தேசிய பாடசாலைகளை 1000ஐ விட அதிகரிக்க அரசு தீர்மானம்: முதல் கட்டம் இம்மாதம் 29ஆம் திகதி:


நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  
நாடு பூராகவும் தற்போது 373 தேசிய பாடசாலைகள் உள்ளன. இதன் பிரகாரம் புதிதாக 797 தேசிய பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன. 
இதன் முதல் வேலைத்திட்டம் எதிர்வரும் 29ம் திகதி சியம்பலாண்டுவ மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது முதல் கட்டத்தில் 125 பாடசாலைகள், 
தேசிய பாடசாலைக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. 
இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளின் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 
தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் சகல பாடசாலைகளுக்கும் 'இணையத்தளம்', 'ஸ்மாட்' வகுப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுமென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
தேசிய பாடசாலைகளை 1000ஐ விட அதிகரிக்க அரசு தீர்மானம்: முதல் கட்டம் இம்மாதம் 29ஆம் திகதி: தேசிய பாடசாலைகளை 1000ஐ விட அதிகரிக்க அரசு தீர்மானம்: முதல் கட்டம் இம்மாதம் 29ஆம் திகதி: Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.