ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்:



தற்போதுள்ள கொரோனா பரவல் நிலைமைகளை கருத்திற்கொண்டு இம்மாதம் 13, 14, 15 ஆகிய தினங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த பிரச்சார கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்புக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது ஜன பெரமுன அறிவித்தல் விடுத்துள்ளது. 
இதற்கான ஆலோசனையை கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ அவர்கள் வழங்கியதாக  அக்கட்சியின் செயலாளர் அந்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை அக்கட்சியில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் தமது கூட்டங்களையும் மக்கள் சந்திப்புகளையும் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அவ்வாறு சிறு சிறு சந்திப்புக்களை நடத்தும் பட்சத்தில் மிகத் தீவிரமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் படியும் அதில் கூறப்பட்டுள்ளது. 
இதனையடுத்து நாமல் ராஜபக்ச தனது கூட்டங்களை குறித்த தினங்களில் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக  தனது ட்விட்டர் செய்தியில் அறிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அறிவித்தலை கீழே காணலாம்.


ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்: ரத்து செய்யப்பட்டது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தேர்தல் பிரச்சாரங்கள்: Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.