எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை மூன்று நாட்களுக்கு அதாவது இதற்கமைவாக எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 03 நாட்களுக்கு தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
மாவட்ட செயலக அதிகாரிகள், தேர்தல் செயலக அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு பிரிவினர், சுகாதாரத் துறையினர் ஆகியோர் ஜூலை மாதம் 16 ஆம் திகதியும் 17 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஜூலை மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் இந்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறும் வாக்காளர்கள் ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தாம் கடமையாற்றும் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல்கள் செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும்
11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
அதற்கமைய, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஜூலை மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது..
ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்த முகவரிக்கான தபால் நிலையத்திற்கு சென்று, தமது அடையாளத்தை உறுதி செய்து வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.
தபால் மூல வாக்காளர்களுக்கான பட்டியல் எதிர்வரும் 18 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படவுள்ளது.
தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 30 மற்றும் முதலாம், 2 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவித்தல்கள்..
Reviewed by irumbuthirai
on
June 16, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
June 16, 2020
Rating:

No comments: