கொரோனா ஒழிப்புக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பாக வெளியான அறிக்கை



பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா வைரசு தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை தொடர்பாக அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 

அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு 
 ஊடக அறிக்கை 

2020.03.29
நாலக கலுவேவ அவர்கள்,
பணிப்பாளர் நாயகம்,
அரசாங்க தகவல் திணைக்களம்

 தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா வைரசு தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு இணைத்துக் கொள்ளல் 

 தற்போது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் சேவைக்காக சமூகமளித்துள்ள பதிவுசெய்துள்ள பட்டதாரி பயிற்சியாளர்களில் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு மே மாதம் வரையில் தாமதம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சின் கோரிக்கைக்கு அமைய கொரோனா வைரசு நோய் தொற்று நிலையை கட்டுப்படுத்துவதில் இவர்களின் ஒத்துழைப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இந்த காரியாலயங்களுக்கு தற்காலிகமாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதினால் இவர்களுக்கு சேவைக்கு சமூகமளிப்பதற்கு சிரமம் என்பதினால் நாளைய (2020.03.30) தினத்தில் சுகாதார வைத்திய அதிகாரி ஃ பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியமல்ல என்பதுடன் இது தொடர்பில் குறிப்பிட்ட காலத்தில் அறிவிக்கப்படும்.

எஸ். ஹெட்டியாராச்சி 
செயலாளர் 
அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு

(அ.த.தி.)

கொரோனா ஒழிப்புக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பாக வெளியான அறிக்கை கொரோனா ஒழிப்புக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பாக வெளியான அறிக்கை Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.