இந்திய அரசினால் இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் CEWET புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
இந்த புலமைப்பரிசில்கள் க.பொ.த உயர்தரம் (A/L), பட்டப்படிப்புகள் மற்றும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் / தொழில்நுட்பக் கல்வி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
தகைமை:
க.பொ.த சாதாரண தரத்தில் குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன் தேர்ச்சி அல்லது உயர்தரம் சித்தி
வயது:
25 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை பெறும் முறைகள்:
1. Download Here
அல்லது
2. கொழும்பு மற்றும் கண்டி இந்திய உயர் ஸ்தானிகராலயங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
▪️ பிறப்புச் சான்றிதழ் நகல்
▪️க.பொ.த சாதாரண/உயர்தர பெறுபேறு சான்றிதழ்
▪️ பெற்றோரின் தொழிலை உறுதிப்படுத்தும் தோட்ட மேற்பார்வையாளர் சான்று
▪️ பெற்றோரின் சமீபத்திய சம்பளச் சீட்டு
▪️விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்
விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Honorary Secretary,
Ceylon Estate Workers Education Trust (CEWET)
C/o High Commission of India,
P.O. Box 882,
Galle Road,
Colombo-03
விண்ணப்ப முடிவு திகதி:
2026 ஏப்ரல் 28.
Indian Scholarship for Estate Worker's Children- 2026
Reviewed by Irumbu Thirai News
on
March 29, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
March 29, 2026
Rating:
.jpeg)

No comments: