திருப்பி ஒப்படைத்த இலங்கை.... வாய்ப்பை பெற்றுக் கொண்ட அயர்லாந்து...


கடந்த வருடம் (2020) நடைபெற்ற திருமதி உலக அழகுராணி (Mrs World) போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி தனது பட்டத்தை திருப்பி ஒப்படைத்தார். இதனை திருமதி உலக அழகுராணி அமைப்பு உறுதி செய்துள்ளது. 
இதனைத் தொடர்ந்து குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைன்டர் Mrs World - 2020 அழகுராணியாக மகுடம் சூட்டப்பட்ட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற திருமதி இலங்கை (Mrs Sri Lanka) போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா விவாகரத்தானவர் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறி போட்டி முடிவையும் மாற்றினார் கரோலின் ஜூரி. 
பின்னர் குறித்த விடயம் பொய்யென தெரியவந்ததை தொடர்ந்து கரோலின் ஜூரி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவருக்கு ஏற்பட்ட 
எதிர்ப்பலைகளை தொடர்ந்து அவர் குறித்த பட்டத்தை மீள ஒப்படைப்பதாக அறிவித்தார். 
அந்த அடிப்படையிலேயே அயர்லாந்தை சேர்ந்தவர் தற்போது மகுடம் சூட்டப்பட்ட உள்ளார். 
இதேவேளை குறித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததன் காரணமாக ஏற்பாட்டுக் குழுவால் புஷ்பிகா டி சில்வா மீண்டும் Mrs Sri Lanka -2021 மகுடம் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருப்பி ஒப்படைத்த இலங்கை.... வாய்ப்பை பெற்றுக் கொண்ட அயர்லாந்து... திருப்பி ஒப்படைத்த இலங்கை.... வாய்ப்பை பெற்றுக் கொண்ட அயர்லாந்து... Reviewed by irumbuthirai on April 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.