(2.4.2026 அன்று வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்)
நாட்டின் தற்போதைய நீர்முகாமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் - நினோ நிலைமை மற்றும் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் முகாமைத்துவம் குறித்த இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு எவ்வித நியாயமான அடிப்படையுமில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2026ம் ஆண்டு முதல் பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை இணைத்துக் கொள்வது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம், தமது தேசிய உயர் செயல்திறன் மையத்தின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ரையான் வான் நீகெர்க்கையும் (Ryan van Niekerk), களத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜோர்டன் கிரெகரியையும் (Jordan Gregory) நியமித்துள்ளது.
இவர்கள் இருவரும் ஆண்கள் தேசிய அணி உட்பட அனைத்து தேசிய அணிகளினதும் குறிப்பிட்ட துறைகளை மேற்பார்வை செய்யவுள்ளனர்.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் (02) அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இன்று (02) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத்தை சுழற்சி முறையில் இடைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடர் உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கு வசதியாக, தமக்கு "தடை இல்லா சான்றிதழ்" கடிதத்தை வழங்குமாறு சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02) காலை காலமானார்.
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது என்றும், எந்த நிலையிலும் எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் விதிக்கப்படக்கூடாது என்றும், தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான விஷயங்களைக் கையாளும்போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Previous:
News Updates in Tamil (2.4.2026)
Reviewed by Irumbu Thirai News
on
April 02, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
April 02, 2026
Rating:

No comments: