News Updates in Tamil (31.3.2026)


( 31.3.2026 அன்று வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்...)

பெரும்பாலான பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 73 நீர்த்தேக்கங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் சராசரியாக 75% இற்கும் அதிகமாகவே உள்ளது. எனவே, இந்த போகத்திற்கான நீரை வழங்க முடியும். குடிநீர் தேவைக்காக ஆறுகளில் இருந்து நீர் பெற்றுக்கொள்ளப்படும் இடங்களில் உவர் நீர் உட்புகும் அபாயம் காணப்படலாம். குறிப்பாக நில்வலா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளில் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நீரை மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என நீர்ப்பாானத் திணைக்களத்தின் (நீரியல் மற்றும் இடர் முகாமை) பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார். 



காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தினால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது 



மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு, இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மூடிய அறைக்குள் நடைபெற்றது. மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கடத்தி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றுக்குள் வீசிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பு, இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மூடிய அறைக்குள் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பில் காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் அவரது 22 வயதுடைய சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இரு நகைக்கடை உரிமையாளர்களும் மற்றும் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொடுத்த முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட ஆறு பேர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களிடமிருந்து இரண்டு முச்சக்கவரண்டிகள், ஒரு கார், கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டனர். விசாரணைகள் தொடர்கின்றன. 



1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற நபர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர் நீதிமன்றம் இன்று (31) ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. 



மார்ச் மாதத்தின் கடந்த 29 நாட்களில் 175,661 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது 



ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 



மீதொட்டமுல்ல "பொதுவில் கும்புர" எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர சபை மற்றும் கொலன்னாவை நகர சபை ஆகியன அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எவ்வாறாயினும், குப்பைமேடு சரிந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதிவாதிகளால் ஏற்கனவே 908,314,020.70 ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் கீழ் மீண்டும் இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்போவதில்லை என நீதிமன்று அறிவித்தது. 



மே 10ஆம் திகதியாகும் போது சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். கடந்த 13 வருடங்களாக இவ்வாறான முறையான நடைமுறை ஒன்று இடம்பெறவில்லை. இடமாற்றச் சபைகளில் இருந்ததாகக் கூறிக்கொண்டு, அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சில இடங்களில் 13 முதல் 17 வருடங்கள் வரை தங்கியிருந்தனர். இந்த முறையான இடமாற்றச் செயல்பாட்டின் மூலம், குறிப்பிட்ட சங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பல வைத்தியர்களுக்கு நீதி கிடைப்பதாகவும் இதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 



முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர்கள் இருவர், சதொச நிறுவனத்தின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளர் மற்றும் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் ஆகியோருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 



நாளை (01) அதாவது ஏப்ரல் 01ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 



இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 



மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்காக எவ்வித மின்சாரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 



சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 



கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்க வீதமானது 2026 பெப்ரவரி மாதத்திலிருந்த 1.6% இலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 2.2% ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், உணவுப் பணவீக்கமானது 2026 பெப்ரவரியில் நிலவிய 0.2% இலிருந்து மார்ச் மாதத்தில் 0.7% ஆகவும், உணவல்லாத தொகுதியின் பணவீக்கம் 2.3% இலிருந்து 2.9% ஆகவும் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 



அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, 2026 மார்ச் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 



நாட்டில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைத் தணிக்கும் நடவடிக்கையாக, பொன்னி சம்பா உள்ளிட்ட அதேபோன்ற அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 



ஹட்டன் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட மூன்று மாணவர்களையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை வேரலவத்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 



இன்று (31) நள்ளிரவு முதல் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதன் காரணமாகவே, இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 



சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினத்திலிருந்து சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மத்திய மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 



அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்களது எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றிலொன்றுக்கும் அதிகமான அளவில் தானாக முன்வந்து குறைத்துக் கொண்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

- x -


Previous;
News Updates in Tamil (31.3.2026) News Updates in Tamil (31.3.2026) Reviewed by Irumbu Thirai News on March 31, 2026 Rating: 5

No comments:

Powered by Blogger.