்களில் எந்த வித உண்மையுமில்லையென்று உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 
அரசாங்க தகவல் தணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எம்.சி.சி. உடன்படிக்கையை அரசாங்கம் கைச்சாத்திடுமா? எம்.சி.சி. உடன்படிக்கையை அரசாங்கம் கைச்சாத்திடுமா? Reviewed by irumbuthirai on June 18, 2020 Rating: 5

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்..

June 16, 2020


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை மூன்று நாட்களுக்கு அதாவது இதற்கமைவாக எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 03 நாட்களுக்கு தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட செயலக அதிகாரிகள், தேர்தல் செயலக அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு பிரிவினர், சுகாதாரத் துறையினர் ஆகியோர் ஜூலை மாதம் 16 ஆம் திகதியும் 17 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். 
ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஜூலை மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் இந்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறும் வாக்காளர்கள் ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தாம் கடமையாற்றும் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல்கள் செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 

11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதற்கமைய, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஜூலை மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.. 
ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்த முகவரிக்கான தபால் நிலையத்திற்கு சென்று, தமது அடையாளத்தை உறுதி செய்து வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். தபால் மூல வாக்காளர்களுக்கான பட்டியல் எதிர்வரும் 18 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படவுள்ளது. 
தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 30 மற்றும் முதலாம், 2 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்.. தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்.. Reviewed by irumbuthirai on June 16, 2020 Rating: 5

வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு)

June 10, 2020


2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களுக்குரிய இலக்கங்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் பெயர், அதற்குரிய சின்னம் என்பன இங்கு தரப்படுகின்றன. 
வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் சிங்கள அகராதி அகர வரிசைப்படியே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த முழு விபரங்கள் அடங்கிய வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Name & Numbers

வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு) வேட்பாளர்களும் இலக்கங்களும் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

June 10, 2020

ஜூன் 20ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

June 08, 2020

இன்று (8) இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  
1. பொதுத் தேர்தலுக்கான புதிய திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்.  
2. வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் நாளை வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்படும்.  
3. தேர்தலுக்கான சுகாதார விதிமுறைகளை வர்த்தமானியில் பிரசுரிக்கும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரை கோரல்.
4. தேர்தலுக்கான நிதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொள்ளல்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 08, 2020 Rating: 5
Powered by Blogger.