எதிர்வரும் 25 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூ கிடைக்குமா?



தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்றைய தினம் பிரதமர் தலைமையில் தோட்ட முதலாளிமார் சம்மேளம் இ.தொ.கா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான ரூபா 700க்கு மேலதிகமாக விற்பனை பங்கு ((Price share Supplement) உற்பத்திக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு (Productivity Incentive) மற்றும் வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவு (Attendance Incentive) அடங்களாக தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜூவன் தொண்டமான் தோட்ட முதலாளிமார் சம்மேளத்திடம் கோரிக்கையை முன்;வைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.த.தி.

எதிர்வரும் 25 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூ கிடைக்குமா? எதிர்வரும் 25 ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூ கிடைக்குமா? Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.