நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ...


தேர்தல்களின் போது வாக்களிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்குபவவர்களுக்கு வாக்களிக்க கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்க பிரதமர் உடன்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோர்,  வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர், 
சிறைக்கைதிகள் போன்றோருக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகிறது. 
இது மாத்திரமன்றி சுகாதார ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் நாளாந்தம் தமது கடமைகளை செய்ய வேண்டி இருப்பதனால் வாக்களிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது.  
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய திட்டம் வகுக்கப்பபடவிருப்பதாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் தேர்தல் சட்டத்தில் மாற்றம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ... நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.