பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: வெளியானது புதிய அறிவிப்பு:



பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக புதிய அறிவிப்பை கல்வியமைச்சு விடுத்துள்ளது. 
அந்த அறிவிப்பின்படி, 
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கருத்தானது தற்போது சமூக பரவலுக்கான எந்தவொரு சாத்தியமும் மிகக் குறைவு. ஆயினும், 05 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர் மாணவர்கள் சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்குரிய PCR அறிக்கைகள் எதிர்வரும் நாட்களிலேயே கிடைக்கவிருத்தல். மற்றும் பாடசாலை மாணவர்கள் மூவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருத்தல் போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.  
தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்கால விடுமுறை இன்னும் ஒரு வாரம் நீடிக்கப்படுகிறது. 

அந்தவகையில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் எதிர்வரும் 

27 ஆம் திகதி ஆகும். அதுவும் 11, 12, 13 ஆகிய தரங்களுக்கு மட்டுமே. 

பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் வரும் திங்கள் அதாவது ஆகஸ்ட் 10 ஆம் திகதியே ஏனைய தரங்களுக்கும் பாடசாலைகளை ஆரம்பித்தல் பொருத்தமாக கருதப்படுகிறது.

அதேபோன்று ராஜாங்கனை, வெலிகந்த ஆகிய பிரதேசங்களிலுள்ள வலயத்திற்குரிய எந்தவொரு பாடசாலையும் ஆகஸ்ட் 10 க்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டமாட்டாது. 

உயர்தரப் பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்குரிய புதிய திகதிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி அறிவிக்கப்படும். 

கல்வி அமைச்சின் முழுமையான அறிக்கையை கீழே காணலாம்.


பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: வெளியானது புதிய அறிவிப்பு: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல்: வெளியானது புதிய அறிவிப்பு: Reviewed by irumbuthirai on July 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.